துரதிர்ஷ்ட பெருசுகள்

பெருசு என்கிற திரைப்படத்தை இன்று விஜய் TVயில் பார்த்தேன் (இயக்கம் : G.K. - இவர் வேறு எதுவும் படம் எடுத்திருக்கிறாரா?). ஆயுத பூஜைக்கு நிச்சயம் பொருத்தமான படம் - அவ்வளவு ஆயுதங்கள். தொழில் நுட்பக் கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை எல்லாருமே புதிது. ஆனாலும் படம் நிமிர்ந்து நிற்கிறது.

ஹீரோயிஸம் இல்லாத ஒரு ரவுடிப்படம் தமிழ் சினிமாவில் அபூர்வம் (புதுப்பேட்டை, பருத்தி வீரன் போன்றவற்றில் கூட கொஞ்சம் கதாநாயகத்தனம் உண்டு). சண்டையினூடே பக்கம் பக்கமாய் பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோக்கள் சூப்பர் ஸ்டார்களாகக் கொண்டாடப்படும் கால‌கட்டத்தில் படத்தில் வரும் ஒரு வசனம் ‍- "வெட்ட வந்தா வெட்டனும்; பேசக்கூடாது".

பெருசு ஒரு சென்னை வாழ் ரவுடி (அயோத்திகுப்பம் வீரமணி?) பற்றிய நிஜமான, ஆனால் சுவாரஸ்யமான‌ பதிவு. சந்தேகமில்லாமல் வ‌ர்த்தகரீதியாக இது ஒரு தோல்விப்படம். சிறந்த திரைக்கதை கொண்ட நூறு தமிழ் திரைப்படங்களை நான் பட்டியலிட்டால், இப்படமும் நிச்சயம் இடம்பெறும் (அதனால் இதன் தோல்வியில் ஆச்ச‌ரியம் ஏதும் இல்லை).

கமல்ஹாசன், மணிரத்ன‌ம் போன்றோர் மேற்கொண்டு தோல்வியடையும் பரிசீலனை முயற்சிகளுக்காவது ஒரு அடையாளம் இருக்கிறது. இது போன்ற படங்களுக்கு அந்த ப்ராப்தி கூட‌ இல்லை.

No comments: