அகநாழிகை - புதிய இதழ்

சிற்றிதழ் நடத்தி அதன் ஒவ்வொரு இதழையும் வெளிக்கொணர்வது என்பது கிட்டதட்ட ஒரு குட்டிப் பிரசவத்துக்கொப்பு. அவரே குறிப்பிட்டிருப்பதைப் போல் பொருளாதாரச் சிக்கல்கள் தாண்டி அகநாழிகை அடுத்த இதழைக் (அக்டோபர் 2010?) கொண்டு வந்து விட்டார் பொன்.வாசுதேவன். இதை ஒற்றை அலைவரிசையில் சிந்திக்கும் சின்னக் கூட்டத்தின் அறிவுசார்தேவையைப் பூர்த்தி செய்யும் வேலை எனக்குறுக்குவதை விட‌ மொழிக்கு, அதன் செறிவுக்குச் செய்யும் உபகாரம் என்றே கொள்தல் வேண்டும்.

*******


குறுநாவல்
சோழிகள் – விமலாதித்த மாமல்லன்

சிறுகதைகள்
நீர்ச்சக்கரம் – விமலன்
ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன்
சூரியக்குடை – தாரா கணேசன்
வித்தை – என்.விநாயகமுருகன்
இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன்

மொழிபெயர்ப்பு சிறுகதை
செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி
(தமிழில் : நாகரத்தினம் கிருஷ்ணா)

கட்டுரைகள்
சமாதானத்தின் இசை – ரா.கிரிதரன்
கவிதையின் ரசவாதம் – வா.மணிகண்டன்
தமிழ்ச் சமூக இயல்புகள் – அண்ணா கண்ணன்
பின்னிரவுப் புழுக்கங்களும் ஒரு முக்மாஃபியும் – ரௌத்ரன்
கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல் – ஆர்.அபிலாஷ்

கவிதைகள்
சிவரமணி
லாவண்யா சுந்தரராஜன்
நிலாரசிகன்
சுகிர்தா
ச.முத்துவேல்
ஆர்.அபிலாஷ்
சோ.சுப்புராஜ்
ரவி உதயன்
மாமல்லன் கார்த்தி
இவள் பாரதி
பாண்டித்துரை
ராகவன் சாம்யேல்
கார்த்திகா
ராமலஷ்மி
கீதாஞ்சலி பிரியதர்ஷினி
பிங் ஹ்சின் (தமிழில் : ஜெயந்தி சங்கர்)

*******

இன்னும் இதழ் கைக்குக் கிடைக்கவில்லை - விமலாதித்த மாமல்லனின் குறுநாவலும் வந்திருப்பதாக பட்டியலிலிருந்து அறிகிறேன். அவரது 3 சிறுகதைத் தொகுதிககளில் எதையுமே இதுவரை படித்ததில்லை; தற்போது வலைதளம் (www.maamallan.com) மூலம் தான் அவர் எழுத்துக்கள் பழக்கம். மேலும் மேலும் தேடத் தூண்டுகிறார். Tempting!

*******

கவிதைகளைப் பொறுத்தவரை (என்னைப் போலல்லாமல்) தொடர்ந்து நன்றாக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் முகுந்த் நாகராஜன், ராஜா சந்திரசேகர், செல்வராஜ் ஜெகதீசன், என்.விநாயகமுருகன், பா.ராஜாராம் போன்றவர்களோடு தயக்கங்களைந்து ஒப்பிட‌த்தக்க மற்றொருவர் கார்த்திகா ரஞ்சன். அவரது 3 கவிதைகள் - அதிலொன்று நான் என‌து படித்தது / பிடித்தது தொடரில் குறிப்பிட்டிருந்த 'பள்ளிக் கூண்டு' என்ற சிறுகவிதை - தற்போதைய அகநாழிகை இதழில் வெளியாகி இருக்கின்றன‌. வாழ்த்துக்கள்!


*******

என் 'பரத்தை கூற்று' தொகுப்பு தயாரிப்பிலிருந்த அதே கால இடைவெளியில் தான் அகநாழிகையின் இவ்வித‌ழும் தயாராகிக் கொண்டிருந்தது என்பது கூடுதல் தகவல்.

Comments

Unknown said…
இன்னும் சற்று முன்னே செல்ல உந்துகிறது உங்கள் இந்த பாராட்டு CSK.
நன்றி.
உண்மையில், அகநாழிகை = கணையாழி.
csk,
நன்றி! (நன்றியும், செ.ஜே!)
expecting,

பரத்தை கூற்று. :-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்