இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) 1) இந்த உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: இனிப்புகள் (தின்பண்டங்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் முதலியன) குளிர்பானங்கள் (சோடா கலந்தவை, அடைக்கப்பட்ட ஜூஸ்கள்) பேக்கரி உணவுகள் (ப்ரெட், பிஸ்கெட், குக்கீஸ், கேக் முதலியன) மைதா உணவுகள் (பரோட்டா, பஃப்ஸ், மேகி முதலியன) எண்ணெயில் பொரித்த உணவுகள் (முறுக்கு, பூரி, சிக்கன் 65 முதலியன) எண்ணெய் மிதக்கும் உணவுகள் (பிரியாணி முதலியன) சிவப்பு மாமிசங்கள் (Red Meat - ஆட்டுக் கறி முதலியன) சர்க்கரை மிகுந்த பழங்கள் (மா, பலா, வாழை முதலியன) உலர்கனிகள் (பேரிச்சை, திராட்சை முதலியன) பழச்சாறுக
Comments
I don't think so.
A very little resemblance.