தேசிய திரைப்பட விருதுகள் - சில‌ கேள்விகள்

இன்றைய‌ 55வது தேசிய திரைப்பட விருதுகள் ஏமாற்றமளிக்கிறது.
  • தசாவதாரம் கமல்ஹாசனை விட காஞ்சீவரம் பிரகாஷ்ராஜ் எந்த வகையில் உசத்தி ஆகிறார்? (அன்பே சிவம் கமல்ஹாசனையும், பிதாமகன் விக்ரமையும் ஒப்பிட்டு முன்பு இதே தான் தோன்றியது).
  • சோகத்தைக் கொட்டி எடுத்தால் அதுவே சிறந்த படம் என யார் சொன்னது? (காஞ்சிவரம் நல்ல படம் தான்; ஆனால் சுப்ரமணியபுரம், Taare Zameen Par போன்ற படைப்புகளை காட்டிலும் உயர்ந்ததில்லை).
  • 2007ல் வெளியான பெரியார் படத்துக்கு 2008க்கான சிறந்த தமிழ் படம் என எப்படி விருது கொடுத்தார்கள்? (பூ, அஞ்சாதே போன்ற படங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? என்பது இதன் துணைக்கேள்வி).
  • இதே கேள்வி தான் Special Effectsல் விருது வாங்கியிருக்கும் 2007ல் வெளியான சிவாஜி படத்துக்கும் (ஒரு வேளை சாகித்ய அகாதமி மாதிரி ஏதேனும் carry-forward முறை பின்பற்றப்படுகிறதா?).
  • தாதா சாகேப் பால்கே விருதுக்கான‌ தகுதியோடு யாருமே இல்லையா? (கடைசியாக அறிவிக்கப்பட்டது 2006ல். நினைவுக்கு வரும் பெயர்கள் இளையராஜா, மணிரத்னம், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான்).
விருதுகளின் மீதான நம்பிக்கையே போய்க் கொண்டிருக்கிறது.

பிற்சேர்க்கை: (செப்டெம்பர் 08, 2009 காலை 10:30 மணிக்கு எழுதப்படுகிறது)

இந்த‌ விருதுகள் 2007ம் ஆண்டுக்கானது என்கிறாள் என் மனைவி.

அதாவது நான் கவலைப்பட்டிருக்கும் 2008ல் வெளியான தசாவதாரம், சுப்ரமணியபுரம், அஞ்சாதே, பூ போன்ற படங்கள் இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லையாம்; அடுத்த வருடம் தான் 2008க்கான விருதுகளை அறிவிப்பார்களாம். இம்முறை விருது வாங்கியிருக்கும் காஞ்சீவரம், பெரியார், Taare Zameen Par, Chak De India, Om Shanti Om, Jab We Met, Gandhi My Father, 1971 போன்ற படங்களை வைத்துப் பார்க்கும் போது, அவள் சொல்வது சரியென்றே எண்ண‌த் தோன்றுகிறது (அவை அனைத்துமே 2007ல் வெளியானவை).

ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் இடிக்கிறது: பொதுவாய், படத்துக்கு சென்ஸார் போர்ட் ச‌ர்ட்டிஃபிகேட் வாங்கப்படும் தேதியே படம் வெளியான வருடமாக தேசிய விருதுகளுக்கு எடுத்துக் கொள்ள‌ப்படும். 2007ம் ஆண்டு வெளியான சிவாஜி, போன ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் (அதாவது என் மனைவியின் கணக்குப்படி அது 2006ம் ஆண்டுக்கானது) சிறந்த கலை இயக்கத்திற்கான விருதைப் பெற்றது. அதே படம் இந்த ஆண்டும் சிறந்த Special Effectsக்கான விருதைப் பெற்றிருக்கிறது. அது எப்படி?

யாராவது தெளிவாய் விஷயம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

Comments

Anonymous said…
romba mukkiyam dasavadarathukku virudhu......

jakki chan adicha comment than gnabagathukku varudhu unga natla actors ku panjama enna ...10 veshatha oru aal podrare nu ketaram......

yov kamal ethavathu oru padatha copy adikkama eduthurukkan nu sollu parpom...

a wednesday madiri padatha kooda kamal la yosichu sondhama edukka mudiyathu.......

charuonline padikringathane.....

adikkrathu ellam copy ithula desiya virudhu vera venuma..... keraham.....

copy adicha list sample ku.......

நம்மவர் – To Sir with Love

மகளிர் மட்டும் - 9 to 5

அன்பே சிவம் - Trains, Planes and Automobiles

தெனாலி - What about Bob?
NILAMUKILAN said…
தசாவதாரம் படத்திற்கு கமலுக்கு விருது வழங்கப்படவில்லை என்ற உமது ஆதங்கம், சிரிப்பை தான் வரவழைக்கிறது. கமல் ரசிகனாக நீங்கள் இருப்பதால் உங்கள் ஆதங்கம் புரிகிறது. நடுநிலையோடு பார்த்தால், தசாவதாரம் கொடிகளில் கொட்டப்பட்ட ஒரு குப்பை (சிவாஜியை போல) அவ்வளவுதான். சிவாஜியின் ஒன்பது வேட சாதனையை முறியடிக்கவேண்டும் என்ற அவசரமே அந்த படத்தில் தெரிகிறது. ஒரு மாருவேடப்போட்டியை பார்த்த மனநிலையில் அந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். பிரகாஷ் ராஜ் காஞ்சிவரம் படத்திற்கு சிறந்த நடிகர் விருது வாங்கினதுக்கு முற்றிலும் தகுதியானவரே.
Kaarthik said…
Last year National Award for the Best Art Direction wa given to a Punjabi Movie. Shivaji was not at all sent for National Awards. Paruthi Veeran, which was released in 2007 was sent since the Censor date of the movie was around December 2006. This time the awards were given to the movies released in 2007.

Like you, I too expect Kamalhaasan would get the Best Actor award for Dasavatharam next year.
@ Kaarthik
Here are the links which made me believe that Sivaji got national awards in both the years 2007 and 2008:
http://en.wikipedia.org/wiki/National_Film_Award_for_Best_Art_Direction
http://en.wikipedia.org/wiki/National_Film_Award_for_Best_Special_Effects
Can you please clarify?
in order to be eligible for consideration of the jury, a film should be certified by the Central Board of Film Certification between January 1 and December 31.
http://en.wikipedia.org/wiki/National_Film_Awards#Juries_and_rules
viki said…
அன்பே சிவம் கமல்ஹாசனையும், பிதாமகன் விக்ரமையும் ஒப்பிட்டு முன்பு இதே தான் தோன்றியது/////
.
.
அன்பே சிவம் 2002 இல தணிக்கை பெற்றதால் அந்த வருடத்தில் போட்டியிட்டது.பிதாமகன் 2003 இல தணிக்கை பெற்றது.
இருந்தாலும் அன்பே சிவத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது எனக்கும் ஏமாற்றமே

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்