கடிதம்: வாசிங்டனிலிருந்து சிவா

வணக்கம் சரவணன்

எனது பெயர் சிவா. பிறந்து படித்து வளர்ந்தது மயிலாடுதுறையில். சில ஆண்டுகளாய் வாசிங்டனில் வசித்தல். மீண்டும் தமிழகத்தில் குடியேற திட்டம் மற்றும் ஆசை!

நீங்கள் சொன்னது போலவே, சாரு தளத்தின் மூலம் உங்கள் வலைப் பூ வந்தேன். மிகவும் ரசித்து பல பதிவுகள் படித்தேன். நிறைய கருத்துகளில் உடன்பாடும் சில வற்றில் உடன்பாடு இல்லை! நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். எழுத எழுத எழுத்து வசப் படும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

நீங்கள் தமிழகத்தில் எந்த ஊர்? தற்பொழுது பெங்களூரில் என்ன செய்கிறீர்கள்? பெங்களூர் வாழ்க்கை உங்களுக்கு பிடித்துள்ளதா? பெங்களூர் பொருளாதரம் எப்படியுள்ளது?

தமிழக அரசியலில் ஆர்வம் உண்டா?

ஓய்வாக இருக்கும் பொழுது மின் அஞ்சல் தட்டுங்களேன்....

சிவா...

############

சிவா,

முரண்பாடு. That's the key. யாரும் யாரோடும் நூறு சதவிகிதம் ஒத்துப் போக‌ முடியாது என்பதாலேயே மனித வாழ்க்கை இந்தப்பூமியில் இன்னமும் சுவாரசியமாக நகர்ந்து கொண்டிருக்கிற‌து. அதுவும் என் போன்ற ஒரு non-conformist ஆசாமியோடு ஒத்துப் போகிறீர்கள் என்றால் ஆச்சரியமே. கேட்பதற்கு சந்தோஷமாய்த் தான் இருக்கிறது.

"என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை" என்ற எழுத்தாளர் ஞானியின் நிலைப்பாடு தான் என்னுடையதும்.

"நிறைய கருத்துகளில் உடன்பாடும் சிலவற்றில் உடன்பாடும் இல்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதற்குத் தான் எனது இந்த பதில். இதே வசனத்தை நிறையப்பேர் என்னிடம் மின்னஞ்சல், மின்ன‌ரட்டை, பின்னூட்டம் போன்ற பலவற்றிலும் சொன்னதால், அதற்கான மறுமொழியை பொதுவாக உங்கள் கடிதத்துக்கு அளித்துள்ளேன்.

மற்றவற்றை தனியே மின்னஞ்சலில் பேசுவோம்.

-CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்