நான் நீ பகுத்தறிவு

ஈரோடு தொடங்கி திருப்பூர் வரையிலான ஒன்றரை மணி நேர பேருந்து பயணத்தில் பொழுது போக்க, தெரியாத்தனமாக இந்திரா செளந்தர்ராஜனின் பத்து ரூபாய் விலையிலான ஒரு கையடக்க நாவலை (நான் நீ ஆத்மா) வாங்கித் தொலைத்து விட்டேன்.

ஆரம்ப அத்தியாய‌த்திலிருந்தே ஒரு நெடுந்தொடரின் தயிர்சாதத்தனதோடு, அசட்டுத்தனமாய், அசுவராசியமாய் நகர்ந்து கொண்டிருந்த நாவலின் ஒரு இடத்தில், கிட்டத்தட்ட ஆசிரியரே தன் கருத்தை சொல்வது போல் ஒரு கதாபாத்திரம் பேசுகிறது:

"எல்லா விஷயத்தையும் புரிஞ்சுண்ட பிறகுதான் நம்பறதுன்னு வெச்சுக்காதே. அது ரொம்ப மட்டமான புத்தி."

அதைப்படித்தவுடன் அசிங்கத்தை மிதித்தாற் போல் புத்தகத்தை பேருந்தின் ஜன்னல்வழி தூக்கிக் கடாசிவிட்டு காறி உமிழ்ந்தேன். ஏதோ ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு வசனம் சொல்லுவார். அப்போது சிரித்தேன்; இப்போது சிந்திக்கிறேன்.

"தெளசண்ட் பெரியார் வந்தாலும் உங்க‌ளையெல்லாம் திருத்தவே முடியாது."

2 comments:

Amudhinee said...

You have done a very good thing.
Amuthan

viay said...

Hello,
It's not possible to understand all the things. To realise certain things you have to practise.