எந்திரன் கதை என்னுடையது!

எந்திரன் படத்தின் ஆராதக்கதை மற்றும் காட்சியமைப்புகள் தன்னுடையது என இரண்டு எழுத்தாளர்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் செய்திருக்கின்றனர்.

கதைத்திருட்டு என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மிக சகஜமான ஒன்று தான் (கமல்ஹாசனின் தசாவதாரம் படமே அப்படித்தான் என்கிறார்கள்). சினிமாக் கதைகளைப் பதிவு செய்யும் இடத்திலேயே இதை வேவு பார்த்து தேவையானவர்களுக்கு சுடச்சுட சேர்ப்பித்து விடுகிறார்கள் எனப் பிரபல எழுத்தாளர் ஒருவர் சொல்லக் கேள்வியுற்றேன்.

ஆரூர் தமிழ்நாடன் என்பவர் அமுதா தமிழ்நாடன் என்ற பெயரில் உதயம் (ஏப்ரல் 1996) இதழில் எழுதிய‌ ஜூகிபா.. என்ற சிறுகதையையும், பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர்  மாலைமதி (ஜூலை 13, 1995) இதழில் எழுதிய ரோபோட் தொழிற்சாலை நாவலையும் முன்வைத்து எந்திரன் மேல் இந்தக் கதைத்திருட்டுப் புகாரினை அளித்திருக்கிறார்கள்.

இதில் தமிழ்நாடனின்  ஜூகிபா.. சிறுகதையை இன்று தான் வலையில் (1, 2, 3, 4) வாசித்தேன். நாசரின் ரோபோட் தொழிற்சாலை நாவலை அது வெளியான போதே படித்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் - ஆம். இவை இரண்டின் வலுவான பாதிப்பு நிச்சயம் எந்திரனில் இருப்பதை மறுக்க முடியாது. இவை மட்டுமல்ல, ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்றிலும் ரோபோவுக்கு உணர்ச்சிகள் பெற்று காதலிப்பதாய் வரும் (பெயர் நினைவில்லை, எப்படியும் வெளியாகி பத்து வருடமாவது இருக்கும்). அவ்வளவு ஏன், 2001ன் ஆரம்பத்தில் ஆனந்த விகடனுக்கு அனுப்பி பிரசுரமாகாமல் திரும்பி வந்த எனது நியூட்டனின் மூன்றாம் விதி சிறுகதையில் கூட இது ஒரு பகுதியாய் வருகிறது (படத்தில் வரும் Robo Sapiens என்ற வார்த்தையைக்கூட அப்போதே அதில் பயன்படுத்தியிருந்தேன்).

But, இதெல்லாம் போதாது எந்திரன் த‌ன்னுடைய கதை என்பதைப் பறைசாற்றிக்கொள்ள.

இப்பிரச்சனையில் என்னுடைய வெர்ஷன் என்னவென்றால், இயக்குநர் ஷங்கர் எந்திரன் படத்தின் ஆதார இழையை கண்டடையும் முன்பு மேற்குறிப்பிட்ட கதைகள் உட்பட (என்னுடையதைத் தவிர) தொடர்புடைய ரோபோட்டிக் கதைகள் மற்றும் திரைப்படங்கள் பலவற்றை நிச்சயம் படித்திருப்பார் / பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். அவற்றின் ஒட்டுமொத்த‌ பாதிப்பின் அடிப்படையிலேயே இப்படியொரு சயின்ஸ் ஃபிக்ஷனை அவர் சினிமாவாக எடுக்க யோசித்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் சுஜாதா தான் எந்திரன் படத்தின் ஆரம்ப லைனை எழுதியவர் என்றால், அவருக்கு நன்கு அறிமுகமான‌ ஐசக் அஸிமோவ் நாவல்களின் - குறிப்பாய் The Bicentennial Man (1976) மற்றும் The Positronic Man (1993) போன்றவற்றின் - மேலோட்ட பாதிப்பிலேயே இதை உருவாக்கியிருக்க வேண்டும்.

நேரடி காப்பி இருக்காது; ஆனால் மறைமுக பாதிப்பு நிச்சயம் இருக்கும் என்பதே சாரம். இதை ஷ‌ங்கர் இப்போது ஒப்புக் கொள்ளத்தவறினால் அது நிச்சயம் unethical ஆன விஷயம் தான். ஒப்புக்கொள்வது மட்டுமின்றி படத்தின் டைட்டில் கார்டிலும் இது தொடர்பான நன்றியறிவித்தல் ஸ்லைடு ஒன்றினை இடம் பெறச் செய்தலே முறை.

என்னைப் பொறுத்தவரையில் இதை சினிமாவாக அதுவும் தமிழில் எடுக்க வேண்டும் என்று கற்பனை செய்த தைரியமும், பத்து வருடங்கள் மிகப்பொறுத்திருந்து அதை நேர்த்தியாய் உருவாக்கிக் காட்டிய நெஞ்சுறுதியுமே இப்படத்தில் ஷ‌ங்கரின் பிரதான பங்கு என்று தோன்றுகிறது. வேறு எவனுக்கு இதைப் படமெடுக்கும் திராணியிருக்கிறது? அவரில்லாமல் போயிருந்தால் இந்தக் கதைகள் பன்னெடுங்காலம் பரணில் தூசு தும்புக்கிடையே வெற்றுக்காகிதமாய் உறங்கிக் கிடந்திருக்கும் (நாசர் தன்னுடைய அந்த நாவலின் பிரதியே தற்போது தன்னிடம் இல்லையென்று விளம்பரம் செய்து, அதன் மூலம் யாரோ தந்துதவித் தான் திரும்பப் பெற்றிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்).

அந்தக் காரணத்திற்காகவே எந்திரன் முழுக்க முழுக்க ஷங்க‌ருடையது தான்.

Comments

அய்யயோ ஆரம்பிச்சிடீங்களா? இனிமே ஆளாளுக்கு வித விதமா இதே மேட்டர் போடுவாங்களே? :(
Anonymous said…
முக்கிய குறிப்பு:

http://ravidreams.net/forum/topic.php?id=104&replies=4#post-549


forward the above link to all of your contacts.
Anonymous said…
அட என்ன்னத சொல்ல?
ஷங்கரை முழுமையாக நம்ப முடியாது!!!
வலைஞன் said…
இதெல்லாம் சும்மா ஒரு buildup !

எந்திரனில் கதை இருக்குன்னு நம்பளை எல்லாம் நம்பவைக்க தயாரிப்பாளர் செய்யும் ஜோடனை !

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்