அழகிய தமிழ்மகன்

இன்று(ம்) அலுவலகத்துக்குத் தாமதமாய்க் கிளம்பிய காரணத்தால் ஆட்டோவில் செல்ல நேர்ந்தது. பயணத்தினூடே ஆட்டோ ஓட்டுநருக்கும் எனக்குமிடையே நிகழ்ந்த சம்பாஷனை இது. போக வேண்டிய இடம் பற்றிய குறிப்புகளை நான் தமிழில் சொல்ல, அவர் தான் முதலில் பேச்சு கொடுத்தார்.

"எந்த ஊரு?"

"ஈரோடுங்க"

"எனக்கு விழுப்புரம்"

"சரிங்க"

"குடும்பம் எல்லாம் ஒசூர்ல இருக்கு"

"கல்யாணமாயிடுச்சுங்களா?"

"ஆச்சு. ஒரு் பையன்"

"அப்புறம்?"

"காலையில வந்துட்டு ராத்திரி போயிடுவேன்"

"தினமுமா?"

"ஆமாம்"

"அங்கயே ஆட்டோ ஓட்டலாமே?"

"பெங்களூர் அளவுக்கு வருமானம் வராது"

"குடும்பத்த இங்க கூட்டிட்டு வந்திடலாமே?"

"அது சரி வராது"

"ஏங்க? செலவு ஜாஸ்தியா?"

"அது இல்ல"

"வேற என்னங்க?"

"பையன் தமிழ் படிக்கனும்"

பின்குறிப்பு: மேடைதோறும் தமிழை வளரவைப்பதாக‌ வாய்கிழியப் பேசிக்கொண்டு, கொஞ்சம் கூட‌ வெட்கமே இல்லாமல், தங்கள் சந்ததியினரை தமிழ் ஒரு பாடமாய்க் கூட இல்லாத கான்வென்ட் பள்ளிகளில் படிக்க வைக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு இப்பதிவு கசப்புணர்வுடன் சமர்ப்பணம்.

Comments

// பின்குறிப்பு: மேடைதோறும் தமிழை வளரவைப்பதாக‌ வாய்கிழியப் பேசிக்கொண்டு, கொஞ்சம் கூட‌ வெட்கமே இல்லாமல், தங்கள் சந்ததியினரை தமிழ் ஒரு பாடமாய்க் கூட இல்லாத கான்வென்ட் பள்ளிகளில் படிக்க வைக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு இப்பதிவு கசப்புணர்வுடன் சமர்ப்பணம் //

சரியான நெத்தியடி...

உங்க ப்ளாக்கை விரும்பி படிப்பதற்கு காரணமே இந்த முத்தான விமர்சனங்கள் தான்.

இந்த Word Verification ஐ எடுத்து விடுங்களேன்... ரொம்ப பேஜார் பண்ணுது
RagavanRocks said…
நெத்தியடி என்பதை விட செருப்படி என்று சொல்லலாம்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்