படித்தது / பிடித்தது - 10

சலிப்பு, குடி, புணர்ச்சி இன்னபிற

எந்த சினிமாவையும்
முழுதாக அமர்ந்து பார்க்க முடிவதில்லை இப்போதெல்லாம்
மனதிற்குப் பிடித்த புத்தகமேயானாலும்
இரண்டு மணிநேரத்திற்குமேல் படிக்க முடிவதில்லை
கிரிக்கெட் மேட்ச் என்றாலும் 10 ஓவர்களுக்குமேல்
பார்க்க முடிவதில்லை தொலைக்காட்சியை
பேரழகியாய் இருந்தாலும் எவளையும்
ஒரு வருடத்திற்குமேல் காதலிக்க முடிவதில்லை
பெற்றோரிடமும் மனைவி குழந்தைகளிடமும்
தொடர்ந்து அன்பு செலுத்த முடிவதேயில்லை
உத்தியோகமும் அடிக்கடி
மாறிக் கொண்டேயிருக்கிறது இவனுக்கு
நெருக்கமான நட்புகளும் நெடுங்காலம் தொடர்வதில்லை
எழுதுவதும் சலித்துப் போகிறது பல சமயம்
இப்பட்டியலில் சிக்காமல் இருப்பது
கோல்ட் பிளேக் கிங்ஸும்
ஓல்ட் மாங்கும்
எப்போதாவது புணர்ச்சியும்
சுய இன்பங்களும்

- ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி: மொழி விளையாட்டு

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்