கலைஞரின் அங்கதம்

கலைஞர் தொலைக்காட்சி்யிலும் அதன் சகோதர அலைவரிசையான இசையருவியிலும் இரவு ஒன்பதரை மணி முதல் பத்தரை மணி வரை சிரிப்பு வருது, சிரிப்போம் சிரிப்போம் போன்ற திரைப்பட நகைச்சுவை தொகுப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் (அதே நேரத்தில் சன் தொலைக்காட்சி மற்றும் அதன் சகோதர அலைவரிசையான சன் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் திரைப்பட நகைச்சுவை தொகுப்பு நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக).

போட்டி போட்டு விட்டுப் போகட்டும். அதை பற்றியல்ல இப்போது பேச்சு. நிகழ்ச்சியின் இடையே நகைச்சுவை நடிகர்களின் உருவப்படங்களை வரிசையாக வைத்து அனிமேஷன் செய்து டைட்டில் கார்டு போல் காட்டுகிறார்கள். வடிவேலு, கவுண்டமணி, கோவை சரளா, விவேக், கருணாஸ், கஞ்சா கருப்பு, சார்லி என்கிற வரிசையில் கடைசியாக சிம்புவையும் காட்டுகிறார்கள். ஆம். விஜய.T.ராஜேந்தரின் உத்தம புத்திரன் "LITTLE SUPER STAR" T.R.சிலம்பரசனே தான்.

என்ன சொல்ல வருகிறார்கள்?

1 comment:

bul said...

அவர்களுக்கு மத்தியில் லிட்டில் ஸூபர் ஸ்டார் இருப்பதும் காமெடி தானே?