Posts

நிர்பயம் Vs நிர்மல்யம்

Image
நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன். இந்தியாவில் நடக்கும் பாலி...

மிஷ்கின் - மின்னூல்

Image
அச்சு நூல்களைக் காட்டிலும் மின் புத்தகங்கள் எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் என்பது என் கணிப்பு. சுட்டு விரலில் எச்சில் தொட்டு பக்கங்களைத் திருப்ப முடியாது என்பது தவிர அச்சுப் புத்தகங்களுக்கு இணையானவை தாம் மின்னூல்களும். சில விஷயங்களில் அதனிலும் மேல். உதாரணமாய் காடுகளை அழிக்க வேண்டியதில்லை; கள்ளப் பிரதிக்கான வாய்ப்பு குறைவு; உடன் எடுத்துப் போக சுமை இல்லை. அமேஸான் கிண்டில் கருவி அதில் ஒரு மைல்கல். கடந்த ஈராண்டுகளாகவே அச்சில் வந்த‌ என் நூல்களை, தொகுக்கப்படாத எழுத்துக்களை மின் வடிவில் வெளியிட ஆர்வம் கொண்டிருந்தேன். தமிழ் மின்னிதழும் ச்சீய் மின்னூலும் அவ்வழி முயற்சிகள் தாம். அமேஸான் கிண்டிலில் வெளியிட எத்தனித்த போழ்து அதில் தமிழில் நூல் பதிப்பிக்க‌ அதிகாரப்பூர்வமாக இன்னும் அங்கீகாரம் வரவில்லை என்றறிந்தேன். பிறகு எனது குஜராத் 2002 கலவரம் நூலினை DailyHunt (முன்னாள் NewsHunt ) வழியாக கிழக்கு பதிப்பகம் மின்னூலாகக் கொண்டு வந்ததை ஒட்டி இந்த முயற்சி. ஐ லவ் யூ மிஷ்கின் நான் கடந்த எட்டாண்டுகளாக என் வலைதளத்திலும், சில அச்சு ஊடகங்களிலும் எழுதிய திரை விமர்சனங்களின் தேர்ந்தெடுக்கப்...

ஃபீனிக்ஸ் கனவுகள்

Image
கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருந்தோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி… நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்… அடுத்த மாதம் துவங்கிடலாம்யா’ என்பார். இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன், இந்திய அரசும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்! - சுஜாதா (கற்றதும் பெற்றதும், 2003 ) கேள்வி: அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது? பதில்: கைவிடப்பட்டது. - சுஜாதா பதில்கள் (குங்குமம், 2008) இந்திய ராக்கெட் இயல் பற்றி அப்துல் கலாமுடன் இணைந்து நூல் எழுதப் போவதாக சுஜாதா குறிப்பிட்ட போது ஒரு வாசகனாய், ஒரு மாணவனாய், ஓர் இந்தியனாய் மிகுந்த உற்சாகம் கொண்டது நினைவிருக்கிறது. பிறகு அந்த நூல் கைவிடப்பட்டது என்று தெரிந்த போது அளவிலா ஏமாற்றம் கொண்டதும். சுஜாதா மறைந்த ஓரிரு ஆண...

உலகப் பொது மொழி

Image
8.6.2015 தேதியிட்ட‌ குங்குமம் வார‌ இதழில் வெளியான எமோஜி (Emoji) பற்றிய என் கட்டுரை யின் முழு வடிவம். * "அந்த நடனம் எனக்கு பிடித்திருக்கிறது" என்பதை இன்று நீங்கள் குறுந்தகவலாகப் பகிரவோ சமூக வலைதளங்களில் கருத்தாகப் பதியவோ ஐந்தாறு வார்த்தைகளை விரயம் செய்ய வேண்டியதில்லை. மேலிருக்கும் படங்களைப் பயன்படுத்தி விடலாம். இவை எமோஜி (Emoji). எஸ்எம்எஸ், சாட் உரையாடல்கள், சோஷியல் நெட்வொர்க் பதிவுகள் என எல்லாவற்றிலும் பரவலாய் இது புழக்கத்தில் இருக்கிறது. இது ஒரு காட்சிப்பூர்வ மொழி. எமோஜி என்ற ஜப்பானிய மூலச்சொல்லுக்கே படத்தின் மூலம் ஒரு விஷயத்தை எழுதிக்காட்டுவது என்பது தான் பொருள் (E - படம்; Moji – எழுத்து). இதை எமோட்டிகான் (Emoticon) உடன் குழப்பிக் கொள்ளலாகா. அது எழுத்துக்களைக் கொண்டு படத்தோற்றத்தை உண்டாக்குவது. இது படங்களையே எழுத்து போல் பயன்படுத்துவது. உதாரணமாய், சிரிக்க எமோட்டிக்கானில் :-). எமோஜியில் . ஒருவகையில் எமோஜியின் தாத்தா எமோட்டிகான் என வைத்துக் கொள்ளலாம். எமோஜி முதன் முறையாக 1998 வாக்கில் ஜப்பானில் அறிமுகமானது. என்டிடி டொகோமோ என்ற நிறுவனம் தன் மொபைல்களில் இதைக் கொண்...

ஒரு நக்ஷத்திரம்

Image
செப்டெம்பர் 2015 அந்திமழை இளைஞர் சிறப்பிதழாக வெளியாகி இருக்கிறது. அதில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற பட்டியலில் (பன்முக திறமை என்ற வகைமையில்) என்னையும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அவர்க‌ட்கு நன்றி.

Baahubali's warcraft & Amazon's leadership principles

Image
Films delivering management principles or corporate lessons or business strategies is NOT a completely new thing. Lot of books and articles are written worldwide. Rajini's Punchtantra is one local example. I am much impressed by SS Rajamouli's recent magnum opus movie Baahubali: The Beginning due to it's creative visuals and state of the art film making in spite of a very usual story line and screenplay.   Amazon as a company has a unique set of 14 leadership principles which every employee is expected to practice in their DNAs. To my surprise, I noticed most of these principles are exhibited by the prince Amarendra Baahubali (performed by Prabhas) in the battle field between Maghizhmadhi and Kalakeyas. *** Spoiler Alert *** 1. Customer Obsession To the prince Baahubali, the citizens of his nation Maghizhmadhi are the customers. It is announced that among the two princes who kills the opponent Kalakeyas' chief in the war will became the next king. But...

ச்சீய்... (மின்னூல்)

Image
வாசிக்க‌ / தரவிறக்க: https://drive.google.com/file/d/0BwdaEHEd7U78QVZiS0xtZnBtN2s/view ஆப்பிள், ஆன்ட்ராய்ட், கிண்டில், நூக் கருவிகளில் வாசிக்க இங்கே செல்லவும்.

காசு பணம் துட்டு மொபைல் மொபைல்

Image
சென்ற வார‌ குங்குமம் இதழில் (8.6.2015) வெளியான மொபைல் பேமெண்ட் பற்றிய என் கட்டுரை யின் முழு வடிவம். * மதுமிதா. வயது 25. பெங்களூரில் கார்பரேட் ஊழியை. பெருநகரங்களில் தூவிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு துகள். அதே சமயம் நவீனத்தின் பிரதிநிதி. ஆட்டோ சவாரி, தள்ளு வண்டி, பெட்டிக் கடை போன்றவற்றிற்குத் தவிர அவர் கடைசியாய் எப்போது கரன்சி நோட்டை, செக் புக்கை, டெபிட் / க்ரெடிட் கார்டைப் பயன்படுத்தினார் எனக் கேட்டால் புருவம் சுருக்கித் தீவிரமாய் யோசிக்கிறார்.  தினமும் பயணிக்கும் மெட்ரோ ரயில் டிக்கெட், வார இறுதியில் போகும் சினிமா டிக்கெட், மாதா மாதம் எலக்ட்ரிசிட்டி பில், அவ்வப்போது பயணிக்கும் டேக்ஸி, தீரும் போதெல்லாம் மொபைல் ரீசார்ஜ், சொந்த ஊருக்குப் பஸ் டிக்கெட், ஆன்லைன் ஷாப்பிங் செலவுகள், சென்னையில் கல்லூரி பயிலும் தம்பிக்கு அனுப்பும் பணம் என எல்லாமே இன்று அவர் செய்வது மொபைல் பேமெண்ட்டாகவே. அதாவது தன் ஸ்மார்ட்ஃபோனின் வழியாக இந்தப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்கிறார். இவர் ஓர் உதாரணம். ஸ்மார்ட்ஃபோன் வருகைக்குப் பிறகு கடந்த ஐந்தாண்டுகளில் உலகம் முழுக்க பாரம்பரிய பணப்பரிவர்த...

Net Neutrality - ஓர் எளிய அறிமுகம்

சென்ற மாத மத்தியில் செய்திகளில் அதிகம் அடிபட்ட வண்ணமிருந்ததால் நெட் ந்யூட்ராலிட்டி குறித்து வாசிக்கவும் எழுதவும் விரும்பி இருந்தேன். என்னவென்றே புரியாமல் நிறையப்பேர் ஆதரித்துக் கொண்டிருந்தது தான் முக்கியக் காரணம். ஆனால் தமிழ் - சித்திரை இதழ் பணிகள், கொல்கத்தா, சென்னை, கோவை பயணம் எனத் தொடர் ஓட்டத்தின் காரணமாய் சமயம் கிட்டவில்லை. இப்போது மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவெடுக்கவிருக்கும் கட்டத்தை எட்டி விட்டது. இடையில் ஜெயமோகன் இது பற்றி நான் எழுதி இருப்பேன் என நினைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார் . அந்த ஊக்கத்தின் நீட்சியாய் தாம‌தமானாலும் பரவாயில்லை என இது குறித்து எழுதத் தீர்மானித்தேன். அவருக்கு நன்றி. * நெட் ந்யூட்ராலிட்டி என்பதை இணையச் சமநிலை என்று பெயர்க்கிறேன். அது என்ன என்று அறியும் முன் இணையம் (internet) எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வோம். ஒன்று அதன் விஞ்ஞானம். மற்றது அதன் பொருளாதாரம். இணையத்தில் நாம் தினசரி பயன்படுத்தும் கூகுள், ஜிமெயில், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், அமேஸான் அனைத்துமே வலைச் சேவைகள் (web services). இவற்றை கணிப்பொறி, ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் உள்ளிட்ட க...

ஆண்குறி அதிகாரம்

Image
India's Daughter (Documentary) முதலில் குடும்பம் குட்டியை விட்டு ஈராண்டு இந்தியாவில் தங்கி 2012 டெல்லி ரேப் பற்றிய டாகுமெண்டரியை இயக்கிய லெஸ்லி உட்வினுக்கு வாழ்த்துக்களும், அதை இந்தியாவில் ஒளிபரப்பவியலாமல் போன சூழலுக்காக‌ வருத்தங்களும். ஆங்காங்கே உறுத்தல்களும் மறுப்புகளும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாய் இது ஒரு நல்ல பதிவு. அவசியமானதும் கூட. இதில் குற்றவாளி பேசி இருப்பதைப் போலான மதிப்பீடுகளும் நிலைப்பாடுகளும் தான் பெரும்பாலான இந்திய ஆண்கள் கொண்டிருக்கிறார்கள் (கணிசமான‌ பெண்களுமே கூட). கிட்டத்தட்ட இது இந்திய தேசம் தன்னைக் நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலத்தான். அதனாலேயே இதை நாம் அனைவரும் தவறாது பார்க்க வேண்டியது முக்கியமாகிறது. இந்த அரசுத்தடை என்பது அறிவோ அறமோ அற்றது. இதில் தான் இந்தியாவின் மானம் போகிறதென்றால் தினம் தினம் தேசம் முழுக்க பரவலாய் அறிந்தும் அறியாமலும் நடக்கும் சுமார் 50 பாலியல் வல்லுறவுகள் கம்பீரமாகவா நிற்கின்றன‌? இந்த டாகுமெண்டரியின் முக்கிய அங்கமாய் நான் கருதுவது குற்றவாளிகளின் ஒருவனான முகேஷும் குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான இரண்டு வழக்கறிஞர்களும் பொதுவா...