மக்கள் குரல் : 2009

இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் 15வது மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக மக்கள் சில முக்கிய விஷயங்களை முன்வைக்கிறார்கள்:
 1. இலங்கை பிரச்சனையும் பாராளுமன்ற தேர்தலும் வேறு வேறு
 2. கருணாநிதியின் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை
 3. என்ன நடந்தாலும் கொங்கு தேசத்தில் இர‌ட்டை இலை தான்
 4. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுபவர்கள் தேவையில்லை
 5. காங்கிரஸுக்கு ஓட்டு போடுவது கைக்கு; தலைகளுக்கு அல்ல‌
 6. பிஜேபி, பிஎஸ்பி போன்ற கட்சிகள் தேர்த‌லில் நிற்பதே தெரியாது
 7. சீமான் பாரதிராஜாவின் தயவில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி
 8. விஜயகாந்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சம்பந்தமுமில்லை
 9. நடிகர்களின் ஜிகினாத்தனங்களுக்கு தேர்தலில் வேலையில்லை
 10. ஊழல், அதிகார துஷ்பிரயோகம் செய்தால் பிரச்சனையில்லை
 11. கட்டபஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்தால் இன்னமும் உத்தமம்
 12. அரசு அதிகாரிகளுக்கு புத்திஜீவிகளுக்கு அரசியல் தெரியாது
 13. ரிசர்வட் தொகுதி தவிர மற்றவற்றில் தலித் வெல்ல முடியாது
 14. எம்.பி. தேர்தலில் நிற்கும் சுயேச்சைகளுக்கு அனுதாபங்கள்
 15. தேர்தல் கருத்து கணிப்புகளில் பொய் சொல்லித்தான் பழக்கம்

No comments: