விதிவிலக்குகள் பட்டியல்

2009 லோக்சபா தேர்தலுக்கான தமிழகம் மற்றும் புதுவையின் 40 பாராளுமன்றத் தொகுதிகளின் இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை கவனித்ததில் (நேற்று கோலாகலமாய் வெளியிடப்பட்ட விஜய டி. ராஜேந்தரின் லட்சிய திமுக வேட்பாளர் பட்டியல் உட்பட), என் பார்வையில் தகுதியுடையவர்களாய் வெறும் ஏழே பேர் தான் தேறுகிறார்கள்:
  1. தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) - சிதம்பரம்
  2. பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) - மதுரை
  3. ப.சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ்) - சிவகங்கை
  4. தயாநிதி மாறன் (திராவிட முன்னேற்ற கழகம்) - மத்திய சென்னை
  5. பி.சிவகாமி (பகுஜன் சமாஜ் கட்சி) - கன்னியாகுமரி
  6. கே.பாண்டியராஜன் (தேசிய முற்போக்கு திராவிட‌ர் கழகம்) - விருதுநகர்
  7. இ.சரத்பாபு (சுயேச்சை வேட்பாளர்) - தென் சென்னை
ஜெயிப்பார்களா என‌த்தெரியாது - ஜெயிக்க‌ வேண்டுமென‌ விரும்புகிறேன்.

Comments

Kalai Amuthan said…
Except Sarath, Remaining names in your list doesn't posses any justification. I agree with charu's response for your 49 O
சாக்ரடீஸ்,ப்ளேட்டோ காலத்திலிருந்து அரசியம் இப்படித்தான் இருந்திருக்கிறது.அதற்காக சாரு சொல்வதுபோல எல்லாரையும் அடித்துக் கொல்லவேண்டும்,தூக்கில் போட வேண்டுமென்றால் எதுவும் உருப்படாது.

அவர் சொல்வது எல்லாரும் சொல்வதுபோல,சாதாரண பிரஜையின் மெண்டாலிட்டி.

உலக அரசியலில் இதைவிட மோசங்கள் நடந்து கொண்டிருக்கின்றன,மனித வரலாற்றின் துவேசம் அது.

பல சின்ன சின்ன தீர்வுகள்,இவற்றை சரிசெய்ய முடியும்.தேவை- திறந்த மனம்,நேரம் மற்றும் பண/பதவி மோகமில்லாத அதிகாரிகள்.

எல்லாருக்கும் இந்த பதவி/பணம் தவிர பலவித மோகங்கள் உள்ளன.அதனால் பாதகமடைவது direct/indirect பல மக்கள்.இவர்கள் அனைவரையும் கொல்ல முடியுமா?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்