சகா : சில குறிப்புகள் - 12

ச‌கல தேசங்களின் கலாசாரப் பின்புலங்களிலிருந்தும் நம் சகாவுக்கு பெண்வழித் தொடர்புகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலொருத்தி சுப்ரியா (பெயரை ஆதி நீடலுக்கு உட்படுத்தி ஆபாசமாக்கி விட வேண்டாம் எனபது சகாவின் தாழ்மையான வேண்டுகோள்!). பன்னிரண்டாம் வகுப்பில் சகாவின் வகுப்புத் தோழியான இவள் பின் இளங்கலை தத்துவ இயல் படிக்க ஜப்பான் சென்று, தொடர்ந்து அங்கேயே அதே துறையில் முதுகலையும் படித்து கடந்த ஆண்டு தான் இந்தியா திரும்பினாள்.

ஜப்பானிலிருந்த ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து மின் அஞ்சல், மின்னாத அஞ்சல் எல்லாவற்றின் உதவியுடனும் சகவுடனான தனது பரிசுத்த நட்பைப் பேணிப் பாதுகாத்து வந்தவள், இந்தியா திரும்பியதும் செய்த முதல் வேலை சகாவை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தது தான். விருந்து என்றால் நீங்கள் நினைப்பது போல் ஆளுயர வாழையிலை இட்டு, தண்ணீர்த்துளி தெளித்து, பொன்னி அரிசிச்சோறு பொங்கி, சாம்பார், குழம்பு, கூட்டு, அவியல், பொறியல், ரசம், தயிர், மோர், அப்பளம், வடை, பாயாசம் சகிதம் பிரமாதப்படுத்தும் நம்மூர்த் தமிழ்ச்சமையல் அல்ல.

ஜப்பானிய பாரம்பரிய முறைப்படியிலான சஷிமி மற்றும் சுஷி என்ற வினிகர் தடவப்பட்ட‌ அரிசி சேர்த்து பக்குவமாய்ச் சமைக்கப்பட்ட கடலுணவு வகைகள். அதை எப்படிப் பரிமாறுகிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. தட்டோ, இலையோ கிடையாது. ஒரு பெண் மீது தான் அத்தனை உணவு வகைகளும் பரிமாறப்படும். ஆம். மல்லாக்கப் படுக்க வைக்கப்பட்ட துல்லிய நிர்வாணப் பெண்ணுடம்பு.


விருந்துக்கு முன்பு அப்பெண் இத‌ற்கென்றே இருக்கும் பிரத்யேகமான‌ வாசனையற்ற சோப்பைப் பயன்படுத்தி குளிர்ந்த நீரில் நன்கு குளித்து வந்திருப்பாள். சுத்தமான‌ அவளது வெற்றுடல் மீது மேற்சொன்ன‌ உணவு வகைகள் பரிமாறப்படும். விருந்து முடிய எத்தனை நேரமானாலும், எவ்வளவு சூடான அல்லது குளிர்ந்த‌ உணவுகள் மேலே வைக்கப்பட்டாலும் அந்தப்பெண் ஆடாது அசையாது படுத்திருக்க வேண்டும் என்பது ஐதீகம். ஜப்பானிய மொழியில் இம்முறைக்குப் பெயர் "Nyotaimori" என்று சொன்னான்.

சுப்ரியா தந்த அந்த அபார விருந்தில் பெயரே தெரியாத மீன் வ‌கைகளை தொண்டைக்குழி வரை தின்று ஏப்பம் விட்டு வந்திருக்கிறான் சகா. பேச்சுவாக்கில் என்னைப் பற்றிச் சொல்லப் போக (நானும் சகாவுடன் தான் and hence சுப்ரியாவுடன் தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்தேன் என்பது இங்கே உபரித் தகவல்), அடுத்த முறை விருந்தில் என்னையும் அவசியம் கலந்து கொள்ளும் படி அழைத்திருக்கிறாள். ஆளை விடு சாமி என்று கத்தரித்துக் கொண்டேன். ஆனாலும் இந்த வாய் சும்மாயிருக்கிறதா - "இவ்வளவு வசீகரமான விருந்து வைத்திருக்கிறாள், பதிலுக்கு நீ என்ன செய்தாய்?" என்று கேட்டேன்.

சகா மிகச்சுருக்கமாய் "Nantaimori" என்று முடித்துக் கொண்டான்.

*******

உயரமான பெண்களுக்கு மேற்படி விஷ‌யங்கள் சிறியதாகவே இருக்கும் என்பது சகாவின் சித்தாந்தம். அனுபவஸ்தன் சொல் அது. அதாவ‌து, அவன் கடந்து வந்த‌ சினேகிதிகள் சரிதத்தின் புள்ளியியல் விவரப்படி கண்டடைந்த‌‌ அபிப்பிராயம் இதுவாக இருக்கலாம் என்பது என் கருத்து. கல்லூரிக் காலத்திலிருந்தே அவ்வப்போது தன் பிரஸ்தாபங்களில் இதை வலியுறுத்தி வந்தவன் சில நாட்களுக்கு முன் திடீரென ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் இவ்விஷயத்தில் தன் கட்சி தான் என்றான் பரபரப்புடன்.


அவனது சிந்தனை முறைகள் எப்போதுமே எனக்கு தைலம் தேவைப்படும் அயர்ச்சியைத் தான் அளித்திருக்கின்றன - இப்போதும். கேமரூன் இயக்கிய‌ Avatar திரைப்படத்தில் வரும் பத்து அடி உயரமும் பதறாத கொங்கையும் கொண்ட Na'vi இன நங்கையான‌ கதாநாயகி Neytiriயை வைத்துத் தான் அவன் அப்படிச் சொன்னான் என்பது புரிந்தது. “Actually, she’s got to have tits but you need to google it” என்றான் விஷமப் பார்வையுடன்.

கேமரூன் வார்த்தைப்படி அது "Smoking Hot".

பிற்சேர்க்கையாய் அவன் சொன்ன மற்றொரு சங்கதி : அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகவாசிகள் தம் இடம் பற்றிக் குறிப்பிடும் போது "இது எங்க ஏரியா" என்று சொல்ல மாட்டார்கள், "இது எங்க வால்யூம்" என்று தான் சொல்வார்கள், ஏன்?

காரணம், அது 3-D.

Comments

வலைஞன் said…
copy to:
M/s
இராமதாசு
திருமாவளவன்
சீமான்
தங்கர்பச்சான்
பழ.கருப்பையா
நானும் என் நண்பரும் said…
நான்: இம்முறை ஏன் நண்பர் வரவில்லை,

ஒரு நாட்டின் பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் தெரியாமல், கிடைத்த சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வாறு எழுதலாமா???
என்றும் மாறா பழமொழியாடா,

கண்ணால் பார்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்......

விகிபிடியா மட்டுமே உண்மை ஆகாது. இந்தியாவின் மீடியாவைப்போல் இருக்கிறது உனது இப்பதிவு
இதோ இதற்கு கீழே உனக்காக சுஷி உணவிடம் பற்றிய youtube வீடியோ, நன்றாக பார்த்து தெரிந்து கொள்.
ஒரு நாட்டின் உண்மையை நன்றாக தெரிந்து கொள்ளாமல் உனது சிறுகற்பனைக்காக அவற்றினை கொச்சைப்படுத்தாதே, உனது ஐஸ்வர்யா ராயின் மேற்கோளைப் போல.........

http://www.youtube.com/watch?v=0b75cl4-qRE
WANDRER said…
நானும் 12th உங்க ஸ்கூல் தான் மச்சி :-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்