Posts

முதல் நரை

மழிக்காத‌ மீசையில் சிரைக்காத‌ தாடியில் வரலாம் மிகக் கச்சிதமாய்ச் செதுக்கிய கிருதாவில் வரலாம் மார்பில் அடர்ந்திருக்கும் மயிர்க்கொத்தில் வரலாம் லக்ஷம் தலைமுடிகளில் எதாவதொன்றில் வரலாம் ரகசிய ப்ரியத்துடன் மறைப்பின் சௌகரியத்துடன் ஆண் குறியில் அல்லது ஆசன வாயில் வரலாம் - ஓரிரு எச்சரிக்கைகளை சிற்சில‌ அறிவிப்புக்களை மௌனமாய்ப் பகிர்கிறது அந்த ஆதிரோம வெள்ளி மனைவியிடம் சிரித்துப் பேச‌ ஞாபகப்படுத்துகிறது குழந்தைகளுடன் விளையாட‌க் கூவிய‌ழைக்கிறது பெற்றோர்களை கவனித்துக் கொள்ளச் சொல்கிறது பால்ய நண்பர்களை ஆசிரியர்களை தேடச்செய்கிறது புதைந்த காதல்களை துரோகங்களை அவமானங்களை முட்டாள்தனங்களை வக்கிரங்களைத் தோண்டுகிறது பொய்பேசுதலை புறங்கூறுதலை நிறுத்தக் கோருகிறது பயங்கொள்தலை சினங்கொள்தலை குறைக்கக் கேட்கிறது படிக்காத புத்தகங்களை பார்க்காத திரைப்படங்களை புசிக்காத புலாலுண்டிகளை ருசிக்காத மதுப்புட்டிகளை முடிக்காத பயணங்களை புணர்ந்திராத‌ பெண்களை செய்யாத பாவங்களை மனதில் ஓங்கி அறைகிறது கூழாங்கற்கள் சகிதம் கதை பேசும் ஒரு ஜென் குரு போல் மரணத்தின் இளஞ்சுகந்தத்தை மானசீகமாய் முகரத் த‌ந்து என்றோ த...

ஒரு தசாப்தத்தின் ஸ்வப்னம்

Image
இது என் பத்து வருடக் கனவு. 2000ங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடத்தில் தான் முதன் முதலாக‌ ஆனந்த விகடனுக்கு என் படைப்பு ஒன்றை அனுப்பினேன். அது ஒரு விஞ்ஞானச் சிறுகதை. பெயர் நியூட்டனின் மூன்றாம் விதி . துரதிர்ஷ்டவசமாய் அது இன்னமும் எதிலும் பிரசுரமாகவில்லை. பிற்பாடு இந்த பத்தாண்டுகளில் கவிதைகள், சிறுகதைகள் என நான் முக்கியமாய் முயன்ற அத்தனை ஆக்கங்களையும் ஒரு ராணுவக்கடமை போல் முதலில் ஆனந்த விகடனுக்குத் தான் அனுப்பி இருக்கிறேன். பள்ளி நாட்களில் என் வீட்டில் குமுதம் தான் வாங்குவார்கள். ஆனாலும் பக்க‌த்து வீட்டில் வாங்கிய ஆனந்த விகடன் தான் அதிகம் ஈர்த்தது. அப்போதைய அதன் அத்தனை வசீகர உள்ளடக்கங்களையும் தாண்டி சுஜாதா ஒரு முக்கியக் காரணம். அதனால் தான் அதில் என் எழுத்து வருவது என்பது மஹாஸ்வப்னமாகத் தோன்றியது. அதனால் தான் முதன்முதலில் என் ட்வீட் விகடனில் வந்த போது கூட மிகுந்த மகழ்வுற்றேன் (விகடனுக்கும் அது தான் முதல் வலைபாயுதே !). ஆனால் அது என் அப்பீல் இன்றி அவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது. அதனால் குமுதத்தில் சிறுகதை, கட்டுரை வந்தாயிற்று, குங்குமத்தில் தொடர், கவிதை வந்தாயிற்று ஆனால் விக...

சுஜாதா Birthday Special

சுஜாதாவின் பிறந்த நாளான இன்று (மே 3) எனது சிறுகதை ஒன்று தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியாகி உள்ளது: மதுமிதா : சில குறிப்புகள் - http://www.tamilpaper.net/?p=7714 இது கொஞ்சம் experimental சிறுகதை. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிற்றிதழுக்காக எழுதப்பட்டது. அவ்விதழ் வராததால், பின் சில‌ வெகுஜன இதழ்களுக்கு அனுப்பப்பட்டு, நிராகரிக்கப்பட்டு (ஓரிடத்தில் சொல்லப்பட்ட காரணம்: இது பத்தாண்டுகளுக்கு பின்பு எழுதப்பட வேண்டிய சிறுகதை), திருத்தப்பட்டு இப்போது என் சிறுகதைத் தாய் வீட்டின் வழி வெளியாகிறது. தாய் வீடு எனக் குறிப்பிட காரணம் என் முதல் சிறுகதையான E=mc 2 தமிழ் பேப்பரில் தான் வெளியானது - அது சுஜாதாவின் நினைவு தினத்தன்று. இன்று அவர் பிறந்த தினத்தில் அவர்   தொடங்கிய‌ சிறுகதைப் பரிசோதனை விளையாட்டை நானும் முன்னெடுத்துச் செல்வதை அவருக்குச் செய்யும் tribute-ஆகக் கருதுகிறேன்.

கமல்ஹாசனின் அவதாரங்கள்

Image
ஷியாம் வெங்கட்ராமன் என்ற 20 வயது இளைஞர் கம‌ல்ஹாசன் திரைப்பட கேரியரின் முக்கியக் கதாபாத்திரங்களின் கெட்டப்களை ஓவியங்களாகத் தீட்டி இருக்கிறார். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தால் கமல்ஹாசன் என்ற பெருங்கலைஞனின் ஆளுமை வீச்சை உணரலாம். கமல்ஹாசனே மயிர்கூச்செரியும் உண்ர்வு ஏற்படுத்தியதாக புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்! நிஜமாகவே அசுர உழைப்பு. ஷியாமுக்கு வாழ்த்துக்கள்! உடன் நிறைய நன்றிகளும்! ஓவியங்களின் தொகுப்பு : | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | ******* [1959 to 1977] [1977 to 1981] [1981 to 1986] [1986 to 1993] [1994 to 2013] *******

கள்ளிச்செடி வளர்ப்பவன் - சில கருத்துக்கள்

Image
அழகியசிங்கர் நடத்தி வரும் நவீன விருட்சம் இணையதளம் எனக்கு பல இளம் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் லதாமகன் . அதில் வந்த அவர் கவிதை ஒன்றினை படித்தது / பிடித்தது தொடரில் குறிப்பிட்டிருந்தேன் . பின் ஆனந்த விகடனில் அவரது கவிதைகள் வெளியான போதும் கவனித்திருந்தேன். இடையில் என் பரத்தை கூற்று நூலிற்கு ஒரு விமர்சனம் எழுதிய வகையில் மற்றுமொரு தொடுகை. பிற்பாடு ட்விட்டர் மூலமும் ஓரளவு பழக்கமானார். பிறகு அரட்டைக்குத் திரட்டையவை போட்ட போது விடுபட்டதற்காக நான் வருந்திய இருவரில் லதாமகனும் ஒருவர். லதாமகன் கள்ளிச்செடி வளர்ப்பவன் என்ற தன் முதல் கவிதைத் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இலவச மென்னூலாக வெளியிட்டிருக்கிறார்: http://issuu.com/lathamagan/docs/poems-1?mode=window&viewMode=doublePage மொத்தம் 54 பக்கங்கள். 50 கவிதைகள். உட்கார்ந்தால் ஒரே மூச்சில் 15 நிமிடத்தில் படித்து முடித்து விடலாம் என்றாலும் அது கவிதைக்கு செய்யும் மரியாதையாகா என்பதால் நேற்றிரவும் இன்றும் மூன்று முறை முழுக்க வாசித்து விட்டு சில‌ கருத்துக்கள் பகிரத் தோன்றியதால் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ...

முதல் குறும்படம்

Image
LIFE OF A PI - இது தான் நான் எடுத்திருக்கும் என் முதல் குறும்படத்தின் பெயர் (தலைப்பு நன்றி : ஆங் லீ / யான் மார்டெல்). 6 மணி நேர ஸ்க்ரிப்ட்வொர்க்; 6 மணி நேர ப்ளானிங்; 12 மணி நேர ஷூட்டிங்; 12 மணி நேர எடிட்டிங் - இவை metadata. சுருங்கச் சொன்னால் ஆறு நாட்களில் பதினோரு ஆட்களின் உழைப்பில் முகிழ்த்திருக்கிறது இந்த நான்கு நிமிடப்படம். இது ஓர் ஆங்கிலக் குறும்படம். நான் பணிபுரியும் நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறேன். ஆனால் முழுக்க‌ டாகுமெண்டரி போலாகி விடாமல் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். மொத்தம் பன்னிரு காட்சிகளில் மூன்று வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை என் நிறுவனம் தொடர்புடைய தொழில்நுட்பத்தின் சர‌டு கொண்டு இணைக்கும் dramatic-ஆன திரைக்கதை. ஒன்லைன் கேட்டால் Amores Perros, 21 Grams, ஆய்த எழுத்து, David படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு படத்தின் திரைக்கதை உத்தி வெற்றிகரமானதாகத் தோன்றுகிறது. நல்ல‌ நம்பிக்கையைத் தருகிறது. தவிர‌, படத்தின் மைய நோக்கைச் சிதைக்காத வண்ணம் உறுத்தாத மெல்லிய குறியீடுகள் சில முயற்சித்திருக்கிறேன். இது என் முதல் திரைக்கதை முயற்சி அல்ல....

கார்த்தி Vs கங்னம்

Image
"What I thought was, you know, crazy about music, dancing, performance, so that kind of psycho." - Psy (BBC Interview, December 2012) கங்னம் ஸ்டைல் என்பது பெருமாள்முருகனின் நாவல் பாதிப்பில் எழுதும் இலக்கிய மோஸ்தர் போலிருக்கிறது என்று எண்ணியிருந்த ஓர் அப்பாவி நான். அலெக்ஸ் பாண்டியன் படத்தின் Bad Boy பாடலில் கார்த்தி கங்னம் ஸ்டைலில் ஆடி இருக்கிறார் என்று கேள்விப்பட்ட போது தான் அது ஏதோ சர்வதேசிய நடன வஸ்து என என் சிற்றறிவுக்குப் புலனாகியது. Psy என்று செல்லமாக அழைக்கப்படும் (எனக்கு CSK போல!) பார்க் ஜே-சங் 35 வயது தென் கொரிய ராப் பாடகர். அவரே பாடல்கள் எழுதி, கம்போஸ் செய்து, நடனமமைத்து வீடியோ ஆல்பங்கள் வெளியிடுபவர். 2001லிருந்தே இவர் ஓரளவு பிரபலம் தான். 2012 ஜூலையில் PSY 6 (Six Rules) - Part 1 என்ற தனது ஆறாவது ஆல்பத்தை வெளியிட்டார். அதில் தான் கங்னம் ஸ்டைல் ( Gangnam Style - 강남스타일 ) பாடல் இடம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட‌ கொரியன் பாப் (K-pop) என்ற தனி genre-ஏ இருக்கிறது. இப்பாடல் அவ்வகைமை தான். இந்த ஆல்பம் தென் கொரியாவில் மட்டும் லட்சம் பிரதிகளுக்கு மேல்...

தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா

Image
எனது சினிமா விமர்சன முறையின் அடைப்படை குறித்த மூன்று முக்கிய விஷயங்களை முதலில் சொல்லி விடுகிறேன்: 1. நான் படம் பார்க்கும் போதே இயக்கம், திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்றெல்லாம் யோசித்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்க்க மாட்டேன். என் வரையில் திரைப்படம் என்பது ஒரு பண்டம். நுகர்வுப்பண்டம். எப்படி சிக்கன் பிரியாணி உண்ணும் போது அதன் அரிசியின் வகை, மசாலாக் கலவை, கறி வெந்திருக்கும் தன்மை, சமையல் காரரின் கஷ்டம், இது மற்றவர்களுக்குப் பிடிக்குமா எல்லாம் யோசிக்காமல் அதன் சுவையை மட்டும் அனுபவிப்பேனோ அதே போல் தான் ஒரு படம் பார்க்கும் போது நான் திறந்த மனதுடன் எந்த முன் தீர்மானமுமின்றி அந்தப் படத்தை மிக‌ முழுமையாக அனுபவிப்பேன். ஆக, ஒரு படம் முடிந்து வெளியே வரும் தருணம் அது குறித்த என் மதிப்பீடு உருவாகி இருக்கும். பிறகு அப்பட‌ம் குறித்து அசை போடும் போது தான் அந்தக் குறிப்பிட்ட‌ மதிப்பீட்டை என் மனம் வந்தடைந்த காரணங்கள் புலப்பட ஆரம்பிக்கும். அதைத் தான் விமர்சனமாகச் சொல்கிறேன் / எழுதுகிறேன். சுருங்க‌ச் சொன்னால் தியேட்டருக்குள் என் தர்க்கம், வியாக்கியானம் எல்லாம் நுழைவதே இல்லை; ...

திருவிழாப் பெண்கள்

நேற்றும் அதற்கு முன்தினமும் சென்னைப் புத்தகக்காட்சியை கால் வலிக்க இருமுறை சுற்றியாயிற்று. எப்போதும் போல் எழுத்து / வலைப்பதிவு / சமூக வலைதள அன்பர்களுடன் சேராது நண்பனுடன் தனித்தே திரிந்திருந்தேன். விதிவிலக்காய் பவுத்த அய்யனார் - முத்துமீனாள் தம்பதியருடன் மட்டும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து விட்டு நகர்ந்தேன் (அதுவும் கூட‌ நீயா நானா வழியான அறிமுக‌த்தின் காரணமாக). அப்புறம் நர்சிம்முடன் சில விநாடிகள். பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி (அவர் தானா?!), மனுஷ்யபுத்திரன், காலச்சுவடு கண்ணன், கவின்மலர் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. மற்றபடி, கடந்த சில ஆண்டுகளின் வழக்கம் போல் சென்னை டூ பெங்களூர் லாஜிஸ்டிக்ஸ் இடர்பாடுகளுக்கு பயந்தே குறைந்த எண்ணிக்கையிலான நூல்களை ம‌ட்டும் உலோபி நுகர்வு செய்தேன். எப்போதும் என் கணக்கு ஆண்டுச் சம்பளத்தில் 1%. சுமைக்குப் பயந்தே இம்முறையும் அது நிறைவேறவில்லை. ஒரே ஆறுதல் இம்முறை இரண்டு நாட்கள் இருந்தபடியால் சாவகாசமாக‌ விலாவாரியாக புத்தகங்களைக் காணும் பேறு பெற்றேன் என்பது மட்டுமே. என் சுய documentation-க்காக வாங்கிய புத்தகங்களை இங்கே பட்டியலிடுகிறேன். மற்றவர்களுக்கும் உதவக்...

முகம் - நீயா நானா

Image
முகம் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் (விஜய் டிவி) கலந்து கொண்டதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது நேற்று போகியன்று ஒளிபரப்பாகியது. எனக்கே நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடம் இருக்கும் போது தான் விஷயம் தெரியும் என்பதால் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு / சமூக வலைதள அன்பர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க இயலவில்லை. இன்று விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் சானலில் அந்த வீடியோவை வெளிட்டிருக்கிறது. கிட்டதட்ட 6 மணி நேரம் ஷூட் செய்த நிகழ்வை ஒண்ணே கால் மணி நேரத்துக்கு மேல் ஓடுகிற‌ நிகழ்ச்சியாகச் சுருக்கியுள்ளனர். என் வேண்டுகோள் முழு வீடியோவையும் பாருங்கள் என்பதே. ஆனாலும் நேரமோ ஆர்வமோ இல்லாதவர்களுக்காக மட்டும் நான் தோன்றும் / பேசும் பகுதிகளின் நேரத்துளிகளை இங்கே பட்டியலிடுகிறேன். 0:02:20 - 0:02:40 0:05:58 - 0:06:18 0:10:40 - 0:10:57 0:33:42 - 0:34:00 0:36:17 - 0:36:52 0:40:08 - 0:40:32 0:44:22 - 0:44:49 1:16:14 - 1:16:24 கிட்டதட்ட நான் நன்றாகப் பேசிய பகுதிகள் அனைத்துமே (6 கேள்விகள்) எடிட் ஆகாமல் நிகழ்ச்சியில் வந்து விட்டது. http://www.hotstar.com/tv/neeya-naana/1584/a-deba...