Posts

தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா

Image
எனது சினிமா விமர்சன முறையின் அடைப்படை குறித்த மூன்று முக்கிய விஷயங்களை முதலில் சொல்லி விடுகிறேன்: 1. நான் படம் பார்க்கும் போதே இயக்கம், திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்றெல்லாம் யோசித்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்க்க மாட்டேன். என் வரையில் திரைப்படம் என்பது ஒரு பண்டம். நுகர்வுப்பண்டம். எப்படி சிக்கன் பிரியாணி உண்ணும் போது அதன் அரிசியின் வகை, மசாலாக் கலவை, கறி வெந்திருக்கும் தன்மை, சமையல் காரரின் கஷ்டம், இது மற்றவர்களுக்குப் பிடிக்குமா எல்லாம் யோசிக்காமல் அதன் சுவையை மட்டும் அனுபவிப்பேனோ அதே போல் தான் ஒரு படம் பார்க்கும் போது நான் திறந்த மனதுடன் எந்த முன் தீர்மானமுமின்றி அந்தப் படத்தை மிக‌ முழுமையாக அனுபவிப்பேன். ஆக, ஒரு படம் முடிந்து வெளியே வரும் தருணம் அது குறித்த என் மதிப்பீடு உருவாகி இருக்கும். பிறகு அப்பட‌ம் குறித்து அசை போடும் போது தான் அந்தக் குறிப்பிட்ட‌ மதிப்பீட்டை என் மனம் வந்தடைந்த காரணங்கள் புலப்பட ஆரம்பிக்கும். அதைத் தான் விமர்சனமாகச் சொல்கிறேன் / எழுதுகிறேன். சுருங்க‌ச் சொன்னால் தியேட்டருக்குள் என் தர்க்கம், வியாக்கியானம் எல்லாம் நுழைவதே இல்லை; ...

திருவிழாப் பெண்கள்

நேற்றும் அதற்கு முன்தினமும் சென்னைப் புத்தகக்காட்சியை கால் வலிக்க இருமுறை சுற்றியாயிற்று. எப்போதும் போல் எழுத்து / வலைப்பதிவு / சமூக வலைதள அன்பர்களுடன் சேராது நண்பனுடன் தனித்தே திரிந்திருந்தேன். விதிவிலக்காய் பவுத்த அய்யனார் - முத்துமீனாள் தம்பதியருடன் மட்டும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து விட்டு நகர்ந்தேன் (அதுவும் கூட‌ நீயா நானா வழியான அறிமுக‌த்தின் காரணமாக). அப்புறம் நர்சிம்முடன் சில விநாடிகள். பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி (அவர் தானா?!), மனுஷ்யபுத்திரன், காலச்சுவடு கண்ணன், கவின்மலர் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. மற்றபடி, கடந்த சில ஆண்டுகளின் வழக்கம் போல் சென்னை டூ பெங்களூர் லாஜிஸ்டிக்ஸ் இடர்பாடுகளுக்கு பயந்தே குறைந்த எண்ணிக்கையிலான நூல்களை ம‌ட்டும் உலோபி நுகர்வு செய்தேன். எப்போதும் என் கணக்கு ஆண்டுச் சம்பளத்தில் 1%. சுமைக்குப் பயந்தே இம்முறையும் அது நிறைவேறவில்லை. ஒரே ஆறுதல் இம்முறை இரண்டு நாட்கள் இருந்தபடியால் சாவகாசமாக‌ விலாவாரியாக புத்தகங்களைக் காணும் பேறு பெற்றேன் என்பது மட்டுமே. என் சுய documentation-க்காக வாங்கிய புத்தகங்களை இங்கே பட்டியலிடுகிறேன். மற்றவர்களுக்கும் உதவக்...

முகம் - நீயா நானா

Image
முகம் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் (விஜய் டிவி) கலந்து கொண்டதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது நேற்று போகியன்று ஒளிபரப்பாகியது. எனக்கே நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடம் இருக்கும் போது தான் விஷயம் தெரியும் என்பதால் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு / சமூக வலைதள அன்பர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க இயலவில்லை. இன்று விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் சானலில் அந்த வீடியோவை வெளிட்டிருக்கிறது. கிட்டதட்ட 6 மணி நேரம் ஷூட் செய்த நிகழ்வை ஒண்ணே கால் மணி நேரத்துக்கு மேல் ஓடுகிற‌ நிகழ்ச்சியாகச் சுருக்கியுள்ளனர். என் வேண்டுகோள் முழு வீடியோவையும் பாருங்கள் என்பதே. ஆனாலும் நேரமோ ஆர்வமோ இல்லாதவர்களுக்காக மட்டும் நான் தோன்றும் / பேசும் பகுதிகளின் நேரத்துளிகளை இங்கே பட்டியலிடுகிறேன். 0:02:20 - 0:02:40 0:05:58 - 0:06:18 0:10:40 - 0:10:57 0:33:42 - 0:34:00 0:36:17 - 0:36:52 0:40:08 - 0:40:32 0:44:22 - 0:44:49 1:16:14 - 1:16:24 கிட்டதட்ட நான் நன்றாகப் பேசிய பகுதிகள் அனைத்துமே (6 கேள்விகள்) எடிட் ஆகாமல் நிகழ்ச்சியில் வந்து விட்டது. http://www.hotstar.com/tv/neeya-naana/1584/a-deba...

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2012

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES சார்பில் 2012ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்ற முறை போல் இவ்வாண்டும் தமிழ் பேப்பரில் தான் இது வெளியாகி இருக்கிறது. தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2012 : http://www.tamilpaper.net/?p=7298 *******

தமிழ் சினிமா 2012 : தரவரிசை

நல்ல‌ படங்கள் நான் ஈ முகமூடி தடையறத் தாக்க‌ துப்பாக்கி பீட்ஸா நான் கழுகு ஆரோகணம் மதுபானக்கடை சுமாரான‌ படங்கள் கலகலப்பு மாற்றான் தாண்டவம் பில்லா 2 தோனி மாலைப் பொழுதின் மயக்கத்திலே சகுனி சுந்தரபாண்டியன் போடா போடி அட்டக்கத்தி நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் காதலில் சொதப்புவது எப்படி? அம்மாவின் கைப்பேசி மோசமான படங்கள் வழக்கு எண் 18/9 நீதானே என் பொன்வசந்தம் கும்கி நீர்ப்பறவை மிரட்டல் ஒரு கல் ஒரு கண்ணாடி வேட்டை 3 அரவான் நண்பன்

எரிச்சல் தொடர்கிறது

பெங்களூரில் என் வீட்டு வேலைக்காரப்பெண் செய்யும் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து நான் எழுதியிருந்த‌ பதிவுக்கு எழுத்தாளர் தோட்டா அவர்கள் இட்ட கேள்விகள் கொண்ட‌ ஒரு நீண்ட பின்னூட்டத்துக்கு பதிலான‌ எதிர்வினை இது: ******* அன்புள்ள சி.எஸ்.கே ( @writercsk ) டியர் ஜெகன் (@thoatta) முதல நீங்கள் அவங்கள எந்த எந்த வீட்டு வேலைக்காக சேர்த்தி இருக்கீங்கனே தெரியல. பொதுவா வீட்டு வேலைன்னா என்னன்னு புரிஞ்சுக்கிறது? அத சொல்லுங்க. சமையல் வேலையுமா? சமையல் எப்படியும் நாம தான் செஞ்சாகனும். குழந்தைகளைக் கவனித்துக் கொள்தல் (சோறு ஊட்டுதல், குளிக்கச் செய்தல், குண்டி கழுவுதல், தூங்க வைத்தல், துணி துவைத்தல் - இதில் குழந்தைகள் துணி மட்டும் அடங்கும். இவற்றில் துவைத்தல் தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியும் அம்மாவும் உடன் பங்கெடுப்பார்கள். இரு குழந்தைகளில் ஒருவன் அவரது வேலை நேரத்தில் 5 மணி நேரம் இருக்கமாட்டான் ப்ளேஸ்கூல் போய் விடுவான். அதனால் முக்கால்வாசி நேரம் கவனிக்க வேண்டியது ஒரு குழந்தையை மட்டும் தான்) மற்றும் காலையும், மதியமும் உண்ணும் பாத்திரங்கள் கழுவுதல் மட்டுமே அந்தப் பெண்ணுக்குத் தந்திருக்கும் வேலை. ...

நீயா நானா - ஒரு பாடம்

Image
முகம் பற்றிய விஜய் டிவி நீயா நானா எபிஸோடில் பங்குபெற‌ அழைத்திருந்தார்கள். நேற்றுப் போயிருந்தேன். நான் பேசுவதற்கென தயார்படுத்திக் கொண்டு சென்றதில் முக்கியமற்ற 10% மட்டும் தான் அங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. நானும் அங்கு வந்திருந்த மற்றவர் போல் முகம் டிவியில் வரும் க்யூரியாஸிட்டியில் (மட்டும்) போயிருந்தால் நிகழ்ச்சி எனக்கு ம் உவப்பாகவே இருந்திருக்கும். ஆனால் அங்கே நான் சில விஷயங்கள் பேச விரும்பினேன். அது தான் எனக்கு முக்கியமாய்ப் பட்டது. அது நிகழவில்லை என்பது எனக்கு வருத்தமே. அங்கே சீஃப் கெஸ்டுக்கு மட்டும் தான் (ஓரளவு) அந்த சுதந்திரம் இருக்கிறது. நான் நிகழ்ச்சி சம்மந்தப்பட்டவர்களைக் குறை சொல்லவில்லை. அவர்கள் தேவையும் என் நோக்கமும் வேறு வேறு என்பதால் பார்டிசிபண்டாக கலந்து கொள்வது சரிப்படாது என்று தோன்றுகிறது. 'முள்' நாவலை (கமல்ஹாசன் பாராட்டிய நாவல்) எழுதிய முத்துமீனாள் கூட வந்திருந்தார். அவருக்கும் என்னுடைய‌ நிலைமை தான். ******* நான் பேச எழுதிய‌ குறிப்புகள் :  ஒருவரின் முகத்தை வைத்து அவரது குணாதியங்களைத் தெரிந்து கொள்ள முடியுமா? முதலில் விஞ்ஞானம் இதைப் பற்றி என்ன சொல்கிறது...

வாசிப்பை யாசிக்கும் தேவதை

Image
ஆழம் ‍‍-  டிசம்பர் 2012 இதழில் மலாலா யூசஃப்சய் பற்றிய என் கட்டுரை ( ஒரு தேவதையின் கதை ) வெளியாகியுள்ளது. ******* அக்டோபர் 9, 2012. வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பரிட்சை எழுதி விட்டு சில பள்ளி மாணவிகள் பேருந்தில் தம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். முகம் மூடிய துப்பாக்கி ஏந்திய தாலிபன் ஆசாமி ஒருவன் பேருந்தை மறித்து ஏறி, “உங்களில் யார் மலாலா? சொல்லுங்கள், இல்லாவிட்டால் எல்லோரையும் சுடுவேன்!” என மிரட்டினான். 15 வயதான மலாலா மிரண்ட விழிகளுடன் எழுந்து நின்றாள். அவளை நோக்கி சரமாரியாகச் சுட்டான் இதயமற்ற அந்த முகமூடி. அதில் ஒரு தோட்டா அவளது தலையைத் துளைத்து, கழுத்தில் இறங்கி, தோள்பட்டையில் தேங்கியது. பிரதேசத்தையே உலுக்கிய குரலில் அலறிச் சாய்ந்தாள் மலாலா. * டெட்டிபேர் கட்டியணைத்தபடி உறங்க வேண்டிய பதின்வயதுப் பெண் மலாலா ஏன் தலையில் துப்பாக்கி ரவை வாங்கிச் சரிய வேண்டி வந்தது? பார்க்கலாம். மலாலா யூசஃப்சய் ஜூலை 12, 1997ல் மிங்கோரா என்ற பாகிஸ்தானிய கிராமத்தில் பாஸ்துன் என்ற முஸ்லிம் இனப்பிரிவில் பிறந்தாள். அந்த இனத்தில் பிறந்த ஒரு வீரப்பெண் கவிஞர் மலாலாய் - அதற்...

கவிதை நூல்கள் - ஒரு சிபாரிசு

நவீனக் கவிதைகளாக சிலாகிக்கப்படுவனவற்றில் பாதி எனக்கு ஒத்து வருவதில்லை (அல்லது நான் ஒத்துழைப்பு தருவதில்லையோ என்னவோ!). ந.பிச்சமூர்த்தி மிகச்சிறந்த உதாரணம். அவரது கவிதைகளுக்குள் நான் நுழையவே முடியவில்லை. காலச்சுவடு, தீராநதி இதழ்களின் கவிதைகளில் கணிசமானவை எனக்கு இன்னும் புரிவதில்லை. உயிர்மை இவ்விஷயத்தில் பரவாயில்லை. இது தான் என் நவீனக் கவிதை ரசனையின் சுருக்கமான அறிமுகம். டிவிட்டரில் நண்பர் ஒருவர் வரும் சென்னைப் புத்தககாட்சியில் வாங்க நல்ல கவிதை நூல்களைச் சிபாரிசு செய்யச் சொல்லி இருந்தார். நான் வாசித்தவற்றில் எனக்கு உவப்பாகத் தோன்றிய நூல்களை இங்கே சிபாரிசு செய்திருக்கிறேன், ஒரு கவிஞருக்கு ஒரு நூல் என்ற அடிப்படையில் (மனுஷ்யபுத்திரனை மட்டும் அச்சட்டகத்துள் அடைக்கமுடியவில்லை). அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை] இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை] பசித்த பொழுது - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை] காமக்கடும்புனல் - மகுடேசுவரன் [தமிழினி] நகுலன் கவிதைகள் [காவ்யா] பிரமிள் கவிதைகள் [அடையாளம்] ஆத்மநாம் கவிதைகள் [காலச்சுவடு] சுந்தர ராமசாமி கவிதைகள் [காலச்சுவடு...

வயிறு எரிகிறது!

இந்த வேலைக்காரர்கள் பற்றி தனியாய் ஒரு நாவலே எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. வேலைக்கார்கள் என்றால் வீடுகளில் வேலைக்கு இருக்கும் பெண்கள். இவர்களெல்லாம் ஒரு பொழுதுபோக்கு போல்தான் வீட்டு வேலைக்கு வருகிறார்கள். அன்றைக்கு இஷ்டம் இருந்தால், மூட் இருந்தால் வருவார்கள். இல்லையென்றால் லீவ். மாதத்துக்கு 15 நாட்கள் வந்தாலே அதிகம். கேட்டால் ஊருக்குப் போனேன், விசேஷத்துக்குப் போனேன், துஷ்டிக்குப் போனேன், கோயிலுக்குப் போனேன், சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள், உடம்பு சரியில்லை, பேருந்து கூட்டம் / லேட், ரேஷன் கார்ட் ரென்யூவல் என கலர்கலரான‌ காரணங்கள். நம்பித்தானே ஆக வேண்டும். சில‌ நாள் நியாயமான காரணம் இருக்கும் தான். ஏற்கத் தான் வேண்டும். ஆனால் அதற்காக‌ மாதத்தில் பாதி நாட்களா? என் அலுவலகத்தில் இப்படிச் செய்தால் அடுத்த மாதம் சம்ப‌ளம் செட்டில் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நிஜமாகவே அப்படி நடந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கோ முதலாளி ஒரு கேனக்கூ.. தானே. எச்சரித்து விட்டு மீண்டும் சேர்த்தும் கொள்வோம். சகித்துக் கொள்வோம். மாதம் பாதி நாள் வேலைக்கு வர முடியாதவர்களுக்கு எதற்கு வேலை? கிடைத்தவரை லாபம். சம்...