படித்தது / பிடித்தது - 53

கண்ணாடியாலானக் கவிதை..

இக்கவிதையை படித்த பின்புதான்
என்னுடைய உண்மையான முகத்தை
நீ தெரிந்துக் கொண்டதாகவும்
நான் ஒரு துரோகி என்றும்
கொலைகாரன் என்றும்
சுயநலன்களுக்காக
பிறர் வாழ்வைக் கெடுக்கவும் துணிபவன்
என்றும்
மேலும் இன்ன பிற
கெட்டவார்த்தைகளாலும் திட்டிவிட்டு
நகர்ந்தாய்,
நான் இக்கவிதையை
முகம் பார்க்கும்
கண்ணாடியால் செய்திருந்தேன்
என்பதை உன்னிடம் சொல்வதற்கு
முன்பாகவே.

- Saravana Kumar MSK

நன்றி: கனவில் தொலைதல்..

Comments

Popular posts from this blog

காலோஸ்மி [சிறுகதை]

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?

இறுதி இரவு [சிறுகதை]