மிக அழகான 10 தமிழ் பெண்கள்

மிக அழகான 10 தமிழ் பெண்கள் பட்டியலை வெளியிடுவதாய் அறிவித்து கிட்டதட்ட ஒரு மாதமாகிறது. என்ன ஆயிற்று என்று யாரும் கேட்கவில்லை யெனினும் பதில் சொல்ல வேண்டிய க‌டமையிருப்பதாக உணர்கிறேன். உண்மையில் பட்டியல் வெகு நாட்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால் வெளியிடுவதில் தான் ஒரு சின்ன அல்லது பெரிய சிக்கல் இருக்கிறது.

அதில் இடம் பெற்றவர்களில் ஒருவர் ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரின் மகள்; இன்னொருவர் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள்; எல்லாவற்றையும் விட ஆபத்தானதாய் மற்றுமொருவர் ஒரு நவீன பெண் கவிஞர். பட்டியலை வெளியிட்டால், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று சஹ்ருதயர்கள் சிலர் சொல்ல‌க் கேள்வி.

இருக்கும் ஒரே ஒரு அழகான மனைவியுடன், மென்பொருள் துறையின் சுமாரான சம்பளத்தில், அந்நியர்கள் சூழந்திருக்கும் ஊரான பெங்களூரில், அமைதியாய் அடக்கமாய் ஒண்டிக் குடித்தனம் செய்து கொண்டிருக்கும் என் போன்ற அம்மாஞ்சிகளுக்கு இத்தகைய‌ அதிர்ச்சி வஸ்துக்கள் ஆகாது. மேலும், எனக்கும் எழுத வேறு உருப்படியான விஷயங்கள் காத்திருக்கின்றன.

இதையெல்லாம் மனதில் கொண்டு நோக்குங்கால், இந்தப் பட்டியலை இப்போது வெளியிடுவது எந்த விதத்திலும் சாணக்கியத்தனம் இல்லை என்றே தோன்றுகிறது. என் மனச்சூழலோ, தமிழ்ச்சூழலோ மாறும் நாளில் இப்பட்டியலை நான் வெளியிடக்கூடும். ஒன்று மட்டும் இப்போதைக்கு - பட்டியலில் இருந்தவர்களுள் ஒருவர் : பவதாரிணி இளையராஜா.

6 comments:

Anonymous said...

எங்களை வச்சு காமெடி கீமடி பண்ணலியே ...
பவதாரிணி அழகான பத்து பெண்களில் ஒருவரா ? இது உங்களுக்கே ஓவர் ஆக தெரியவில்லை....

சரவணகார்த்திகேயன் சி. said...

@ Mr.Anonymous
No. Am utter serious..

வசந்த் said...

பவதாரிணியின் பெயரை நேரடியாகவே குறிப்பிட்டுவிட்டீர்கள். அரசியல் கட்சித் தலைவரின் மகள், மத்திய அமைச்சரின் மருமகள், நவீன பெண் கவிஞர் என்று மூன்று பேருக்கு க்ளூ கொடுத்திருக்கிறீர்கள். மற்ற ஆறு பேருக்கும்கூட க்ளூ கொடுத்துவிடுங்களேன்.

வசந்த் said...

சரவணகார்த்திகேயனின் தேர்வை நான் ஏற்றுக்கொள்கிறேன். பவதாரிணி அழகுதான்.

Kaarthik said...

My favourite:
மத்திய அமைச்சர் மருமகள்

வலைஞன் said...

இன்னிக்குதான் உங்க சைட்டில் என் க்ருஹப்பிரவேசம்!! எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனா அலட்டல்தான் அபரிமிதம்! அதான் ஒங்க பாலிசி கம்மினா கம்;கம்மனாட்டி கோ என்றான பிறகு நாங்க என்ன செய்யறது?
ஜாலியா பேசவேண்டியதுதான்
Sarkar, you rock!