புயலிலே ஒரு தோணி

"Ghajini is a phenomenal album. You'll find -- and argue over -- your individual favourite tracks, but very honestly, this could just be one of his finest albums ever."

கஜினி இந்தி பதிப்பின் பாடல்களுக்கு (இசை: புயல்) ராஜா சென் என்பவர் rediff.comல் எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி தான் மேலே நீங்கள் படித்தது. தவிர எல்லாப் படைப்புகளையும் மிகவும் கறாருடன் அணுகும் rediff.com (Fashion படத்துக்கு கொடுக்கப்பட்ட‌து இரண்டு ஸ்டார்கள்) இதற்கு கொடுத்தது ஐந்து ஸ்டார்கள். அதாவது A masterpiece.

அதில் வரும் "Aye Bachchoo" என்கிற பாடல் தவிர (அதுவும் சுமார் தான்) மற்றவற்றில் சிலாகிக்க என்ன தான் உள்ளது என்று மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தேன். ம்ஹூம். ஒன்றுமே உறைக்கவில்லை. எல்லோராலும் வாய் பிளந்து எச்சில் வடிவது கூடத்தெரியாமல் ரசிக்கப்படும் பாடலான‌ "Guzarish" துரதிர்ஷ்டவசமாய் எனக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் மிகச்சிறந்த இசைக்கலைஞர் என்பதை மீண்டும் மீண்டும் ஒத்துக்கொள்கிறேன். இசையில் ரசிக்கும் படியாக பல நுட்பமான‌ experiments செய்ய அவரால் முடியும். இளையராஜாவுக்கு இணையாய் ரஹ்மான் இசையமைத்த‌ பாடல்கள் ஒரு நூறை என்னால் இங்கே சுலபமாக வரிசைப்படுத்த முடியும் - அது வேறு விஷயம்.

ஆனால் அவரது பல பலவீனமான படைப்புகள், லேபிளில் அவரின் பெயர் ஒட்டப்பட்ட ஒரே காரணத்துக்காக அவற்றின் தரத்திற்கு மீறி அங்கீகாரம் பெறுவது தான் பிரச்சனை (இது முன்பு இளையராஜாவுக்கும் நிகழ்ந்துள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன் - அப்போது நான் பொதுதளத்தில் இருந்திருந்தால் அதையும் நிச்சயம் விமர்சித்தித்திருப்பேன்).

இங்கே அனாவசியமாய் ராஜாவை உள்ளே இழுக்கிறேன் என நினைக்க வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள் - என்னைப் பொறுத்தவரை இசைக்கு அவர் தான் standard, benchmark எல்லாம். அவரை நினைக்காமல் என்னால் இசையைப் பற்றி பேசவே முடியாது - அது இந்திய சுதந்திரப் போரைப்பற்றி காந்தியைத் தவிர்த்து விட்டு பேச முற்படுவது போல.

புத்தகம், திரைப்படம், இசை ஆகிய‌வற்றை விமர்சிப்பதில் மிகச் சிறந்தவ‌ர் ராஜா சென் என்கிறார்கள். ஆனால் பாவம், அந்நேரத்தில் அவருக்கு காது, ரசனை, மனநிலை, மனசாட்சி இவற்றில் ஏதாவது ஒன்று பிசகாய் இருக்கலாம் - யானைக்கு அடி சறுக்குவது போல‌. கட்டுரைக்கு அவர் தந்திருக்கும் தலைப்பு "Rahman goes gloriously wild with Ghajini".

I am NOT sure who has gone wild.

Comments

Anonymous said…
u r correct tamil gajini music better than this
Unknown said…
Sir.i read ur critics on the review..i agree almost 90% of what u said...but Maestro Ilayaraja should not considered to be a text book...well..if u ask with 60s people..they would say Padmabushan M.S.Vishwanathan sir as a Benchmark...everyone of us stick to a particular Music director..so..what i ask u is...you are really good at criticising but do not compare musics or musicians with one another..particularly ARR and Raja..its all about entertaining people...You have to agree that Maestro cannot compete Isaipuyal..as soon as the movie 'ROJA' reliesed..Maestro started losing his oppurtunities to entertain people to a large level..well its only because of GENERATION GAP..

i will apologise if i ve said anything wrong..all i wanna say is dont stick to a person before criticising and you are absolutly good in this field ..

thanks

yours kindly,

a little music maker.
anand said…
Dear CSK,

i read your reviews about ARR and Raja sir. I'm also big fan of Raja sir and Rahman.
Most of the time, i agree with your review and critics on them.

In this post, why you are against Rahman and Raja Sen.

You have also mentioned that you listened to Ghajini album many times. i suggest you listen to few more time to feel Rahman's magic

see the making of Kaise mujhe song
http://www.youtube.com/watch?v=gZnG0gXx2HQ

Listen to background music of ghajini
http://groups.yahoo.com/group/arrahmanfans/message/117812

Hope you listened to Ghajini songs with cd audio quality and good quality Stereophones, because Rahman's magic will suppressed if you listen with mp3. Sorry, my intention is not to hurt anyone.
@ anand

Will surely have a relook.
But regarding that mp3 and cd rip: My humble opinion is technology is not a part of music.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்