பழங்குடி உணவுத் திருவிழா

செம்மை அறக்கட்டளை ஓசூரில் வரும் ஞாயிறன்று பழங்குடி கலை மற்றும் உணவுத் திருவிழாவை நடத்துகிறது. கட்டணம் கட்டி கலந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்நிகழ்வின் மூலம் வசூலாகும் பணம் பெண்ணாகரம் பகுதியில் வாழும் இருளர் பழங்குடி இன மக்களுக்கு வாழ்விடம் அமைக்க பயன்படுத்தப் படவிருக்கிறது. தினை, வரகரசி, தங்கச்சம்பா, சாமை போன்ற மரபான தானியங்களைப் பயன்படுத்தி பழங்குடி முறைப்படி செய்யப்பட்ட உணவு வகைகள் இந்நிகழ்வில் கிடைக்கும் எனத் தெரிகிறது. நிகழ்வில் செந்தமிழன் இயக்கிய‌ பாலை படத்தின் குறுந்தகடு விற்பனைக்குக் கிடைக்கும்.

 
இன்னும் இரண்டு நாட்களே உள்ளன என்பதால், நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்துவிடுதல் நன்று. சமையல் எண்ணிக்கை கணக்கிற்கு இது உதவியாக இருக்கும். விரயமோ பற்றாக்குறையோ அனாவசியமன்றோ.

நாள் / நேரம் : 24-ஜூன்-2012 / மாலை 5:30
நிகழுமிடம் : மீரா மஹால், ஓசூர்.
கட்டணம் : நபர் ஒன்றுக்கு ரூ.200 /-
தொடர்புக்கு : மு.வேலாயுதம் (096593-60967 / 098444-45714)

பின்குறிப்பு: நான் இதில் கலந்து கொள்கிறேன். உணர்வுக்காகவா உணவுக்காகவா என்பதைப் பிற்பாடு முடிவு செய்யலாம்!

Comments

@Ganshere said…
//பின்குறிப்பு: நான் இதில் கலந்து கொள்கிறேன். உணர்வுக்காகவா உணவுக்காகவா என்பதைப் பிற்பாடு முடிவு செய்யலாம்! //

உணவு எப்படி என்பதைப் பொருத்தா?
ரவி said…
நானும் வரேன். சந்திக்கலாமா ? மொபைல் எண் மெயில் பண்ணுறீங்களா ? ravi.antone@gmail.com

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்