இசை ஞானி ஆயிரம் - தோற்றுவாய்
இளையராஜாவை "இசை ஞானி" என்று அழைப்பதை justify செய்யும் அவரது ஆயிரம் பாடல்களை இங்கே பட்டியலிடவிருக்கிறேன். என் பார்வையில் இளையராஜா இசையமைத்த சிறந்த ஆயிரம் பாடல்கள் என இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
நான் இசையைக்கற்றறிந்தவன் அல்ல. ஆனால் இசையை நுட்பமாய் ரசிக்கத் தெரிந்தவன். பாடலின் ராகம், தாளம் பற்றிய புரிதல் இல்லாவிட்டாலும், எனக்குப் பிடித்த சங்கீதம் யாரிடமிருந்து வந்தாலும் அதை அங்கீகரிக்க விரும்பும் ஒரு பாமர ரசிகன்.
உங்களுக்கு நல்ல பாடல் எனத் தோன்றுவது எனக்கும் அப்படியே இருக்க வேண்டும் என அவசியமில்லை. ஆக, இது எனது சொந்த ரசனை சார்ந்த பட்டியலே. தவிர இதில் பாடல்களுக்கு கொடுக்கப்படும் எண்கள் அதன் தர வரிசையைக் குறிப்பதல்ல.
வாரம் பத்துப்பாடல்கள் வீதம் நூறு வாரங்கள் இதை ஒரு தொடராக எழுதுவதாக உத்தேசம். இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வது இந்தப்பட்டியலின் Perfectionக்காக. இது பல்வேறு விவாதங்களை உருவாக்கும் என உணர்ந்தே இதைத் தொடங்கியுள்ளேன்.
சர்வதேசத் தரமுடைய இசைக்குறிப்புகளை வழங்கிய ஒரு மாபெரும் கலைஞன் நம்மிடையே வாழ்ந்தான் என எதிர்காலம் பெருமைப்படவும், அவனுக்கு உரிய மரியாதையளிக்கத் தவறிவிட்டோம் என நிகழ்காலம் வெட்கப்படவும் இது உதவும். அது தான் goal.
வாருங்கள், ஞானியின் இசையிலே நனைவோம்!

Comments