படித்தது / பிடித்தது - 68

எழுதிய ‘ ந’ வின் நுனியில்
ஒரு அலகினைச் செருகினாள்
பக்கவாட்டு நெளிவுகளில்
சில சிறகுகளை பொதிந்துவிட்டு
சுழியின் கீழே வாலிலிழுத்தாள்
கொண்டுவந்த கடுகினை
மையத்தில் ஒட்டி முடித்தபொழுது
ஒருமுறை உடல் சிலும்பி
ந பறக்கிறது
பிறகான எனது ந விலெல்லாம்
ஒரு காகம் கரைகிறது

- பா.திருச்செந்தாழை

நன்றி: தூறல் கவிதை

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்