ஆனந்த விகடனில்...

இந்த வார ஆனந்த விகடன் (7.7.10 தேதியிட்ட இதழ்) பக்கம் 110ல் வலைபாயுதே என்ற தலைப்பில் சில‌ (இங்கு 'சில' என்பத‌ற்குப் பதிலாக‌ 'பிற' என்று போடலாமா என யோசித்துக் கைவிட்டேன் - காரணம் திருக்குறளின் பதின்மூன்றாம் அதிகாரம்) இந்தியப் பிரபலங்களின் ட்வீட்களோடு அடியேனின் ட்வீட்டும் இடம் பெற்றுள்ளதாக அறிகிறேன்.


இன்னும் நான் பார்க்கவில்லை.

உடன் இடம் பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஷாரூக் கான், செல்வராகவன், சேரன், அசின், ஷ்ருதி ஹாசன், ஷெர்லின் சோப்ரா, நமீதா, சிம்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள். முதலில் எனக்கு தகவல் சொன்ன சான் பிரான்சிஸ்கோ ஆனந்த் அவர்களுக்கு நன்றிகள்.

இதழ் தற்போது கடைகளில் கிடைக்கிறது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!

Comments

Anonymous said…
வாழ்த்துகள்!!! விகடனுக்கு நல்ல விளம்பரம் !!!
viki said…
ஆளாளுக்கு ஒரு வலைப்பூ வைத்துகொண்டு தன்னைத்தானே எழுத்தாளன் என கூறிக்கொள்ளும் நேரத்தில் (அடியேன் உட்பட) இணையத்தை தாண்டியும் உமது பெயர் பிரபலமாவது மிகப்பெரும் விஷயம்.
அப்புறம் சந்திராயன் புத்தகம்,அகநாழிகையில் கட்டுரை,இப்போது விகடன். வாசகர்களுக்கு ட்ரீட் எப்போ ;)
@viki
எழுதுவதே ட்ரீட் தானே ;‍-)
viki said…
ஹி ஹி ஹி நல்ல மழுப்பல் ..
=))

(just kidding)
ஆனந்த் said…
நன்றி.

ஆனந்த்
சான் பிரான்சிஸ்கோ
பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகியடி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்