படித்தது / பிடித்தது - 59

பால்யம் இழந்தவள்

அடியுரமாக ஆட்டுப் புழுக்கை
ரத்த நிறத்தில் செம்மண்
ஆற்றுமணல் எல்லாம்
கலந்து நிரப்பிய
தொட்டியிலிட்ட செடி
பூத்தது
மூன்றே மாதத்தில்
எல்லோரும் மகிழ.

முதல் பூவைச் சூடிச்சென்ற
ஏழாவது படிக்கும்
சின்னவள்
இன்று மாலை
பெரியவளானாள்

ஏனோ வலித்தது மனது.

- வடகரை வேலன்

நன்றி: வடகரை வேலன் எண்ணச் சிதறல்கள்

No comments: