Posts

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

Image
பண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார். ஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது. இன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூகத்தில் சில பிரிவினர் மட்டும் செல்வச் ச...

நவஅரசியல் நடனம்

Image
சிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவலைத் தேர்ந்தெடுத்து ஓரமர்வில் வாசித்து முடித்த கையோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மிகச் சுவாரஸ்யமான நாவல். நாவல் என்று சொல்வதை விட ஷான் இதை ஒரு சினிமாவாகவே எழுதி இருக்கிறார் என்பேன். பெரும்பாலும் காட்சிரூபம் மற்றும் வசன வடிவம் தான். (ஓபனிங்கில் - அதாவது முதல் அத்தியாயத்தில் - உயரக் கட்டிடத்தின் மாடி மதில் மேல் குடித்து விட்டு வருண் மேலேறி நிற்பது முதல் க்ளைமேக்ஸில் - அதாவது இறுதி அத்தியாயத்தில் - வருண் தலைமைச்செயலக வாசலில் அமர்ந்திருப்பது வரை ஏராள உதாரணங்கள்.) சினிமாவாக்கும் ப்ரக்ஞையுடன் நாவலாக எழுதியிருந்தார் என்றால் அதில் பெருவெற்றி கண்டிருக்கிறார். தெளிவாக இது ஒரு வெகுஜன நாவல் என்பதால் அந்த அடிப்படையிலேயே நாவல் பற்றிய என் மதிப்பீட்டை முன்வைக்க விரும்புகிறேன். பனாமாலீக்ஸ் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் நவஅரசியல் நாவல் 'வெட்டாட்டம்'. தமிழில் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை போன்றோர் ஏராள அரசியல் சார்ந்த த்...

வானவில் (மின்னூல்)

Image
வாசிக்க‌ / தரவிறக்க: https://drive.google.com/file/d/1nS2o0CPr0aPiEjLtouv3jBGGztYlSSJd/view

சோஃபியா எனும் வனயட்சி

Image
A voice so thrilling ne'er was heard In spring-time from the Cuckoo-bird, Breaking the silence of the seas Among the farthest Hebrides. - William Wordsworth (The Solitary Reaper) இவ்விஷயத்தில் எதிரணி பாஜக என்பதை நீக்கி விட்டு, நிதானமாக யோசித்தாலுமே கூட சோஃபியா செய்தது தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அது கொண்டாடப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து சோஃபியா என்ற இளம் பெண் விமானத்திலும், விமான நிலையத்திலும் "ஃபாசிஸ பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக" என்று தமிழிசையைப் பார்த்துக் கோஷம் போட்டிருக்கிறார். மற்றபடி, அவர் மீது உடல்ரீதியான தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கவில்லை. அவரை மிரட்டவில்லை. கண்ணியமற்ற சொற்கள் ஏதும் பிரயோகிக்கவில்லை. தான் நம்பும் ஒரு கருத்தை - அதாவது இந்தியாவின் ஃபாசிஸ ஆட்சி நடக்கிறது என்பதை - அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பார்க்கும் போது பொதுவெளியில் பகிர்கிறார். அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் படி இதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு ("All citizens shall have the right to freedom of speech and ...

இரண்டாம் எமர்ஜென்ஸி

Image
ஹாலிவுட்டில் சமீப எதிர்காலம் பற்றிப் பல படங்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவைப் பற்றி அப்படியான‌ படம் - அதுவும் Dystopian சமூகமாக வர்ணித்து - ஒன்றை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. Ghoul ( Season1) மிகச் சிறப்பான படம். வெப்சீரிஸை ஏன் படம் என்று சொல்கிறேன் என்றால் இந்த சீஸன், 3 எபிஸோட்கள் (Out of the Smokeless Fire, The Nightmares Will Begin மற்றும் Reveal Their Guilt, Eat Their Flesh) மட்டுமே. இறுதி டைட்டில் கார்ட் கழித்தால் இரண்டு மணி நேரத்துக்கு சற்று கூடுதல் நேரம் தான் ஓடுகிறது. இந்தியாவின் இரண்டாம் எமெர்ஜென்ஸி பற்றிய படம் Ghoul. அதாவது இன்றைய மதச் சகிப்பின்மையற்ற, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்சி நீட்டித்தால் என்ன ஆகும் எனச் சிந்தித்திருக்கிறார்கள். குழந்தைகளின் புத்தகங்களைக் கூடத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவற்றை பிடுங்கி எரிக்கும் ஓர் அரசு. மக்கள் சிந்திப்பதை, எதிர்த்துக் கேள்வி கேட்பதை விரும்பாத அராஜக அரசு. மாட்டுக்கறியை வெறுக்கும் அரசு. ஒரு மதத்தையே எதிரியாகக் கருதும் அரசு. அதை விட முக்கியமாய் அதை எதிர்ப்போர் அனைவரும் தேச ...

ஒன்பதரை விமர்சனங்கள்

Image
தனிப்பேச்சில் / சாட்டில் பேசியவ‌ற்றைக் கழித்து பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை மட்டும் கணக்கில் கொண்டால் 'ஆப்பிளுக்கு முன்' நாவலுக்கு இது வரை ஒன்பதரை விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரம் உண்டு தான் என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் இதைப் பரப்ப விரும்புகிறேன். வேறு எவரும் செய்ய மாட்டார்கள் என்பதால் என் நாவலை நானே சந்தைப்படுத்துவதற்குத் துணிந்து விட்டேன். அது தான் இந்த விமர்சனக் கட்டுரைப் போட்டி அறிவிப்பு. செல்வத்தை வாரி இரைத்துத் தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லும் புரவலன் பிம்பம் வந்து விடக்கூடாது என்ற தயக்கம் இருந்தது. நான் புரவலனும் அல்லன்; என்னிடம் அத்தனை செல்வமும் இல்லை; நான் புகழக் கோரவும் இல்லை. நாவல் பரவலாய் வாசிக்கப்பட்டு அதற்குரிய இடத்தை - அது கீழோ மேலோ - பெற வேண்டும் என்பது தான் என் எளிய அவா. நண்பரிடம் தயக்கத்தைச் சொன்ன போது தமிழ் எழுத்துச்சூழலில் சுயசந்தைப்படுத்தலுக்கு இது தொடக்கமாக இருக்கலாம் என்றார். பிறகு, இதைச் செய்வதால் இழக்கப் பெரிதாய் ஒன்றுமில்ல...

கலைஞர் - நீயா நானா: விடுபட்டவை

கலைஞர் சிறப்பு நீயா நானாவில் கலந்து கொண்டு நான் பேசியதில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போக, மீதிக் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்கள் (இவற்றை அன்றிரவே ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தேன்). இவ‌ற்றில் புகைப்படம் பற்றிய கேள்வி மட்டும் பேசி வரவில்லை; மற்றவை பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. இவற்றில் முதல் மூன்று கேள்விக்குமான பதில்கள் சொல்ல வாய்ப்புக் கிடைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என ஆதங்கம் உண்டு. ஆனால் ஆறு மணி நேர ஷுட்டிங்கைச் சுருக்கி ஒரு மணி நேர நிகழ்வாய்க் காட்டும் நிர்ப்பந்தம் இருப்பதும் புரிகிறது. கலைஞரிடம் விஞ்சி நிற்பது பண்டைய முகமா நவீனத்தின் முகமா? சந்தேகமே இல்லாமல் நவீனத்தின் முகம் தான். நாம் கலைஞரின் பண்டைய முகம் எனக் கருதும் குறளோவியமும், சங்கத்தமிழும், தொல்காப்பியப் பூங்காவும் கூட உண்மையில் நவீனத்துவத்தின் முகம் தான். அவர் அந்தப் பழைய விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு அவர்களுக்குப் புரியும், அவர்கள் ரசிக்கும் நவீன வடிவில் கடத்த முயன்றார். அவர் தமிழகத்துக்குச் செய்த நவீன பங்களிப்புகள் டைடல் பார்க் கட்டியதும் மேம்பாலங்கள் கட்டியதும் மட்டுமல்ல. அவர் பொருளாதார மற்றும் ...

கலைஞர் சிறப்பிதழ்

'தமிழ்' மின்னிதழின் அடுத்த இதழை கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன். ஒரு பத்திரிக்கையாளன் இன்னொரு பத்திரிக்கையாளனுக்குச் செய்ய முடிந்த எளிய அஞ்சலி அதுவே. அனேகமாய் அண்ணாவின் பிறந்த நாளன்றோ பெரியாரின் பிறந்த நாளன்றோ வரும். கலைஞர் தொடர்புடைய‌ படைப்புகளைத் தனிப்பட்ட முறையில் சில நண்பர்களிடம் கேட்டுப் பெறவிருக்கிறேன். பொதுவான மற்ற படைப்புகளை அனுப்ப விரும்புபவர்கள் இம்மாத இறுதிக்குள் இம்மின்னஞ்சலில் அனுப்பலாம்: c.saravanakarthikeyan@gmail.com படைப்புகள் அனுப்ப‌ விதிமுறைகள் சில உண்டு. எளிமையான, நேரடியான நிபந்தனைகள்: 1. இலவச இதழ் என்பதால் பிரசுரமாகும் எந்தப் படைப்பிற்கும் சன்மானம் தருவதற்கில்லை. 2. படைப்புகள் வேறெந்த அச்சு மற்றும் மின் இதழ்களில் வெளியாகாதவையாக இருக்க வேண்டும். 3. படைப்புகளுக்கு பக்க வரையறை ஏதுமில்லை. அவசியமெனில் பகுதிகளாகப் பிரித்து வெளியிடுவேன். 4. படைப்பு கவிதை, கதை, கட்டுரை, பத்தி, நாடகம், திரைக்கதை, மொழிபெயர்ப்பு, ஓவியம், புகைப்படம், கார்ட்டூன் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். இலக்கியம், திரைப்படம், அரசியல், வரலாறு, விஞ்ஞானம், அனுபவம...

புத்தரின் இரண்டாம் புன்னகை

Image
“ We must develop this atomic energy quite apart from war – indeed I think we must develop it for the purpose of using it for peaceful purposes. ... Of course, if we are compelled as a nation to use it for other purposes, possibly no pious sentiments of any of us will stop the nation from using it that way. ” -    Jawaharalal Nehru, First Prime Minister of India (1948) பிஜேபி எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தேசப்பற்று சற்றி அதீதமாகத் தான் நாட்டில் புரண்டோடும் - அது சினிமாவோ விளையாட்டோ யுத்தமோ. சமீபமாக தேசப்பற்றுப் படங்கள், அதுவும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானவை பாலிவுட்டில் நிறைய எடுக்கப்படுகின்றன. Neerja (1986 கராச்சியில் நடந்த விமானக் கடத்தல்), Airlift, (1990 குவைத் இந்தியர்களைக் காப்பாற்றியது) Rustom (1950களின் கப்பல் அதிகாரி) மற்றும் The Ghazi Attack (1971 இந்திய பாகிஸ்தான் போரில் நடந்த நீர்மூழ்கிக்கப்பல் சண்டை) வரிசையில் தற்போது அபிஷேக் ஷர்மா இயக்கியிருக்கும் படம் Parmanu. சில இடங்கள் தவிர மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் படம் வந்திருக்கிறது. அதீத, நா...

காமக்கிழத்திகள்

Image
Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத்துவம் காண‌ முடியும், திருப்தி கொள...