பரத்தை கூற்று : வேங்கட ரமணன்

பரத்தை கூற்று பற்றி பதிவர் வேங்கட ரமணன் எழுதிய‌ மின்னஞ்சல் இங்கே:

*******

அன்புள்ள சரவணகார்த்திகேயன்,

தங்களின் பரத்தை கூற்றை படிக்க நேர்ந்தது...

நேற்றைய கனவில், தலைவிரிகோல நிர்வாண பரத்தை கூட்டமொன்று மாரடித்து சூழ்ந்து கொள்ள, நடுவில் செய்வதறியாது விக்கித்து நின்றனர் கலியுக ராமர்கள் பலர்!!!

முதியோர் இல்லத்திற்கு ஒரு வேளை உணவளித்து அவர்கள் வயிறார பார்த்திருக்கிறேன்! கண் தெரியா பாடகர்களுக்கு சில நாணயங்கள் இட்டு செவிகுளிர கண்டிருக்கிறேன்!! அநாதை குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், மனநிலை பேதலித்தோர் என பலரும் மகிழப் பார்த்திருக்கிறேன்... பரத்தை கூற்றை படித்த பின்னர், ஓர் இரவேனும், ஒரு தமிழ் தெரிந்த விலைமகளுக்கேனும் உங்களின் கவிதைகளை வாசித்து காட்டும் ஆவலொன்று நேற்று புதிதாய் பிறந்தது...

தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் உங்கள் புத்தகத்தை படித்து என் தவறு !
இரு நாட்களாகியும் தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை...

பரத்தை கூற்று - மிரட்டல்!
வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ரமணன்

No comments: