காதல் கதை

செடிகொடித் துகிலணிந்த‌
ஆதிகால ஆணும் பெண்ணும்
புன்னகைத்துக் கொண்டனர்
பின்வரும் இலையுதிர் ருதுவில்
முகிழ்ந்தெழக் கூடுமோர்
எழுதப்படாத காதல் கதை.