Posts

Net Neutrality - ஓர் எளிய அறிமுகம்

சென்ற மாத மத்தியில் செய்திகளில் அதிகம் அடிபட்ட வண்ணமிருந்ததால் நெட் ந்யூட்ராலிட்டி குறித்து வாசிக்கவும் எழுதவும் விரும்பி இருந்தேன். என்னவென்றே புரியாமல் நிறையப்பேர் ஆதரித்துக் கொண்டிருந்தது தான் முக்கியக் காரணம். ஆனால் தமிழ் - சித்திரை இதழ் பணிகள், கொல்கத்தா, சென்னை, கோவை பயணம் எனத் தொடர் ஓட்டத்தின் காரணமாய் சமயம் கிட்டவில்லை. இப்போது மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவெடுக்கவிருக்கும் கட்டத்தை எட்டி விட்டது. இடையில் ஜெயமோகன் இது பற்றி நான் எழுதி இருப்பேன் என நினைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார் . அந்த ஊக்கத்தின் நீட்சியாய் தாம‌தமானாலும் பரவாயில்லை என இது குறித்து எழுதத் தீர்மானித்தேன். அவருக்கு நன்றி. * நெட் ந்யூட்ராலிட்டி என்பதை இணையச் சமநிலை என்று பெயர்க்கிறேன். அது என்ன என்று அறியும் முன் இணையம் (internet) எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வோம். ஒன்று அதன் விஞ்ஞானம். மற்றது அதன் பொருளாதாரம். இணையத்தில் நாம் தினசரி பயன்படுத்தும் கூகுள், ஜிமெயில், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், அமேஸான் அனைத்துமே வலைச் சேவைகள் (web services). இவற்றை கணிப்பொறி, ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் உள்ளிட்ட க...

ஆண்குறி அதிகாரம்

Image
India's Daughter (Documentary) முதலில் குடும்பம் குட்டியை விட்டு ஈராண்டு இந்தியாவில் தங்கி 2012 டெல்லி ரேப் பற்றிய டாகுமெண்டரியை இயக்கிய லெஸ்லி உட்வினுக்கு வாழ்த்துக்களும், அதை இந்தியாவில் ஒளிபரப்பவியலாமல் போன சூழலுக்காக‌ வருத்தங்களும். ஆங்காங்கே உறுத்தல்களும் மறுப்புகளும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாய் இது ஒரு நல்ல பதிவு. அவசியமானதும் கூட. இதில் குற்றவாளி பேசி இருப்பதைப் போலான மதிப்பீடுகளும் நிலைப்பாடுகளும் தான் பெரும்பாலான இந்திய ஆண்கள் கொண்டிருக்கிறார்கள் (கணிசமான‌ பெண்களுமே கூட). கிட்டத்தட்ட இது இந்திய தேசம் தன்னைக் நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலத்தான். அதனாலேயே இதை நாம் அனைவரும் தவறாது பார்க்க வேண்டியது முக்கியமாகிறது. இந்த அரசுத்தடை என்பது அறிவோ அறமோ அற்றது. இதில் தான் இந்தியாவின் மானம் போகிறதென்றால் தினம் தினம் தேசம் முழுக்க பரவலாய் அறிந்தும் அறியாமலும் நடக்கும் சுமார் 50 பாலியல் வல்லுறவுகள் கம்பீரமாகவா நிற்கின்றன‌? இந்த டாகுமெண்டரியின் முக்கிய அங்கமாய் நான் கருதுவது குற்றவாளிகளின் ஒருவனான முகேஷும் குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான இரண்டு வழக்கறிஞர்களும் பொதுவா...

தமிழ் மின்னிதழ்

Image
நியாயமாய் இக்குறிப்பை சுமார் ஒன்றரை மாதம் முன்பே எழுதியிருக்க வேண்டும். சமயம் அமையவில்லை. ஆனால் நம்மூரில் குழந்தை பிறந்ததைச் சொல்லத் தவறி விட்டு காதுகுத்துக்கு அழைப்பதில்லையா, அது போல் பாவிக்கவும். தமிழ் என்ற இலவச காலாண்டு மின்னதழை கடந்த பொங்கலிருந்து துவக்கி இருக்கிறேன். அது பற்றியதே இப்பதிவு. தமிழ் பொங்கல் 2015 இதழ் - http://tamizmagazine.blogspot.in/2015/01/blog-post.html இதழ் தொடங்கியது ஏன் என்பது பற்றி முதல் இதழின் தலையங்கத்தில் சுமாராய்க் குறிப்பிட்டிருக்கிறேன். சிரமம் பாராது வாசித்து விடவும். அதில் அடங்காத சில விஷயங்களை மட்டும் இங்கே பேசுகிறேன். அப்புறம் அதற்கான எதிர்வினைகள். ஏன் மின்னிதழ்? இரண்டு காரணங்கள். ஒன்று அதுவே எனக்கு வசதி. இரண்டு அது தான் எனக்கு சாத்தியம். பத்திரிக்கை அச்சிட்டு விற்றுத் தீர்க்க ஆசை தான். ஆனால் அதற்கான பொருளாதரம், அறிவு, ஆதரவு தற்சமயம் எனக்கில்லை. நான் இணையத்தில் புழங்குபவன். அதனால் மின்னிதழாகக் கொண்டு வருகிறேன். இதன் வீச்சு குறுகியதே. கணிப்பொறியோ, ஸ்மார்ட்ஃபோனோ வைத்திருப்பவர் மட்டுமே இன்று என் இதழை வாசிக்கவியலும். ஆனால் வேறு வழியில்லை. நிதம்...

வெள்ளிச் சகசிரம்

Image
இன்று சௌம்யா (@arattaigirl) ௨௰௫௲ (பண்டைத் தமிழில் 25,000 என்பதை இப்படி எழுத வேண்டும்) ஃபாலோயர்களை அடைந்திருக்கிறார். அவர் பற்றி ட்விட்டரில் புழங்கும் 25 பேரின் கருத்துக்களைப் பெற்று இங்கே தொகுத்திருக்கிறேன்: * வார்த்தைகளை கோர்க்கும் பொறியியல், அவனதிகார ஆய்வியல், அழகு மொழியியல், கனவுகளின் அழகியல், சரிங்க எனும் வேதியியல், No அரசியல். #அரட்டைகேர்ள் ஆல்தோட்டபூபதி (@thoatta) *   (டிஸைன்: மீனம்மா கயல்) எல்லாருக்கும் பிடித்தமான பெண் என்பதாலேயே எனக்கு சுத்தமா பிடிக்காது அவங்கள, என்னையும் வசீகரித்து நம்ம சௌம்யாப்பா என்றே சொல்ல வைத்து விட்டார். மீனம்மா (@meenammakayal) * Heroine of Tamil Twitter! எண்ணங்களில் மிளிரும் அழகும், வார்த்தைகளில் ஒளிரும் வசீகரமும் கொண்ட ட்விட்டரின் முடிசூடா ராணி. Kaarthik Arul (@kaarthikarul) * இந்த வயதில் இத்தனை முதிர்ச்சியான எண்ணங்கள் சாத்தியமா எனும் ஆச்சர்யம் எப்போதும் ஏற்படுத்தும் அரட்டையின் பல ட்வீட்ஸ்! மிருதுளா (@mrithulaM) * அச்சு உலகம் தவற விட்ட அச்சு அசல் கவிதாயினி!  வார்த்தைகளை சொல் ந...

நிகழ மறுக்கும் அற்புதம்

Image
"Being sexy comes from confidence and accepting your body and mind as a woman."  - Shruthi Haasan (in an interview to The Times of India, February 4, 2014) இன்று திகதி ஜனவரி 28. ஷ்ருதி ஹாசனின் பிறந்த நாள். ('ஷ்ருதி'யை 'ஸ்ருதி' என்று தான் எழுதிக் கொண்டிருந்தேன், சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும் வரை. அவரே குத்திக் காட்டிய பின் திருத்திக் கொண்டு தானே ஆக வேண்டும்!) கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அவர் எனக்குப் பிடித்தமான நடிகை. ( 3 என்ற ஒரு படம் தவிர்த்து வேறு படங்களில் அவர் தன் நடிப்புத் திறனை அவ்வளவாய் வெளிப்படுத்தியதில்லை என்பதால் இங்கே நடிகை என்ற இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது. ஆனால் இன்றைய தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வெகுஜனத் திரைப்படங்களின் நடிகைகளோடு ஒப்பிடுகையில் எவ்வகையிலும் குறைவில்லை என்பதால் அதைத் தொடர்கிறேன்) ஷ்ருதியின் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் எல்லாமே மோதிரைக் கை குட்டுக்கள். ஆறு வயதில் முதல் பாடலே இளையராஜாவிடம் ( தேவர் மகன் - போற்றிப் பாடடி பொண்ணே ...). அப்புறம் யுவதியான பின்னும் முதல் பாடல்...

ஹரிதாவும் கீதனும்

Image
ஒன்றரை ஆண்டுகள் முன் நான் முன்பு பணியாற்றிய அலுவலக நண்பர் crowd funding மூலம் அவரது கல்லூரி நண்பர் ஒரு படமெடுத்திருப்பதாகச் சொல்லி அதன் ப்ரிவ்யூவுக்கு அழைப்பு விடுத்தார் (அவரும் பணம் போட்டிருந்தார்). அந்தப் படம் குறையொன்றுமில்லை . அது பற்றிய என் கருத்துக்களை இயக்குநருக்கு (ந‌ண்பரின் மூலம்) தெரியப்படுத்தி இருந்தேன். பிறகு பல  காரணங்களால் படம் தாமதமாகி நான் வேலையும் மாறி விட்டேன். சென்ற அக்டோபரில் படம் வெளியாகி இருக்கிறது. அது இப்போது தான் என் கவனத்துக்கு வந்தது. அப்போது எழுதிய அந்த‌ விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன். * முதலில் படத்தின் லைன். கிராம‌ங்களின் (குறிப்பாய் விவசாயிகளின்) spending potential-ஐ வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு கார்ப்பரேட் இளைஞனின் கதை. ஊடுபாவாய் அவனது பிடிவாத‌, அலட்சிய‌ attitude-ம், அதனால் பாதிப்படையும் அவன் சொந்த வாழ்க்கையும் காட்டப்படுகிறது. இது தான்  குறையொன்றுமில்லை படம் பற்றிய‌ என் புரிதல். படத்தின் மையச்சரடான விஷயம் ஒரு மேலோட்டமான பொருளாதார சங்கதி பற்றியது. ஆனால் இந்த அளவிலான‌ மேலோட்டமான பொருளாதாரம் கூட தமிழில் எனக்குத் தெரிந்து எந்தப் படத...

தமிழ் மின்னிதழ் - ஒரு கடிதம்

தமிழ் மின்னிதழ் குறித்த ஓர் அனுபவ / அறிமுகப் பதிவை என் தளத்தில் எழுத வேண்டும். நேரம் கிட்டியபாடில்லை. இடையே இதழ் குறித்து வந்த ஒரு கடிதத்தை இங்கே பகிர்கிறேன். அஷோக்  கமல் ரசிகர். ட்விட்டரில் எழுதி வருபவர் ( @ashoker_UHKH ). அசோகர் என்ற  பெயரில் தமிழ் மின்னிதழிலும் எழுதி இருக்கிறார். இதழ் குறித்த அவர் எழுதியிருந்த ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் அவர் அனுமதியுடன் சற்று எடிட் செய்யப்பட்டு இங்கே. அவரது கருத்துக்களுக்கு நன்றி. * டியர் சிஎஸ்கே, வணக்கமும், வாழ்த்துக்களும்! ஒரு இதழ் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல, அதை செயல்படுத்துவதுதான் பெரிய சவால் என்பது ஏற்கனவே அரைகுறையாய் முயன்று தோற்றவன் என்ற முறையில் நன்கறிவேன். நீங்கள் சாத்தியம் ஆக்கியதற்கு பாராட்டுக்கள். :-) முழுவதும் படித்துவிட்டு எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இவ்வளவு தாமதமாக இக்கடிதம். இதை விமர்சனக் கடிதம் எனக் கொள்ளாமல் முழுத் தொகுப்புக்கான நீ...ண்ட பின்னூட்டம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறேன். எனது வழமையை மீறி மிகப் பெரிதாக இதை எழுதுகிறேன். நீளமான கட்டுரைகள் எழுத நீங்கள் சளைத்தவரில்லை என்பதால...

தமிழ் சினிமா 2014 : தரவரிசை

மிகச் சிறப்பானது எனச் சிலாகிக்குமளவு சென்ற‌ ஆண்டு ஒரு படம் கூட இல்லை. ஆனால் முக்கியமான விஷயம் பல சுவாரஸ்யமான வித்தியாசமான முயற்சிகள். எந்த நட்சத்திரத்தையும் நம்பாமல் கதையை அல்லது திரைக்கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படங்கள். அதுவே சென்ற வருடத்தைய தமிழ் சினிமாவின் பிரதான‌ அடையாளம் எனலாம். சிறந்த படங்கள் பூவரசம் பீப்பீ ஜிகர்தண்டா மெட்ராஸ் பண்ணையாரும் பத்மினியும் சதுரங்க வேட்டை மீகாமன் ஜீவா கோலி சோடா முண்டாசுப்பட்டி நல்ல படங்கள் அரிமாநம்பி கோச்சடையான் 3D சரபம் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் மஞ்சப்பை வாயை மூடிப் பேசவும் வல்லினம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் நாய்கள் ஜாக்கிரதை சுமாரான படங்கள் லிங்கா வேலையில்லாப் பட்டதாரி தெகிடி பிசாசு கத்தி நீ எங்கே என் அன்பே மோசமான படங்கள் காவியத் தலைவன் குக்கூ நான் சிகப்பு மனிதன் பூஜை வீரம் ஜில்லா

சென்னை புத்தகக் காட்சி - 2015

Image
பாரம்பரியம் மிக்க‌ சென்னை புத்தகக் காட்சி நாளை துவங்குகிறது. மாதொருபாகன் மன்னிப்பு என்ற துன்பியல் நிகழ்வு தவிர‌ என்னவோ இம்முறை அத்தனை பரபரப்பு இல்லாதது போல் தோற்றம் - பொதுவாகவும் சரி, என் வரையிலும் கூட! புத்தகக் காட்சி பற்றிய தகவல்கள்: இடம்: YMCA மைதானம், நந்தனம் | நாள்: 09 ஜனவரி 2015 – 21 ஜனவரி 2015 நேரம்: விடுமுறை நாட்களில்: காலை 11:00 - இரவு 9:00 / வேலை நாட்களில்: மதியம் 2:00 - இரவு 9:00 என் புத்தகம் கிடைக்கும் ஸ்டால்களின் விபரங்கள்: சிக்ஸ்த் சென்ஸ் [ஸ்டால் எண்: 343, 344, 411, 412 ] - வெட்கம் விட்டுப் பேசலாம் (NEW) கிழக்கு பதிப்பகம் [ஸ்டால் எண்: 634, 635 ] - குஜராத் 2002 கலவரம் & சந்திரயான் அம்ருதா பதிப்பகம் [ஸ்டால் எண்: 111 ] - கிட்டதட்ட கடவுள் கற்பகம் புத்தகாலயம் [ஸ்டால் எண்: 38, 39 ] - தேவதை புராணம் அகநாழிகை பதிப்பகம்   [ஸ்டால் எண்: 304 ] - பரத்தை கூற்று இந்த நூல்கள் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்: http://www.writercsk.com/p/blog-page_1.html ஸ்டால் லேஅவுட்டை இங்கே பார்க்கலாம்: http://bapasi.com/wp-content/uploads/2014/01/CBF-2015-Layout.pdf கண்...

ச்சீய்

Image
இந்த 2014 ஆண்டில் அவ்வப்போது சில கட்டுரைகள் தவிர தனி நூல் முயற்சியாய் நான் ஏதும் எழுதவில்லை. சொந்த வாழ்வின் அழுத்தங்களும் புதிய பணிக்கு மாறி இருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள். எழுத‌ ஒப்புக் கொண்ட என் மனதிற்குகந்த ஒரு ப்ரொஜெக்ட்டையும் எழுத முடியவில்லை. பதிப்பிக்கத் தயாராய் மூன்று தொகுப்பு நூல்கள் கையில் இருந்த போதும் பதிப்பிக்க ஆள் இல்லை. தமிழ் வாசிப்புச் சூழல் அப்படி. அதனாலேயே பதிப்பகங்கள் தயங்குகின்றன. இந்நிலையில் தான் வரும் 2015 சென்னைப் புத்தகக் காட்சிக்கு என் பங்களிப்பாய் வருகிறது வெட்கம் விட்டுப் பேசலாம் . வெளியீடு சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் . 2012 - 2013 ஆண்டுகளில் குங்குமம் இதழில் 25 வாரங்கள் வெளியான ச்சீய் பக்கங்கள் தொடரின் தொகுப்பு தான் இது. (நூலுக்கென புதிதாய் எழுதிச் சேர்த்த ஒரு சிறப்பு அத்தியாயமும் உண்டு.) புத்தகத்திற்கு (தொடருக்கே கூட) நான் தீர்மானித்த தலைப்பு ச்சீய் என்பது தான். ஆனால் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் இதர நூல் தலைப்புகளின் ஸ்டைலில் இதைத் தீர்மானித்திருக்கிறார்கள். இத்தலைப்பு எளிமையாய், பொருத்தமானதாய் இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது! சமரசத்த...