பரத்தை கூற்று : சில BUZZகள்

nesamitran online :
இந்தத் தொகுப்பைப் பற்றிய விரிவான பார்வையை வாசித்தால்தான் சொல்லக் கூடும்.வாசிக்கக் கிடைத்த வரிகளில் வலியை எள்ளலுடன் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி மதிப்பீடு!

narsim 267 :
அவசரப்பட்டுட்டீங்களே தல, அல்லது நான் தாமதப்பட்டேன். இந்தப் புத்தகம் குறித்து விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த மனுஷன் மீது அப்படி ஒரு ப்ரியம் வந்துவிட்டது. வாழ்க சிஎஸ்கே. கன்னிப் பெண்ணும் கன்னி ஆணும் புணர்தலறிது என்பதில் உயர்த்திய புருவம் இன்னும் இறங்கவில்லை. எழுதிக்கொண்டிருக்கிறேன். என் பதிவில் வரும்.

vijay mahindaran :
thoguppu padithan... vidayasamana muyarchi...kathi mel nadai.... thoguppu nalla irukku padinka nesan.... valthukkal csk....... முழு தொகுப்பையும் படித்துவிட்டேன் ..வித்யாசமான முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை..பரத்தையர் கூற்று பலபேரின் கவனத்தை நிச்சயம் கவரும்....

வால்பையன் :
படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. என்ன வெட்கம், காமம் காணக்கூடாத ஒன்றா என்ன!?

nagarajan kadhiresan :
'பரத்தை கூற்று' தொகுப்பின் 'பாலை' பகுதி பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் வறண்டு காணப்பட்டாலும், வாசிப்பவர்கள் நெய்தலிலேயை உச்சத்தை அடைந்து விடுகிறார்கள் என்பது உண்மை.

nagarajan kadhiresan :
'பரத்தை கூற்றை' பிற மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டிய எல்லா தகுதியும் பெற்ற கவிதைத் தொகுப்பாகவே கருதுகிறேன்.

Shaggy Boy :
அந்த வலியை நானும் உணர்கிறென்! ப‌கிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Mothi ;) :
koncham athirchiya irunthathu machi padikum pothu...

nagarajan kadhiresan :
"பரத்தை கூற்று - சாரு அழைக்கிறார்". 'Sun Pictures'யிடமிருந்து கற்றுக் கொண்ட விளம்பர யுக்தியா? 1/2

nagarajan kadhiresan :
"பரத்தை கூற்று - சாரு அழைக்கிறார்". நண்பனுக்கு வருங்காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை போல? 2/2

Gopi R :
எனக்கு இது போன்ற கவிதைகள் சரிவரப் புரிவதில்லை. அனிதா ரத்னத்தின் நல்ல கவிதை ஒன்று உண்டு சுதந்தரம் பற்றி - காதலுக்காக எதையும் இழப்பேன் / சுதந்தரத்துக்காகக் காதலையும் இழப்பேன். எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் இந்தக் கவிதைகளைப் பற்றி. உதாரணம், மனசு தொடுபவனை எப்படி எதிர்பார்க்க முடியும்? அவளிடம் வருபவன் அதற்காக வருவதில்லையே? இது ஒரு அதீத எதிர்பார்ப்பு என்று எனக்குப் படுகிறது. If she is cribbing it is fine. If she is expecting, then it is wrong.

Rohini Siva :
சுதந்திரம் என்பது / புணர்தல் அல்ல / புணர மறுத்தல். இந்த சுதந்திரம் எந்தப் பெண்ணுக்கு இருக்கிறது? சி.சரவணக்கார்த்திகேயனின் ‘பரத்தைக்கூற்று’. i guess she is declaring , no cribbing or expectation in that tone, but all said ,lets wait to read the full context to comment, so lets reserve our comments

ரோஸ்விக் :-) : அருமையான புத்தகம் வெளியிட்டிருக்கிறாரு. எனக்கு தலைவருதான்.CSK முழுப்புத்தகமும் இன்னும் படிக்கவில்லை. வேறொரு தேசத்தில் இருப்பதால்... ஆங்காங்கே காணக்கிடைத்த கவிதைகள் அருமை. பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அன்புடன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar : சிஎஸ்கேவின் பரத்தையர் கூற்று குப்பை. விரிவாக வேண்டுமானாலும் எழுதுகிறேன். ஆக மோசமான குப்பை இது. எழுதலாமா என்று அவரிடம் கேட்டுவிடுகிறேன். (அவர் அனுப்பிய பிரதி கொஞ்சமாச்சும் முக தாட்சண்யம் வேணாமா!)

senshe indian :பரத்தைக் கூற்று கவிதைத் தொகுப்பில் நண்பர்கள் பகிர்ந்த சில கவிதைத் துணுக்குகளை வாசித்த போது எனக்கு பிடித்திருந்தது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்