பரத்தை கூற்று : வருண்

பரத்தை கூற்று பற்றி பதிவர் வருண் அவர்களின் விமர்சனம் இது :

*******

http://timeforsomelove.blogspot.com/2010/10/blog-post_17.html

*******

Sunday 17 October 2010 Posted by வருண் at 8:03 AM

“பரத்தைக்கூற்று” -ஆம்பளைகளின் அசிங்கக்கூத்து!

பரத்தைக்கூற்று பற்றி சில அசிங்கக்கவிதைகளுடன் மாதவராஜின் விமர்சனம் படிக்கும்போது எரிச்சலும் கோபமும் அருவருப்பும்தான் வந்தது. கவிதைகளை ரசிக்கவோ அதைப்படித்து உருகவோ முடியவில்லை! ஒரு பின்னூட்டம் போட்டேன். இன்னும் திருப்தியில்லை!

“பரத்தைக்கூற்று” என்றதும் அதைப்பற்றி எழுதியது லீனா மணிமேகலையா? இல்லை ஒரு தமிழச்சியா? இல்லை இன்னொரு தமிழ்ப் பெண்ணா? இல்லைனா ண்களால் வஞ்சிக்கப் பட்ட இன்னொரு பரத்தையா கண்ணீர் வடிக்கிறாள்? நு பார்த்தால் ஏமாற்றம்தான்!

“பரத்தைக்கூற்று” என்று பரத்தைகளின் உணர்வுகளை உள்ளப்பூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு கண்ணீர் வடிப்பவன் போல கவிதை எழுதுபவர்களும் பரத்தையை உருவாக்கி, பரத்தையிடம் படுத்து எந்திரிக்கும், பரத்தையை கூட்டிக்கொடுக்கும் அதே ஆண்கள்தான்.

“பிரசவ வலி” பத்தி தாய்தான் சொல்லனும்! “பீரியேட்ஸ்” வலி பத்தி பெண்தான் பேசனும்! “பரத்தைக்கூற்று” பற்றி பேசவேண்டியது பெண் இனம்! கசக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று கசக்கப்பட்டவள் சொல்லனும். கசக்குகிறவர்கள் சொல்லக்கூடாது! பரத்தையை உருவாக்கி பரத்தையை அனுபவிக்கும் அசிங்கமான ஆண்கள் இனம் அல்ல இங்கே கவிதை பாட வேண்டியது!

ஒரு ஆண் பரத்தையின் உணர்வைப்பற்றி கற்பனையில் கவிதை என்கிற தமிழ் நயத்துடன் உருகி, உணர்வுகளைக்கொட்டி எழுதும்போது ஆண்களின் “பர்வேர்ஷன்”தான் எனக்குத் தெரிகிறது. அந்த ஆணின் கண்ணீர் தெரியவில்லை! கசக்கி எறியப்பட்டவள் பெண்! இங்கே பரத்தைக் கூற்று அசிங்கக் கவிதையிலும் ஆண்களால் இன்னும் தமிழ்நயத்துடன் கவிதை வளத்துடன் கசக்கப்படுகிறாள்- கவிஞர்களின் வற்றாத நீலிக்கண்ணீருடன்!

எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று சொல்லட்டும்! யார்? பரத்தையை உடலால் மற்றும் எழுத்தால் கசக்கும் ஆண்கள் அல்ல! இந்தக்கவிதைகளில் கசக்கப்பட்டிருக்கிற, இந்தக் கவிதை அவர்கள் கண்ணீரை துடைப்பதாகச் சொல்லும் சில பரத்தைகள்! சொல்வார்களா?

*******

"ரிலாக்ஸ் ப்ளீஸ்" - இது வருண் அவர்களின் வலைப்பதிவின் பெயரும் கூட!

Comments

வலைஞன் said…
விநோதமாக இருக்கிறது உங்கள் வாதம் Mr.வருண்!
உங்கள் கூற்றுப்படி ஆண்கள் அனைவரும் பரத்தை தொடர்பு உள்ளவர்கள்!இது முதல் தவறு.

உங்கள் கூற்றுப்படி கஷ்டம் அனுபவிப்பவர்களே அதைப பற்றி பேச வேண்டும்!அதாவது இங்கு யாரும் இலங்கை தமிழர்கள் படும் இன்னல பற்றி பேசக்கூடாது!

உங்கள் கூற்றுப்படி பெண்விடுதலைக்காக போராடிய பாரதி,ராஜா ராம்மோகன்ராய் ஏனையோர் செய்தது தவறு!

தயவுசெய்து போராளிகளையும்,கலைஞர்களையும்,இலக்கியவாதிகளையும் gender அடிப்படையில் பாகுபாடு செய்யாதீர்கள்
நன்றி

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்