ச‌மீபத்தைய நல்ல படங்கள்

அடிக்கடி நான் குறிப்பிடும் "ச‌மீபத்தைய நல்ல படங்கள்" என்பவை எவை என்று தெளிவாய் அறுதியிட்டுச் சொல்லி விடுவது எல்லா வகையிலும் உத்த‌மமானது என நினைக்கிறேன். கடந்த ஆறேழு வருடங்களுக்குள் வெளியான தமிழ் சினிமாக்களில் மிக மிக முக்கியமானவை இவை:
  1. அழகி - தங்கர்பச்சான்
  2. ஆட்டோகிராஃப் - சேரன்
  3. காதல் - பாலாஜி சக்திவேல்
  4. தவமாய்த் தவமிருந்து - சேரன்
  5. வெயில் - வ‌சந்தபாலன்
  6. பருத்தி வீரன் - அமீர்
  7. கற்றது தமிழ் - ராம்
  8. சுப்ரமணியபுரம் - சசிகுமார்
  9. பூ - சசி
  10. வெண்ணிலா கபடி குழு - சுசீந்திரன்
பின்குறிப்புகள்:

1. இப்பட்டியலில் இடம்பெற முயன்று தோற்ற‌ சில மாற்று சினிமா போலிகள்: புதுப்பேட்டை, கல்லூரி, பசங்க, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், நாடோடிகள், மாயாண்டி குடும்பத்தார், நான் கடவுள், பிதாமகன, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, வாரணம் ஆயிரம், கோடம்பாக்கம், மாயக்கண்ணாடி, ராம், அன்பே சிவம்.

2. இதே கால இடைவெளியில் அடிதடி, கவர்ச்சி, காமெடி ஃபார்முலாவிலிருந்து விலகி சுவாரசியமான திரைக்கதையினால் நல்ல entertainerகளாக பரிணமித்த படங்கள் இவை. இவையும் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு முக்கியமானவை: தசாவதாரம், அயன், ஓரம் போ, பொய் சொல்ல போறோம், சென்னை-600028, இம்சை அரசம் 23ம் புலிகேசி, அஞ்சாதே, பொல்லாதவன், அழகிய தீயே, பாய்ஸ், திருட்டுப்பயலே, யாவரும் நலம், கண்ட நாள் முதல், உன்னாலே உன்னாலே, ஈ, கஜினி, காக்க.. காக்க.., காதல் கொண்டேன், சந்தோஷ் சுப்ரமணியம், அலிபாபா.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்