YET ANOTHER கௌதம் FILM
விண்ணைத் தாண்டி வருவாயா.
பெரிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லை - மோசமான திரைக்கதை கொண்ட __________ (கோடிட்ட இடத்தை இடுகையின் தலைப்பு கொண்டு நிரப்பிக் கொள்ளவும்). கௌதம் எடுத்ததிலேயே மின்னலேவுக்கு அடுத்த படியான அடாசு, டப்பா, பாடாவதி, இன்னபிற எல்லாம் இப்படம் தான். சொன்னாலும் கேட்க மாட்டீர்கள் - அந்தக் கருமத்தை நீங்களே திரையரங்கிலோ, கள்ளப்பிரதியிலோ கண்டுணர்ந்து கொள்ளுங்கள்.
சும்மா சொல்லக்கூடாது. நுட்பமாய்த் திட்டமிட்டு கழுத்தறுவை செய்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். மொக்கைப் படம் பார்த்து நீண்ட நாளாயிற்று என்கிற குறையை நிவர்த்திக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் மனிதர். ஏ.ஆர்.ரஹ்மான், மனோஜ் பரம்ஹம்ஸா போன்ற பெரும்தலைகளும் பெயர் சொல்லும் படி படத்தில் ஒன்றும் செய்யவில்லை. வசனங்கள் மட்டும் ஆங்காங்கே புன்னகைக்க வைக்கின்றன.
கௌதமுக்கு சரியாய் Plot எழுத வராது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. கூச்சம் பாராது திரைக்கதை தெரிந்தவர்கள் யாரையாவது நல்ல சம்பளம் தந்து கூட வைத்துக் கொள்வது உத்தமம். அவரவர்க்கு எது கை வருகிறதோ அதை மட்டும் செய்வது தான் புத்திசாலித்தனம். Makingல் மட்டும் ஜிம்மிக்ஸ் காட்டுவதெல்லாம் ரொம்ப நாளைக்கு வேலைக்கு ஆகாது. தமிழ் சினிமா எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.
கௌதம், ரெட் ஜெயின்ட் தயாரித்தால் / விநியோகித்தால் எப்பேர்ப்பட்ட இயக்குநரின் படமும் விளங்காது என்கிற சித்தாந்தத்துக்கு நீங்களும் தப்பவில்லை (முன்பு தரணி, கே.எஸ்.ரவிக்குமார்). நீங்கள் சொல்ல முனைந்திருக்கும் அதே நடுத்தர வர்க்கத்துக் காதலை பத்து வருடங்களுக்கு முன்பே மிக மிக எளிமையாக ஆனால் மிக மிக சுவாரசியமாக ஒரு காவியம் போல் சொன்ன படம் மணிரத்னத்தின் அலைபாயுதே.
அப்படத்தை அதன் டிவிடி கிடைத்தால் ஒரு முறைக்கு இருமுறை போட்டு, ஏதாவது புரிகிறாதா எனப் பாருங்கள். படம் எடுப்பது அத்தனை கடினமானதல்ல என்பதைப் போல் திரைக்கதை எழுதுவது அத்தனை சுலபமானதல்ல என்பது புரிவது தான் நான் சொல்ல வருவதன் ஆரம்பபுள்ளி. அது வரை நீங்கள் படமெடுப்பதை தற்காலிகமாய் நிறுத்தி வைத்தாலும் யாருக்கும் பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை. யோசியுங்கள்.
கௌதமின் முந்தைய படங்களை ஒப்பிடும் போது ஒளிப்பதிவும் சுமார் தான். ஆனால் வாரணம் ஆயிரம் போல், ஒளிப்பதிவில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கும் சாத்தியக்கூறு நிரம்பிய கதைக்களம் தான் - மனோஜ் அல்லது கௌதம் அல்லது இருவருமே கோட்டை விட்டிருக்கிறார்கள். காதல் காட்சிகளிலும் வா.ஆ. அளவுக்கு சுவை இல்லை. காட்சியமைப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, வசனம் என பல காரணங்கள் சொல்லலாம்.
சிம்பு வேஸ்ட். கால் முறிந்த கோழி மாதிரி இருக்கிறார். நன்றாக செய்திருக்கிறார் என்று சொல்லும் படம் பார்த்த சில பன்னாடைகளின் பாராட்டை மட்டும் நம்பி விடாதீர்கள். மற்றபடி, அவர்கள் என்ன காரணத்தினால் அந்த அண்டப்புளுகை மேற்கொள்கிறார்கள் என்கிற தர்க்கம் தான் விளங்கவில்லை. மன்மதன், தொட்டி ஜெயா போன்ற அவரது இதற்கு முந்தைய படிநிலைகளையே அவரால் தொட முடியவில்லை.
த்ரிஷாவும் வழக்கம் போல் அப்படியே. தவிர, அவரிடம் அவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும் என்பது வேறு விஷயம். நளியின் உடைத்தேர்வில் பல காட்சிகளில் ஓர் இளமையான கிழவியை கண்முன் நிறுத்துகிறார். சின்மயியின் குரலும் அவரது இப்பாத்திரத்திற்கு பொருந்தி வரவில்லை. கணேஷ் மட்டும் மிகையற்ற நடிப்பினாலும், வசனக்கொச்சையினாலும் கொஞ்சம் தேறுகிறார். கிட்டி, உமா எல்லாம் பாவம்.
படத்தின் ஆதாரக்கதையின் வலுவில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு (காதலிக்கிறாள்; மிக ஆழமாய்க் காதலிக்கிறாள்; ஆனால் சாதி, மதம், வயது, பணம் அல்லது அந்தஸ்து ஆகியவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதைக் காரணம் காட்டி எதிர்க்கும் அப்பா, அம்மா, ஆட்டுக்குட்டி மற்றும் இதர வகையறாக்களுக்காக காதலை நிராகரித்து காதலனைத் துறக்கிறாள்) மட்டும் இதைச் சொல்கிறேன்.
மேற்குறிப்பிட்ட சில பெர்ம்யூட்டேஷன்கள் கொண்ட இரண்டு வெவ்வேறு நண்பர்களின் நேரடி நிஜக்கதைகளை அறிவேன். அந்த இருவருமே சிம்பு மாதிரி தான் இன்று அம்போ என்று நிற்கிறார்கள். அதை விட முக்கியமாய், மிக நுட்பமானதொரு நெருக்கத்தில் அப்பெண்களின் உளவியலை நான் புரிந்திருக்கிறேன். இதைக் காட்சிப்படுத்தியிருப்பது ஒன்று தான் இப்படத்தைப் பொறுத்தவரை கௌதமின் வெற்றி.
இறுதியாய்க் குறிப்பிட விரும்பும் மற்றொரு விஷயம் படத்தின் இசை. ஹோசன்னா பாடல் தவிர மற்ற பாடல்கள் யாவுமே பலவீனமானவை. பின்னணி இசையும் அப்படியே. ஆஸ்கர், கிராமி பெற்ற பின்பு அவரது இசையை விமர்சிப்பதை ஏதோ தேசத்துரோகம் போல் பார்க்கிறார்கள். நான் சொல்கிறேன் : "இந்தப் படத்தின் இசை மகா குப்பை" - நேர்மை உள்ள எவனாவது ஒருவன் என்னோடு வாதாடலாம்.
கல்லூரி இளநிலை வாசிக்கும் ஊர்க்கார பெட்டைகளுக்கு படம் பிடிக்கக்கூடும்!
பின்குறிப்பு:
வி.தா.வ. திரைப்படம் பார்த்த பரவசத்தில் கௌ.வா.மே.வுக்கு இயக்குநர் சிகரம் என அறியப்படும் கே.பி. எழுதிய கடிதம் இங்கே. வயதானாலே கொஞ்சம் போல் மறை கழன்று விடும் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. கூடவே வெயில் காலம் வேறு போட்டுத் தாக்க ஆரம்பித்திருக்கிறது. கேட்கவா வேண்டும். இப்பொழுதே இப்படியென்றால், அக்னி நட்சத்திரத்தின் போதெல்லாம்?

Comments
ரொம்ப நாள் ஆகி விட்டது மொக்கையா படம் பார்த்து! கடைசிப் படம் அலை!
வ.ஆ ரமே எனக்கு மொக்கையா தான் இருந்தது! படத்தை பார்த்தததுக்கு அப்புறம் காதல் இவ்வளவு "Boring" னு தான் தோனியது! "Innovative Theatre la" படம் பார்த்த அத்தனை பேரும் கௌதம் மேனனுக்குனு "adjust" பண்ணிக்கிட்டு தான் பார்த்துக்கிட்டு இருந்தானுங்க! "Elite Crowds are cowards"! நானே இந்த கதை களத்துக்கு "better screen play" எழுத முடியும்னு நம்பிக்கை (கொஞ்சம் ஆபத்தானதுதான் ;)) கொடுத்த வகையில் என்னக்கு ஆதாயமே! நல்லா பண்ணி இருந்த ஒரு "character" னா சிம்பு தோழரா வர்ரவருதான்! simply superb. எப்பொழுதுதான் காக்கக் காக்க பாண்டியா மாதிரி பேசும் "character" களை, குறைந்த பட்சம் "character" பேசுவதை தவிர்க போகிறாரோ! even simbu's sister talk like that!
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் தான் என்னுடைய மிகப் பெரிய எதிர்பார்ப்பு! ஏமாற்றம் தான் மிசம்! பாடல்கள் பலவீனமானவைங்கிறது முதல் தடவைய கேட்கிறவர்களுக்கு தோன்றுகின்ற நியாயமான அபிப்பிரயாணமே! "but 3 songs are best of a.r rahman!"(audio). சில வசனங்கள் மிகவும் அருமை! என்னை பொருத்தவரை சிம்புவின் மீதான விமர்சனம்(நல்ல) வரவேற்க தக்கதே! sometimes you got show of your kindness! அந்த இரண்டு நண்பர்களின் பெயர்களை அறிய ஆவலாய் இருக்கிறது! if you wish so, send by twitter direct message!
பின்குறிப்பு: வயதானவர்களை (சாதித்த) விமர்சிப்பது வறுமையில் இருப்பவர்களைப் பார்த்து நகைப்பதர்க்கு நிகர்! so வேண்டாம்!
It is your personal prerogative to like or hate a movie and write about it.. But I found this particular post too offensive.. especially the line
படம் பார்த்த சில பன்னாடைகளின் பாராட்டை மட்டும் நம்பி விடாதீர்கள்
So if somebody doesnt agree with u, he is a pannadai , is it? and that line about KB is too much..
Any kind of review should first try to understand the movie and its intentions.. Only the Critcisms that comes after understanding the movies are valid..
This movie was not supposed to be breezy entretainer like Alaipayudhey or Dum Dum dum.. It intense stuff.. I agree that it provides less entertainement than above said films.. But it makes up for it in its characterisation and maturity.. It requires more patience and its more rewarding..
Again as i said u are entitled to have a opininon and express it.. But even if u cannot acknowledge other's views dont write demeaning things about them..
taste differs and views differ. ....
if someone doesn't match with your view or taste you should not talk as if they are not eligible to be alive in this world....
We are now into "www.writercsk.com", which is solely owned my Mr.CSK
He is 101% authorized to express his views completly in his own blog. It is up to us (Visitors) to take it/reject. So, try not to post ur offensive blogs on other's blog. Please post ur views on ur own blog. No one will fret about it.
And coming to CSK's line -->
நான் சொல்கிறேன் : "இந்தப் படத்தின் இசை மகா குப்பை" - நேர்மை உள்ள எவனாவது ஒருவன் என்னோடு வாதாடலாம்.
I'm ready to meet at loggerheads. I would strongly say that A.R.R's music is really nice and perfectly suits this stories theme (love).
My point is that, don't keep "OSCAR" in mind while listening to A.R.R's songs.
ஆயிரத்தில் ஒருவன் போன்ற உன்னுடைய முந்தைய review வையே உன்னால் தொட முடியவில்லை :)
What we said is that he should not abuse those who did like the movie(especially that pannadai comment).. Afterall this is a blog which is open for people to read and discuss.. i am not reading into his personal diary and saying this.. There is certain etiquette to be maintained while writing a blog... If it is my blog and I'm **101% authorized to express my views** , it doesnt mean I can abuse Dinesh in my blog , does it???
And just curious, How do you find the post inoffensive and our comments offensive when it is exact opposite???
I hear songs for atleast 2 hours a day for past 5 years.. Everytime Rahman's songs release, I will first like one or two songs very much like everyone else.. (like Hosanna this time.. ) These are the songs that have instant hit feel.. Everybody likes them.. And hence they advertise these songs first to give a kick start.. People start saying just one song is good and then they move to another album..
But, believe me, if you want to hear real good songs, hold on.. Keep listening the other songs.. A magic will occur.. every time you will like the songs more and more.. And surprisingly, the song which you first liked may not be so good after hearing so many times.. the song you thought boring would be your favorite song and forever it will be your favorite.. But, real good songs touch your soul after hearing for so many times..
For example, in Mudhalvan, everybody would have liked shakalakka on first time but now Kuruku siruthavale OR Uppu Karuvaadu sounds great..!
It happens every time with Rahman's albums..
After hearing VTV songs for 2 months, atleast 2 times a day, i think this is my favorite list.. (from best to least good)..
Mannipaayaa
Omana Penne
Aaromale
hosanna
kannukul
anbil
vinnai thaandi
AND I AM SURE THIS LIST ALSO WILL CHANGE WITH TIME..
Probably, people need to change their way of listening to songs, if they want to feel the song completely. Keep listening.
அதுதான் சரி, பின்னணி இசையில் ரொம்பவே படுத்தியிருக்கிறார் A.R.R. as usual.
அருமையான விமர்சனம். இந்த அறுவை படத்தை ஏன் எல்லோரும் அப்படிப் புகழ்கிறார்கள் என்று எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்
Background music is not upto the mark..
But songs are too gud.
I'm agree with the Balaji K , except the Illayaraja stuff
//
பெரிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லை - மோசமான திரைக்கதை கொண்ட __________ (கோடிட்ட இடத்தை இடுகையின் தலைப்பு கொண்டு நிரப்பிக் கொள்ளவும்). //
ரைட்டர் சிஎஸ்கே டச்! புச்!
BTW, I too didnt like the songs at the first listen but it gradually grows on me still.
நண்பா, நானும் பெரிய ஒரு எதிர்பார்ப்புடன் இந்த படத்தை பார்க்க சென்றேன். படம் ரொம்ப மொக்கைய இருக்கு. ஆனால், நீங்கள் சொன்னதை போல் சில பன்னாடைகள் இந்த படத்தை ரொம்பவே புகழ்ந்தார்கள். அதனால் எனக்கு எனது ரசனை மீது சந்தேகம் வந்துவிட்டது.
உங்கள் கருத்தை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்.
பின் குறிப்பு: கிழட்டு கே. பி. யை நீங்கள் இன்னும் கொஞ்சம் திட்டி இருக்கலாம். கே. பி. ஒரு காலத்தில் பெரிய படைப்பாளிதான். ஆனால் இப்போ அவருக்கு மூளை கெட்டுவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள். நல்ல ஒரு வைத்தியரை பார்ப்பது உசிதம்.