Posts

இந்திய ஜனாதிபதி ரப்பர்ஸ்டாம்ப்பா?

Image
மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லகரம் (7வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு கேபினெட் செக்கரட்டரியின் சம்பளம் இதை விட அதிகமாகிவிட்டது என்பதால் இதை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது). சம்பளம் போக செலவுக்காக ஆண்டுக்கு 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வசிக்க தில்லியில் உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை. தவிர ஹைதராபாத்திலும் சிம்லாவிலும் ஓய்வெடுக்கும் மாளிகைகள். பயணம் செய்ய மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார். இத்தனையும் இந்திய ஜனாதிபதிக்கு மக்கள் வரிப்பணத்தில் அளிக்கப்படுகிறது. ஒரு ரப்பர் ஸ்டாம்ப்புக்கா இத்தனையும்? எப்போதும் நாம் இந்திய ஜனாதிபதி என்பவரை ஒரு பொம்மையாக அல்லது ஒரு கோமாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கடந்த கால் நூற்றாண்டாக கேஆர் நாராயணன் போன்ற வலுவான ஆளுமை கொண்டோரும், அப்துல் கலாம் போன்ற துறைசார் பிரபலங்களும் வந்த போது மட்டும் அப்பதவியை லேசாய்க் கவனிப்போம். மற்றபடி அதை ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேலை என்றே பாவிக்கிறோம். நம் மனதில் இருக்கும் பிம்பம் போல் அது நிஜமாகவே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி தானா? உண்மையில் புதையல் காக்...

மயில், கழுகு மற்றும் புறாக்கள்

Image
(இந்த விமர்சனத்தில் ஸ்பாய்லர் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படி யோசித்து எழுதுவது என் வேலையும் இல்லை என நினைக்கிறேன். அதனால் பார்க்காதவர்கள் படித்து விட்டு ஸ்பாய்லர் ஸ்பாய்லர் என்று கூவ‌ வேண்டாம்.) பிரயத்தனம் கடைசியில் ஒரு கண்ணாடிக் கோப்பை கீழே விழுந்து உடைவதற்குத்தானா இத்தனை ஆயத்தம் இத்தனை பதட்டம் இத்தனை கண்ணீர்? - மனுஷ்ய புத்திரன் 'இறைவி' போல் மற்றுமொரு ஃபெமினிஸ முயற்சிப் படம். அதை விட நன்றாக இருக்கிறது என்பது மட்டும் ஆறுதல். குறிப்பாய் சில வசனங்கள் மற்றும் காட்சிகள். ராமிடம் எப்போதுமே அது உண்டு எனலாம். உதாரணமாய் கற்றது தமிழில் "Touch me if you dare"  போல் இதில் "Hope this size fits you". ராமின் சில மனநிலைகள் ரசித்துப் புன்னகைக்க வைக்கின்றன. முதல் 45 நிமிடங்கள் (பிரபுவுக்கு தியா மீது சந்தேகம் வரும் வரை) இது வேறு ஒரு ஜாதிப் படமாக இருந்தது. மிக ஈர்த்தது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதெல்லாம் சுவாரஸ்யமாகவே இருந்தன. அப்பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது "எம் காலத்தின் கலைஞன்" என்று ராம் குறித்து பட...

மதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]

Image
மதுமிதா: சில குறிப்புகள் நான்கு ஆண்டுகள் முன் சுஜாதா பிறந்த‌ நாளில் தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியான சிறுகதை. மருதன் வெளியிட்டார். அது எழுதப்பட்டது அதற்கும் ஈராண்டுகள் முன். 'இறுதி இரவு' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதை அது. இடைப்பட்ட காலத்தில் பத்து முறையாவது வெவ்வேறு காரணங்களுக்காக அது திருத்தப் பட்டிருக்கும். அதை முதலில் பொன்.வாசுதேவனின் அகநாழிகை இதழுக்குத் தான் எழுதினேன். அப்போது அவ்விதழை வெளிக்கொணர்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதால் அதில் வெளியாகவில்லை. பிறகு ஒரு வெகுஜன இதழில் “இது ஹை ரேஞ்சாக இருக்கிறது. எங்கள் வாசகர்களுக்குப் புரியாது” என்று காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பிரபல இதழும் மௌனித்தது. பிறகு தான் பொறுமையிழந்து இணையத்தில் வெளியிடத் தீர்மானித்தேன். இறுதி இரவு சிறுகதையைக் குறும்படம் ஆக்குவது பற்றிய பேச்சுகளும் வேலைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாகவே  நடந்து வரும் சூழலில் மதுமிதா முந்திக் கொண்டாள். இவ்வாண்டு சரியாய் அதே சுஜாதா பிறந்த நாளன்று நான் உயிர்மை விருது மேடையில் இருந்த போது தான் மதன்ராஜ் மெய்ஞானம் மதுமிதா கதையைக் குறும்படமாக்...

நீங்க ஷட்டப் பண்ணுங்க!

Image
1. நீ நீயாக இரு (பிக்பாஸ் ஓவியாவிடமிருந்து சர்வைவல் டிப்ஸ்) பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. ஓவியாவுக்கு அறிமுகம் கொடுத்தால் நம் வீட்டில் மாலடோவ் காக்டெய்ல் வீசுவார்கள். அதனால் சம்பிரதாய இன்ட்ரோக்கள் தவிர்த்து நேராய் விஷயத்துக்குப் போய் விடலாம். தமிழகத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ‘பிக்பாஸ்’ ஓவியா! அந்நிகழ்வில் பங்குபெறும் மற்ற பதினான்கு பேரை விடவும் அதிக மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்கள் செல்வி என்று கூட பட்டம் கொடுத்திருந்தார்கள். #SaveOviya Movement, ஓவியா புரட்சிப் படை, ஓவியா தற்கொலைப் படை, ஓவியா ஆர்மி என்று வர்ச்சுவல் ரசிகர் மன்றங்கள் தூள் பறக்கின்றன. தினம் ஓவியாவை வைத்து நூற்றுக்கணக்கான மீம்கள் உருவாக்கப் படுகின்றன. ஃபேஸ்புக்கில் யாரோ விளையாட்டாய் எழுதி இருந்தார்கள் - “இன்று தமிழகத்தில் ரஜினிக்கு அதிக ரசிகர்களா, ஓவியாவுக்கு அதிக ரசிகர்களா?”. அராஜகம்! அகம் டிவி வழியாக பிக்பாஸ் இன்மேட்ஸுடன் கமல் ஹாசன் உரையாடும் போது ஓவியா பற்றிய ஒரு விஷயம் பகிரப்பட்டால் கமலே திடுக்கிட்டுப் பார்க்குமளவு அரங்கில் விசில்களும் க்ளாப்ஸ்களும் அள்ளுகின்றன. எவிக்ஷனுக்கு ந...

இந்தியா மதச் சார்பற்ற நாடா?

Image
“Hindus, Muslims, Parsis, Christians, all are Indians. Religion is a private matter.” - Mahatma Gandhi (Delhi in his prayer meeting, July 15, 1947) 2015 குடியரசு தினத்தை ஒட்டி மோடி தலைமையிலான மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் இந்திய அரசியல் சாசன முகப்புரையின் (Preamble) புகைப்படம் இடம் பெற்றது. அதில் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்களைக் காணவில்லை. இந்தியாவை இந்துத்துவ, முதலாளித்துவ நாடாக முன்வைக்கும் உள்நோக்கோடு தான் அந்த விடுபடலை மத்திய அரசு செய்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தியா குடியரசு ஆன போது எழுதப்பட்ட அரசியல் சாசனத்தின் முகப்புரை அது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமாளித்தார். ஆனால் அதிலுமே உள்நோக்கு இருந்தது - அதாவது அக்காலத்தே இந்தியா Secular, Socialist நாடு கிடையாது என்கிறார். அக்கூற்று உண்மையா? அதைப் பாதி உண்மை என்று சொல்லலாம். ஆனால் பாதி உண்மை முழுப் பொய்யை விட ஆபத்தானது. இந்தியா மதச்சார்பற்ற நாடா? என்ற கேள்வி மறைமுகமாக மறுபடி மறுபடி நம் தேசக் குடிமக்களின் மனங்களில் எழுகிறது. அதற்கு விடை தேடும் முயற்சி இது. ...

இந்தி நம் தேசிய மொழியா?

Image
பொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும் தீர்மானமாக நம்பும் ஒரு விஷயம் “இந்தி நம் தேசிய மொழி” என்பது. தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்பதே அவர்களுக்கு பேராச்சரியமாக இருக்கிறது. எனக்கு ஜாவா தெரியாது என்று சொல்லி இருந்தால் கூட அத்தனை அதிசயித்திருக்க மாட்டர் எனத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அவர்களில் கணிசமானோரின் தாய்மொழி இந்தி அல்ல. ஆனால் எல்லோருக்கும் இந்தியில் குறைந்தபட்சம் பேச மட்டுமாவது தெரிந்திருக்கிறது. இன்னும் சிலருக்குத் தம் தாய்மொழியைக் காட்டிலும் இந்தியே அதிகப் பரிச்சயம். சில சமயம் மீட்டிங் இடையே சரளமாக இந்தியில் பேசத் தொடங்கி விடுவார்கள். பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் இந்தி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதால் அடிப்படை இந்திச் சொற்கள் எனக்குப் புரியும். இந்திப் படங்களைப் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் அப்படித்தான். (அதிலும் காட்சிரூபமாக நகராமல் முழுக்க வசனங்களால் ஆன இந்திப் படம் எனக்கு உகந்ததல்ல. உதாரணமாய் A Wednesday...

வெற்றி - வெற்றி

Image
ஒரு சிறுகதையை முன்வைத்து மட்டும் ஒரு கட்டுரை எழுதுவேன் என்று எண்ணியதில்லை. ஆனால் இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதையான வெற்றி தான் அது. பெண்களை மலினப்படுத்தும் கதை என்றும் பிற்போக்குத்தனமான கருத்தாக்கத்தை முன்வைக்கிறது என்றும் சமூக வலைதளைங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகும் நோக்கம் என்றும் சிலபல வசைகளை இடைப்பட்ட தினங்களில் கண்ட பின் சற்று முன் தான் கதையை வாசித்தேன். வெற்றிச் சிறுகதையா எனப் பார்க்கும் முன் வெற்றி சிறுகதையா? தலைப்பு சேர்க்காமல் துல்லியமாய் 7,458 சொற்கள் வருகின்றன. (சொற்களை எண்ணுவது என்பது உண்மையில் அவற்றுக்கிடையேயான இடைவெளியை எண்ணுவது தானே!) பொதுவாய் தமிழில் இன்று 1,000 முதல் 3,000 சொற்களில் இலக்கியச் சிறுகதைகள் எழுதப்படுகின்றன என்ற அவதானிப்பை வைத்துப் பார்க்கும் போது இது மிக மிக நீளம் தான். ஆனந்த விகடன் பத்தாண்டுகள் முன் சுஜாதாவின் நீளமான‌ சிறுகதைகளை 'சற்றே பெரிய சிறுகதை' என வெளியிட்டது. அவற்றை விடவும் இது மூன்று மடங்கு நீளம். ஆங்கிலத்தில் சிறுகதையின் நீளம் குறித்துப் பேசும் போது எட்கர் ஆலன் போவின் ...