Posts

மயிரு [சிறுகதை]

குமுதம் இதழில் ' ஹேர் ஸ்டைல்! ' என்ற தலைப்பில் வெளியான சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது . ****** விழிப்புத் தட்டியவுடன் சுடலை தன் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். நேற்றுப் பெய்த முதல் மழையில் துளிர் விட்ட பச்சைப் பசும்புல்வெளி கணக்காய் வழுக்கை மண்டையில் ஆங்காங்கே சிறுசிறு மயிரிழைகள் முளை விட்டிருந்தன. எழுந்து போய் சுவற்றிலிருந்த பாதரசம் போன பெல்ஜியம் கண்ணாடி முன் நின்று தலையைப் பார்க்கும் ஆவலை சோம்பேறித்தனத்தினால் ஒத்திப் போட்டான் சுடலை. கார்த்திகைக் குளிர் மாசிக் கடைசி வரையிலும் வீசி விட்டுத் தான் ஓய்கிறது. அது மனிதர்களின் மனதிலும் உடலிலும் சோம்பலின் சொகுசை விதைத்துப் போகிறது. கண்களில் இன்னமும் தூக்கம் மிச்சமிருந்தது. வெளிச்சம் பார்த்தால் காலை ஏழு மணி ஆயிருக்கும் எனத் தோன்றியது. அம்மா சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு ஆளுக்கு சமைக்க அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து என்ன தான் செய்வாளோ தெரியாது. அப்பா காலத்திலிருந்தே அதே பழக்கம். இப்போது அவளுக்கு பிரஷர் இருக்கிறது, அடிக்கடி தலை வலிக்கிறது என்கிறாள். மெதுவாக எழுந்து வேலை செய்தால்...

யதார்த்தத்தின் அடர்கசிவு

Image
அம்ருதா - ஜூன் இதழில் வெளியான 2011 இலக்கியத்துக்கான‌ நொபேல் குறித்த‌ எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்:

குமுதம் - சிறுகதை

Image
குமுதம் 15.8.2012 இதழில் எனது சிறுகதை வெளியாகி உள்ளது. வலைதளங்களில் என் இரு சிறுகதைகள் வெளியாகி இருந்தாலும் அச்சுக் காணும் என் முதல் சிறுகதை இது. " ஹேர் ஸ்டைல்! " என்ற பெயரில் கதை வெளியாகி இருக்கிறது (கதைக்கு நான் வைத்திருந்த‌ தலைப்பு " மயிரு "!). இன்னும் நானே பார்க்கவில்லை - இங்கே பெங்களூரு கடைகளில் குமுதம் நாளைக்குத் தான் கிடைக்கும். வாழ்த்திய / வாழ்த்தும் / வாழ்த்தவிருக்கும் அனைவருக்கும் என் ப்ரியங்கள். 46 லக்ஷம் வாசகர்களை என் எழுத்து சென்றடைய வழிவகுத்த குமுதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகளைப் பதிகிறேன்.

ஆழம் - ஆகஸ்ட் 2012 இதழில்

Image
ஆழம் ‍‍ - ஆகஸ்ட் 2012 இதழில் ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு பற்றி தமிழ்பேப்பர் தளத்தில் நான் எழுதிய ' கிட்டதட்ட கடவுள் ' கட்டுரையின் விரிவான செறிவூட்டப்பட்ட வடிவம் (4 பக்கங்கள்) வெளியாகி இருக்கிறது:

அம்ருதா - ஆகஸ்ட் 2012 இதழில்

Image
அம்ருதா ஆகஸ்ட் 2012 இதழில் சென்ற வருட பொருளாதாரத் துறையில் வழங்கப்பட்ட‌ நொபேல் பரிசு குறித்து நானெழுதிய‌ விரிவான 5 பக்க கட்டுரை ' அசைவுகளும் அதிர்வுகளும் ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

அரட்டைக்குத் திரட்டியவை

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை நூறு நவீனத் தமிழ் கவிஞர்களின் கவிதைகளை தினம் ஒன்று வீதம் ('அரட்டைகேர்ள்' சௌம்யாவுக்கு மென்ஷனோடு) ட்விட்டரில் போட்டு வந்தேன். அவற்றின் முழுத்தொகுப்பு இது. உடன் அதன் கதையும். நூறு என்ற எண்ணிக்கையை மனதில் வைத்துத் தொடங்கவில்லை. ஆரம்பிக்கும் போது எந்த எண்ணிக்கையுமே மனதில் இல்லை. அறுபது கவிதைகள் கட‌ந்த‌ போது தான் நூறு என்ற எண்ணிக்கை மனதில் உதித்தது. தொன்னூறு தொட்ட போது 365 போட்டால் என்ன என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் இப்போது இத்தொடர் அதன் உச்சத்தில் இருக்கிறது; எனக்கு ஆர்வமான சவாலாக இருக்கிறது; அது அலுப்பான கடமையாக மாறக் கூடாது. அதற்கு முன்பு நிறுத்தி விட வேண்டும். அதனால் தான் நூறோடு நிறுத்தினேன். நிறுத்த மனமில்லாமல், ஆனால் மனநிறைவோடே நிறுத்தப்பட்டது இத்தொடர். எந்த நாளும் தடைபடாமல் தொடர்ந்து இது வெளியாக சில பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருந்தது. இந்த மூன்றரை மாதங்களில் பெங்களூரு, சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை என் பல ஸ்தலங்களில் ஓரிரு தினங்களைக் கழிக்க நேர்ந்தது. அவ்விடங்களின் பணி அழுத்தங்கள், இணையத...

டிம்பிள் யாதவ் : அரசியலின் அழகியல்

Image
  ஆழம் ‍‍ - ஜூலை 2012 இதழில் சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தின் இளம் அரசியல் முகமான டிம்பிள் யாதவின் எழுச்சி குறித்து நான் எழுதிய கட்டுரையின் சுருக்க வடிவம் வெளியாகி இருக்கிறது. முழுக் கட்டுரையை இங்கே பகிர்கிறேன்: ******* 1978ம் ஆண்டு. பூனேவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த கலோனல் எஸ் சி ராவத் என்பவரின் மனைவி ஓர் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ராவத் அவருக்கு டிம்பிள் எனப் பெயர் சூட்டினார். அப்போது யாரும் ஆரூடம் சொல்லி இருக்க நியாயமில்லை - அந்தக் குழந்தை தன் மத்திய வயதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலத்தின் மஹாராணியாக, பதினைந்து லக்ஷம் பேரின் பாராளுமன்ற பிரதிநிதியாக, இளைய தலைமுறை இந்திய அரசியலின் அழகியல் அடையாளமாகத் திகழ்வார் என. உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியும், கன்னோஜ் எம்பி ஆகப் போட்டியின்றித் தேந்தெடுக்கப்பட்டவருமான டிம்பிள் யாதவ் தான் அவர். தந்தையின் பணி இடமாற்றங்கள் காரணமாக டிம்பிள் யாதவ் தன் பால்யத்தை இந்தியாவின் பல ராணுவ கண்டோன்மெண்ட்களில் கழிக்க நேர்ந்தது – பூனே பாட்டின்டா, லக்னோ, அந்தமான் நிக்கோபார் என பலவிதமான ஊர்கள். ...

கிட்டத்தட்ட கடவுள்

ஹிக்ஸ் போஸான் அல்லது கடவுள் துகள் பற்றி ஊதிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் மத்தியில் என் பங்குக்கு ஒரு கட்டுரை இன்றைய தமிழ் பேப்பர் இணைய தளத்தில். பிற்பாடு இதன் விரிவான வடிவு ஒன்றை எழுத உத்தேசம். ஹிக்ஸ் போஸான் : கிட்டத்தட்ட கடவுள் - http://www.tamilpaper.net/?p=6071 *******

பழங்குடி உணவுத் திருவிழா

Image
செம்மை அறக்கட்டளை ஓசூரில் வரும் ஞாயிறன்று பழங்குடி கலை மற்றும் உணவுத் திருவிழா வை நடத்துகிறது. கட்டணம் கட்டி கலந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்நிகழ்வின் மூலம் வசூலாகும் பணம் பெண்ணாகரம் பகுதியில் வாழும் இருளர் பழங்குடி இன மக்களுக்கு வாழ்விடம் அமைக்க பயன்படுத்தப் படவிருக்கிறது. தினை, வரகரசி, தங்கச்சம்பா, சாமை போன்ற மரபான தானியங்களைப் பயன்படுத்தி பழங்குடி முறைப்படி செய்யப்பட்ட உணவு வகைகள் இந்நிகழ்வில் கிடைக்கும் எனத் தெரிகிறது. நிகழ்வில் செந்தமிழன் இயக்கிய‌ பாலை படத்தின் குறுந்தகடு விற்பனைக்குக் கிடைக்கும்.   இன்னும் இரண்டு நாட்களே உள்ளன என்பதால், நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்துவிடுதல் நன்று. சமையல் எண்ணிக்கை கணக்கிற்கு இது உதவியாக இருக்கும். விரயமோ பற்றாக்குறையோ அனாவசியமன்றோ. நாள் / நேரம் : 24-ஜூன்-2012 / மாலை 5:30 நிகழுமிடம் : மீரா மஹால், ஓசூர். கட்டணம் : நபர் ஒன்றுக்கு ரூ.200 /- தொடர்புக்கு : மு.வேலாயுதம் (096593-60967 / 098444-45714) பின்குறிப்பு: நான் இதில் கலந்து கொள்கிறேன். உணர்வுக்காகவா உணவுக்காகவா என்பதைப் பிற்பாடு முடிவு செய்யலாம்!

தேவதை புராணம் : குமுதம் பு(து)த்தகம்

Image
குமுதம் இதழில் (6.6.2012) பு(து)த்தகம் பகுதியில் தளவாய் சுந்தரம் அவர்கள் எழுதிய தேவதை புராணம் குறித்த சிறிய அறிமுகக் குறிப்பை இங்கே பகிர்கிறேன். புத்தகம் குறித்த செய்தி நிறைய பேரைச் சென்றடைய இது வழிவகுத்திருக்கும்.