ஆஸ்கர் - சில எதிர்வினைகள்
இணையதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி எழுதித்தீர்க்கிறார்கள்.
மிகப்பலர் பாராட்டி; அரிதாய்ச் சிலர் திட்டி.
இன்று ஒரு வலைதளத்தில் படித்த பதிவின் தலைப்பு -
"ஆஸ்கர்க்கு பெருமை..... ரஹ்மானால் !!!"
பின்குறிப்பு: அந்த வலைதளத்தின் பெயர் "பிதற்றல்கள்"
#################
இன்று ஜிடாக்கில் பேசிய ஒரு நண்பர் மிகவும் ஆதங்கத்துடன் பேசினார்.
"ஏ.ஆர்.ரஹ்மான் மூணு ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் ஆனாரு"
"ஆமாங்க. நல்ல விஷயந்தான்"
"ஆனா பாவம், ரெண்டு விருது தான் வாங்கினாரு"
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"விடுங்க. அடுத்த தடவை மூணு என்ன நாலாவே வாங்கிடுவாரு"
"உங்களுக்குப்புரியுது. ஆஸ்கர் கமிட்டிகாரனுக்கு தெரிய மாட்டேங்குதே"
பின்குறிப்பு: அந்த நண்பர் என் வலைதளத்தைப் படிப்பதில்லை.
#################
என் நண்பன் ஒருவன் மிகவும் ஆர்வக்கோளாறு.
நேற்று மாலை எனக்கு தொலைபேசினான்.
குரல் மிகவும் உற்சாகமாகக்காணப்பட்டது.
"நான் ம்யூஸிக் கத்துக்கப்போறேன்டா"
"என்னடா, திடீர்னு?"
"எல்லாம் ரஹ்மானால தான்"
"என்னடா சொல்ற?"
"ஆமாம். சினிமாவில ட்ரை பண்ணப்போறேன்"
"உனக்கு ம்யூஸிக் பத்தி ஒண்ணுமே தெரியாதே"
"அதனால தான் கத்துக்கப்போறேன்"
"அப்புறம்"
"அடுத்த வருஷம் ஆஸ்கர் வாங்கப்போறேன்"
பின்குறிப்பு: இன்று ஓர் இசைப்பள்ளியில் அட்வான்ஸ் கொடுத்துவிட்டானாம்.
#################
மற்றொரு நண்பர் தீவிர இளையராஜா ரசிகர் (அல்லது வெறியர்).
இன்று பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னது -
"ஆஸ்கர் மேடையிலேயே ரஹ்மான் இளையராஜாவைப் புகழ்ந்துட்டாரு"
நான் முழு ஆஸ்கர் நிகழ்ச்சியையும் நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன்.
அப்படி ஒன்றும் ரஹ்மான் சொன்னதாய் எனக்கு நினைவில்லை.
"அப்படியா? என்னங்க சொன்னாரு?"
"எல்லாப்புகழும் இறைவனுக்கே அப்படின்னு சொன்னாருல்ல"
"ஆமாம்"
"அது ஒரு குறியீடு"
"புரியலீங்களே"
"அது இளையராஜாவைத்தான் குறிக்குது"
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
"எப்படிங்க?"
"இளையராஜா தானே ராக தேவன், இசை தெய்வம் எல்லாம்"
அவர் மிகவும் சீரியஸாக சொல்லிக்கொண்டிருந்தார்.
பின்குறிப்பு: இதற்கு என்ன பின்குறிப்பு எழுதவென்றே தெரியவில்லை.

Comments
Karthik.
இதுக்கு உங்களோட எதிர்வினை என்னன்னு சொல்லவே இல்லையே!
பின்குறிப்பு: 'பிதற்றல்கள்' நாமக்கல் சிபி!
இன்னுமா புரியவில்லை?
பின்குறிப்பு: என் எதிர்வினை அந்தப் பின்குறிப்பு தான் ;)