சில‌ சிந்தனைகள் - 5

QUICK GUN MURUGAN படம் தமிழில் பார்த்தேன். நன்றாகத் தான் இருந்தது. வசன‌ங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கும் நகைச்சுவை தான் படத்தின் உயிர்நாடி. நாசர், ச‌ண்முகராஜன், ரம்பா, ராஜு சுந்தரம் என்று பாதிக்கு மேல் தமிழ் முகங்கள். பார்க்கலாம், I say!

^^^^^^^^^^^^^^^^^
தயிர் சாதத்துக்கு தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டிருக்கிறீர்களா? சரி, அதை விடுங்கள், இந்த காம்பினேஷன்களை யோசித்துப் பாருங்கள்: கமல்ஹாசன் - பேரரசு, ரஜினிகாந்த் - தங்கர்பச்சான், விஜய்காந்த் - ஷ‌ங்கர், விஜய் - பாலா, சிம்பு - பாரதிராஜா. Incompatible Magic Value!

^^^^^^^^^^^^^^^^^
தமிழில் வீடியோ ஜாக்கிகளில் எனக்குப் பிடித்தவர் ரியா (மற்றபடி வெகுசனங்களுக்குப் பிடித்தமான திவ்யா, மஹாலஷ்மி போன்ற பட்டிக்காட்டு மிட்டாய்களில் எனக்கு ஆர்வமில்லை), அதே போல் ரேடியோ ஜாக்கிகளில் பிடித்தவர் சுசித்ரா. Seducing Voice.

^^^^^^^^^^^^^^^^^
கிட்டதட்ட ஒரு பத்து வருடம் முன்பு தூர்தர்ஷனில் இரவு எட்டு மணிக்கு நெஞ்சினலைகள் என்கிற அகிலனின் நாவலை நாடக‌மாகப் போட்டார்கள். மிக அற்புதமாக ஒரு திரைப்படம் மாதிரி எடுத்திருப்பார்கள். யார் அதன் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்? Hats-off.

^^^^^^^^^^^^^^^^^
இன்னபிற முக்கிய தூர்தர்ஷன் novel நாடகங்கள்: என் இனிய இயந்திரா (சுஜாதா), இரும்புக்குதிரைகள் (பாலகுமாரன்), சோலைமலை இளவரசி (கல்கி), தென்பாண்டிச்சிங்கம் (கலைஞர்), சுந்தர காண்டம் (ஜெயகாந்தன்), வெந்து தணிந்த காடுகள் (இந்திரா பார்த்தசாரதி), கடல்புரத்தில் (வண்ண நிலவன்), ஒரு மனிதனின் கதை (சிவசங்கரி).

Comments

Kaarthik said…
Add these novel-naadagam.
Paris-ku Po (Jeyakanathan)
Tharaiyil Irangum Vimaanangal (Indhumathi)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்