குமுதம் - சிறுகதை
குமுதம் 15.8.2012 இதழில் எனது சிறுகதை வெளியாகி உள்ளது. வலைதளங்களில் என் இரு சிறுகதைகள் வெளியாகி இருந்தாலும் அச்சுக் காணும் என் முதல் சிறுகதை இது. "ஹேர் ஸ்டைல்!" என்ற பெயரில் கதை வெளியாகி இருக்கிறது (கதைக்கு நான் வைத்திருந்த தலைப்பு "மயிரு"!). இன்னும் நானே பார்க்கவில்லை - இங்கே பெங்களூரு கடைகளில் குமுதம் நாளைக்குத் தான் கிடைக்கும். வாழ்த்திய / வாழ்த்தும் / வாழ்த்தவிருக்கும் அனைவருக்கும் என் ப்ரியங்கள்.
46 லக்ஷம் வாசகர்களை என் எழுத்து சென்றடைய வழிவகுத்த குமுதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகளைப் பதிகிறேன்.
46 லக்ஷம் வாசகர்களை என் எழுத்து சென்றடைய வழிவகுத்த குமுதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகளைப் பதிகிறேன்.
Comments
சிறுகதை முதல், திரைக்கதை, புதினங்கள் என்னும், அடுத்த இலக்குகளைத் தொட வாழ்த்துகிறேன்.....
2. அவன் ஹேர் ஸ்டைல் பிடித்துள்ளது என்கின்றாள். வலுக்கையில் ஆங்காங்கே மயிர் வளர்ந்துள்ளவனை பெண்ணுக்கு எப்படி பிடிக்கும்? (துலுக வைத்தியரிடம் சென்றதால் முடி வளர்ந்து விட்டது என்ற பொய்யை சும்மா ஜாலிக்கு என எடுத்துக் கொண்டேன். ஆனால் இதை ஏற்க முடியவில்லை)