பரத்தை கூற்று புத்தகத்தினை வைரமுத்து , சாரு நிவேதிதா , எஸ்.ராமகிருஷ்ணன் , ஞாநி , ஜெயமோகன் என நான் மிக விரும்பும் / மதிக்கும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு அனுப்பி வைத்திருந்தேன் - அவற்றுடன் இணைத்திருந்த Covering-Letterகள் இவை: ******* 05-செப்டெம்பர்-2010, பெங்களூரு மஹாநகரம். கவிப்பேரரசு அவர்களுக்கு, வந்தனம். 2007ம் ஆண்டு குங்குமம் வார இதழ் நடத்திய ‘ வாசகர் கவிதைத் திருவிழா ’வில் எனது ‘ ஒருத்தி நினைக்கையிலே ’ என்ற படைப்பை முத்திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுத்திருந்தீர்கள் (6-9-2007 தேதியிட்ட இதழ் – பார்க்க இணைப்பு). அதுவே பிரசுரம் கண்ட என் முதல் படைப்பு; அதுவே என் முதல் இலக்கியப்பிரவேசம். அடுத்தடுத்து என்னை எழுத உத்வேக உரமேற்றியது அந்த மகாதிருப்புமுனை. அவ்விதழில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பற்றி நீங்கள் எழுதிய குறிப்பில் " இந்தக் கவிதைகளையெல்லாம் பெரும்படைப்புகள் படைப்பதற்கான பயிற்சிக்களங்கள் என்றே கருதுகிறேன் " என்று சொல்லியிருந்தீர்கள். இன்று கிட்டதட்ட மூன்று முழு ஆண்டுகள் கழிந்த நிலையில், ‘ பரத்தை கூற்று ’ என்ற என் முதல் கவிதைத்தொகுதியுடன் உங்கள் முன் நிற்கிறே...