படித்தது / பிடித்தது - 50

தீர்மானம்

இரவெல்லாம் விழித்திருந்து
உனக்கு எழுதிய
காதல் கடிதம் காணாமல் போய்விட்டது
மேஜையின் இழுப்பறை,
புத்தக அலமாரி என
எல்லா இடங்களிலும்
தேடித் தேடிக் களைத்தேன்!
பிறிதொரு கடிதம் எழுத நினைத்தால்
முன்னெழுதிய கடித வரிகள் இடையிடையே
புகுந்து என்னை ஏளனம் செய்கிறது!
பத்து பதினொன்று இருபது ஐம்பது
என ஏறிக்கொண்டேயிருக்கிறது
எழுத இயலாத தாள்களின் எண்ணிக்கைகள்!
காகிதங்கள் யாவையும் கிழித்துப் போட்டுவிட்டு
புறப்பட்டுவிட்டேன் ஒரே ஒரு முத்தத்துடன்!

- உமாஷக்தி

நன்றி: இவள் என்பது பெயர்ச்சொல்

Comments

Unknown said…
நன்றி சரவணகார்த்திகேயன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்