அழகான இசை

இளையராஜா உட்பட யாருடைய இசை ஆல்பத்துக்கும் இதுவரை நான் விமர்சனம் எழுதியதில்லை (முன்பு இந்தி கஜினி பாடல்கள் பற்றி எழுதியது கூட rediff.comல் அதற்கு ஐந்து ஸ்டார்கள் கொடுத்த அநியாயத்தைப் பொறுக்க முடியாமல் தான்)‌. ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராய் அறிமுகமாகும் உன்னைப் போல் ஒருவன் படத்தின் பாடல்களுக்கு இப்போது எழுதிக் கொண்டிருப்பது தான் முதல் முறையாக அத்தகையதொரு முயற்சி.
  1. நிலை வருமா - பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் கமல்ஹாசன் குரலில் இதமாய் வழியும் இப்பாடல் தான் ஸ்ருதிஹாசன் என்கிற இசையமைப்பாளரிடம் நம்மை நிறைய‌ எதிர்பார்க்க வைக்கிறது.
  2. அல்லா ஜானே - இஸ்லாமிய சங்கீத முலாம் பூசப்பட்டு கமல்ஹாசன் கொஞ்சம் வித்தியாசமாக‌ குரலை மாற்றி முயற்சித்திருக்கும் பாடல் இது. நன்றாகத்தான் இருக்கிறது. Convincing.
  3. வானம் எல்லை - ஸ்ருதிஹாசனின் குரலில் வரும் ஆரம்ப தமிழ் வரிகளுக்கான இசை மட்டும் அற்புதம். மற்றப‌டி Blaaze இடம் காணப்படும் அதே வழக்கமான பாலிவுட் பாணி இரைச்சல்.
  4. உன்னைப்போல் ஒருவன் - அக்ஷரா, ஸ்ருதி, சுப்புலக்ஷ்மி (கெளதமியின் மகள்) மற்றும் சிலர் பாடியிருக்கும் title song ஆன இப்பாடலிலும் வரிகளுக்கான இசை மட்டும் நன்று. OKish kind.
  5. அல்லா ஜானே Remix - ஸ்ருதிஹாசனின் குரல். ச்சும்மா, கணக்குக்கு.
ஆல்பத்தில் மொத்தமாயிருக்கும் ஐம்பது சொற்களினூடாக மனுஷ்யபுத்திரனை தேடிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி, தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த பாடல் 'நிலை வருமா' தான் (கடந்த 48 மணி நேரங்களாக அந்த பாடலையே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்). I feel she has the "spark".

Welcome Miss.Shruthi!

Comments

Karthick said…
நிலை வருமா பாடியது சாதனா சர்கம் அல்ல.பாம்பே ஜெயஸ்ரீ என நினைக்கிறேன்.

கார்த்திக் S
Karthick said…
அதுபோலவே, மனுஷ்யபுத்திரன் ”அல்லா ஜானே” பாடல் மட்டும் எழுதி இருக்கிறார்.மற்றவை கமல்ஹாசனின் வரிகள்.மேலும், ”வானம் எல்லை” பாடலில் வரும் ராப் கூறு மட்டும் ப்ளேஸினுடையது.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்