காதலின் வலி

சமீபத்திய கட்டுரை ஒன்றில் சாரு நிவேதிதா கிம் கி டுக் என்ற தென் கொரிய இயக்குநர் பற்றியும், அவரது the isle திரைப்படம் பற்றியும் சொல்லியிருந்தார்.


YouTubeல் தேடியதில் படத்தின் சில முக்கியக்காட்சிகள் சிக்கின. தரவிறக்கி வீட்டுக்கு வந்து பார்த்ததில் (அலுவலகத்தில் பார்க்கக்கூடாது. Ethics!), சாரு சிலாகித்தது அப்படியே வரிக்கு வரி நிஜம். அற்புத‌மான காட்சியமைப்பு, அழகான‌ ஒளிப்பதிவு, அடங்கிய‌ பின்னணியிசை, குறைவான வசன‌ங்கள் என தனியொரு அனுபவத்தை வழங்கியது (ப்ரயாஸ் குப்தாவின் Siddharth - The Prisoner போல‌). இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

காட்சி பற்றிய சாருவின் வர்ணனையை கவனியுங்கள்:

"ஹ்யூன் ஷிக் தன்னை விட்டுப் பிரிந்து செல்வதைத் தாங்க முடியாத ஹீ ஜின் மீன் தூண்டிலை எடுத்துத் தன்னுடைய யோனியின் உள்பகுதியில் விட்டு மாட்டி, அதை அந்தத் தூண்டில் கயிற்றின் மூலம் வெளியே எடுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள்.இந்த முறை ஹ்யூன் ஷிக் அவளைக் காப்பாற்றுகிறான். அவளுடைய யோனிக்குள் சிறிய கிடுக்கியை விட்டு அந்தத் தூண்டில் கொக்கிகளை ஒவ்வொன்றாக எடுக்கிறான். பிறகு, புண் ஆறுவதற்காக யோனி வாயை மூடாமலேயே தொடைகளை அகற்றி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது அவளுக்கு. காயத்தில் மருந்து போட்டு விசிறி விடுகிறான்"

இப்போது அந்த குறிப்பிட்ட காட்சியைப் பாருங்கள்:



குழப்பமான மனதுடன் ஹ்யூன் ஷிக் அவளைப் பிரிந்து செல்லும் காட்சி பனிமூட்டத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்கொலைக்கு முயலும் ஹீ ஜின் வலியில் கதறுவதைக் கேட்டு அவன் அதிர்வதை பின்னணியிசை சொல்லி விடுகிறது. பின் அவளைக் காப்பாற்றி காயத்துக்கு விசிறி விடுகையில் வரும் இசை அச்சூழ்நிலையின் நிம்மதியை உணர்த்துகிறது - குழப்பம் விலகியத‌ன் அடையாளமாய் இப்போது பனிமூட்டம் இல்லை.

இந்த ஆறு நிமிடக்காட்சியில் ஒரு வசனம் கூடக் கிடையாது. இங்கு அவள் தற்கொலை செய்யத் தேர்ந்தெடுக்கும் முறையும் முக்கியமானது. எது அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியதோ அந்த உறுப்பையே மூர்க்கமாய்ச் சிதைத்து மரணத்தைத் தழுவ முற்படுகிறாள். அப்புறம் அந்த மீன் தூண்டில் கொக்கிகள் - படம் நெடுக அவை ஒரு முக்கியப் பாத்திரமாய்ப் பயணிப்பதாகத் தெரிகிறது. ஆம். ரத்தம் தோய்ந்த மீன் தூண்டில் கொக்கிகள்.

வெறும் குருதியல்ல அது; வெறும் அழுகையல்ல அது; வெறும் அதிர்ச்சியல்ல அது. காதல்; காதல்; காதல் - கண்மூடித்தனமான காதல். காதலின் வலியை, அதன் விரக‌தாபத்தை, அதன் கையறுநிலையை இதைக்காட்டிலும் வன்மையாய் எப்படி காட்சிப்படுத்த முடியும்? தமிழ் சினிமாவில் வரும் ஓட்டை உடைசல் காதல் காட்சிகளை இங்கே கொஞ்சம் நினைவுபடுத்திக் கொண்டு, மனதைத் தொட்டு சொல்லுங்கள் - எது குரூரமாய் இருக்கிறது?

தமிழிலும் இது போல் நேர்மையாய், நேர்த்தியாய் படம் எடுக்க இரண்டு பேர் இருக்கிறார்கள் - ஒருவர் பாலா; மற்றவர் அமீர்.

பின்குறிப்பு:
பணி நிமித்தம் தற்போது கொரியாவிற்கு குறுகியகாலப்பயணம் மேற்கொண்டிருக்கும் என் சினேகிதனிடம் கிம் கி டுக் இயக்கிய படங்களின் டிவிடிக்களை வாங்கி வரச்சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.

Comments

I have seen this scene. its love, pain, I could nt control my tears,,,,,,
Anonymous said…
http://bleachingpowder.blogspot.com/2009/03/blog-post.html
RagavanRocks said…
Come on..There are a band of people like you who think its cool to praise other language movies..ஏன்? கத்தியை எடுத்து அவள் சதையை கிழித்து கொண்டிருக்க வேண்டியதுதானே ....
அப்போதும் அந்த காதலின் வலி வெளிபட்டிருக்குமே. யோனியில் என்ன ?....தரமான படம் எடுக்க வேண்டும் என்றால்
இது போல குரூரமான காட்சிகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா? கிளிஞ்சல்கள் , ஒரு தலை ராகம் இவை எல்லாம் நல்ல
படமாக தோன்றவில்லையா உமக்கு.
We tamilians are far better than those people.
@ RagavanRocks

I think U r not getting it completely.
The director didn't keep it for the sake of குரூரமான காட்சி.
எது அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியதோ அந்த உறுப்பையே மூர்க்கமாய்ச் சிதைத்து மரணத்தைத் தழுவ முற்படுகிறாள் (she is a prostitute and he is the customer).
Because of this reason only, that particular scene is justified.
And if such a scene is portrayed in a Tamil film, I am the one who feels very happy and will honour it.
Also, I never under-estimated tamil films.
My suggestion is to read all of my posts on cinema and then make any such comment.
கிளிஞ்சல்கள் , ஒரு தலை ராகம் - U must be joking..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்