Posts

காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

மகாத்மா காந்தியின் வரலாற்றைச் சுருக்கி 57 விருத்தப்பாக்களாக (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) எழுதியிருக்கிறார் கவிஞர் மகுடேசுவரன் . 2006 காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட்டு,‌ திருப்பூரிலுள்ள 1000க்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதாம் அந்நூல். தற்போது அச்சில் இல்லாத அதனை கவிஞர் வலைப்பதிவேற்றம் செய்துள்ளார். மரபுத்தளை பிடித்திழுத்திருக்கும் சில சந்தர்ப்பங்கள் தவிர பொதுவாக உறுத்தாத சொற்களினூடாகவே காந்தி வாழ்க்கை சொல்லப்படுகிறது. காந்தி அண்ணல் - பகுதி 1 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/1.html காந்தி அண்ணல் - பகுதி 2 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/2.html காந்தி அண்ணல் - பகுதி 3 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/3.html காந்தி அண்ணல் - பகுதி 4 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/4.html காந்தி அண்ணல் - பகுதி 5 : http://kavimagudeswaran.blogspot.com/2010/10/5.html காந்தி அண்ணல் - பகுதி 6 : http://kavimagudeswaran.blogspot.com/2010/10/6.html மரபுக்கவிதைகள் எழுத விரும்புபவர்கள் இதை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

எந்திரன் : SPEED 1 THz, MEMORY 1 ZB

Image
என் பத்தாண்டு நெடிய‌ காத்திருப்பு ஒரு வழியாய் இன்றோடு முடிவுக்கு வருகிறது. DOT. எந்திரன், the ROBOT . என் நினைவுச்சில்லுகள் சரியென்றால், 2000ம் ஆண்டுவாக்கில் தான் ஷ‌ங்கரின் ரோபோ படம் பற்றி நான் முதலில் கேள்வியுற்றது. படத்தில் நடிப்பவர் கமல் என்பதும், படத்தை எழுதுபவர் சுஜாதா என்பதுமே அப்போதைய எனது எதிர்பார்ப்பின் பிரதானக்காரணங்கள். அப்போது படம் பற்றி உள்ளே ஏற ஆரம்பித்த‌ Tempo - த‌னிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரைக்கும் - இந்த பத்தாண்டுகளில் ஒரு போதும் இறங்கவேயில்லை (அஜீத் நடிக்கிறார் என்றெல்லாம் நடுவில் பூச்சாண்டி காட்டினார்கள் என்ற‌ போதும் கூட!). DOT. எந்திரன் படத்தில் சிட்டி என்ற‌ ரோபோவை உருவாக்க விஞ்ஞானி வசீகரன் எடுத்துக் கொள்வதாய்ச் சொல்லும் அதே பத்து வருடங்கள் செலவாகியிருக்கின்றன இயக்குநர் ஷங்கருக்கும் தன் கனவுத் திரைப்படத்தை எடுத்து முடிக்க. முதல் வரியில் எனக்குச் சொன்னது பத்தாண்டுக்காத்திருப்பு என்றால், ஷ‌ங்கருக்கு இது பத்தாண்டுத்தவம். DOT. கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஷாரூக்கான் என செம்மொழி உட்பட மும்மொழி ஸ்டார்கள் தொடங்கி முயன்று பின் தயங்கி பயந்து வெளியேறி விட, இறுதியி...

பரத்தை கூற்று : கவிஞர் யாத்ரா

கவிஞர் யாத்ரா வை நெடுங்காலமாகவே வாசித்து வருகிறேன். அவரும் அப்படியே என சில தினம் முன் அவர் அனுப்பிய‌‌ மின்னஞ்சலின் வழி புரிந்தேன். அதன் ஒரு பகுதி இது: ******* அன்பின் சி சரவணகார்த்திகேயன் நானும் உங்களை நீண்ட நாட்களாகவே வாசித்து வருகிறேன். உங்களை நான் நீண்ட நாட்களாகவே அறிவேன். உங்களுக்கும் சாரு அவர்களுக்குமான கடிதப்பரிமாறல்கள் அவற்றில் உங்களின் கூர்மையான அவதானிப்பு மற்றும் உங்கள் நடை இவற்றையெல்லாம் வெகுவாக வியந்திருக்கிறேன். உங்களின் சர்க்கார் பிலாசபிக்களை படித்து மிக மிக ரசித்திருக்கிறேன். பிறகு அகநாழிகை பதிப்பகத்தில் தங்கள் கவிதைத்தொகுதி வரப்போவதை அறிந்து மிக மகிழ்ந்தேன். கவிதைத்தொகுதியை வாசிக்க மிகுந்த ஆவலோடிருக்கிறேன். என்றும் அன்புடன் யாத்ரா ******* பரத்தை கூற்று தயாரான‌வுடன் யாத்ராவிற்கும் ஒரு பிரதி அனுப்பியிருந்தேன். பதிலாய் இன்று அவரிடமிருந்து வந்த மின்னஞ்சலினை அவர் அனுமதியுடன் இங்கே ப‌திகிறேன்: ******* அன்பின் கார்த்தி முதலில் மிக்க நன்றி, அருமையான இத்தொகுப்பை வெளிவந்த உடனேயே வாசிக்க அனுப்பித்தந்தமைக்கு. அதிகம் பேசப்படாத பேசத்தயங்கும் விஷயங்களை தேர்ந்து கொ...

படித்தது / பிடித்தது - 89

வாசம் பருவத்தில் தோன்றி உதிர்ந்த மலர்களை ஆழத் தோண்டி ஆங்கே புதைத்து வைத்தேன்; நெடுங்காலம் சென்றபின் அன்றொரு நாள் ந‌டுநிசியில் யாரும் காணாமல் அக‌ழ்ந்தெடுத்து நுக‌ர்ந்தேன் ம‌ண்ணுக்குள்ளே க‌னியாகி ம‌துவாகிக் கிட‌ந்த‌து; ஒரு போதும் அருந்திடவே இய‌லாதென்றாலும் மூடுவதிலும் திற‌ப்பதிலுமே போதையேறிப் போகிற‌து. - தீபா நன்றி : சிதறல்கள்

தக்கன பிழைக்கும்

அன்போ அறிவோ அதிரூப‌ அழகோ அகத்தில் காதல் அகழும் எல்லாம் அழிந்தும் எஞ்சும் - அங்குல அல்குல்.

பரத்தை கூற்று : சில TWEETகள்

spinesurgeon : Read few pages of @writercsk பரத்தை கூற்று . Should give credit to him for this athisha : @spinesurgeon ஆமாங்க நானும் கேள்விபட்டேன் @writercsk வின் பரத்தைகூற்று ரொம்ப நல்லாருக்குனு நிறைய பேர் சொன்னாங்க luckykrishna : @spinesurgeon yes, i also heard that @writercsk youthnaveen : @writercsk உங்களின் 'பரத்தை கூற்று' புத்தகம் வெளியாகும் முன்பே அதன் உள்ளடக்கம் எனக்கு அத்துப்படி என்பது நீங்கள் அறிந்ததே 1|3 youthnaveen : @writercsk உங்கள் எழுத்துக்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தவை அவை தான் என்று நான் பல தருணங்களில் குறிப்பிட்டதுண்டு 2|3 youthnaveen : @writercsk அந்த உண்மை இன்னும் புதிதாகவே உள்ளது. நான் எழுதியுள்ள 'வேசியின் குரல்' பதிவுகள் உங்கள் 'பரத்தை கூற்றின்' தாக்கங்களே 3|3 nagakadhir : @writercsk 'பரத்தை கூற்றை' பிற மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டிய எல்லா தகுதியும் பெற்ற கவிதைத் தொகுப்பாகவே கருதுகிறேன். nagakadhir : @writercsk #வாசிப்பவர்கள் நெய்தலிலேயை உச்சத்தை அடைந்து விடுகிறார்கள் என்பது உண்மை. vijaymahindran : ...

பரத்தை கூற்று : என்.விநாயகமுருகன்

பரத்தை கூற்று பற்றி என்.விநாயகமுருகன் எழுதியிருக்கும் விமர்சனப்பதிவு இது: ******* http://nvmonline.blogspot.com/2010/09/blog-post_26.html ******* Sunday, September 26, 2010 Posted by என்.விநாயகமுருகன் at 12:05 AM பரத்தை கூற்று சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தலித் பிரச்சினை பற்றி அந்த வலியை அனுபவித்த ஒரு உண்மையான தலித்தால் மட்டுமே அதை துல்லியமாக எழுத முடியுமென்றார். பெண்களின் வலியை பற்றி பெண் கவிஞர்கள் எழுதும்போது இருக்கும் வலியும்,வீர்யமும்,உக்கிரமும் ஆண் கவிஞர்கள் எழுதும்போது இருப்பதில்லையென்றார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை. காமத்தை பற்றிய நவீனக்கால எழுத்துகளில் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ்,வா.மு.கோமு போன்றோரும் (சிறுகதைகள், நாவல்கள்) கவிதைகளில் கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், மகுடேஸ்வரன் போன்ற சில ஆண் படைப்பாளிகள் மட்டுமே ஆங்காங்கு சில பாய்ச்சல்களை காட்டியுள்ளார்கள். குறிப்பாக பரத்தையர் உலகம் பற்றியும் அவர்களது அக உலகின் சிக்கல்களையும் பற்றி மிகச்சில ஆண் எழுத்தாளர்களே எழுதியுள்ளார்கள். பரத்தையர் என்ற சங்ககால சொல் வேசி, விபச்சாரி என்...

பரத்தை கூற்று : FIRST REACTION

எனது பரத்தை கூற்று கவிதைத்தொகுப்புக்கு ஆற்றப்படும் முதல் எதிர்வினை இது: ******* Dear CSK, Just got the book and browsed it. It is beautiful and most of it, very bold. Good work! Cheers Meena (எனக்கு மிகப்பிடித்த சமகால ஆங்கிலக் கவியாளுமைகளுள் ஒருவர் மீனா கந்தசாமி ) ******* முதல் reaction ஒரு பெண்ணினுடையது என்பதும் அது positive-ஆக‌ இருக்கிறது என்பதும் இத்தகையதொரு நூல் வகைமைக்கு கூடுதல் கவன ஈர்ப்பைத் தருவதாகக் கருதுகிறேன்.

படித்தது / பிடித்தது - 88

சாத்தானிடமிருந்து கடவுளுக்கு கால் இடறி விழாமல் குருட்டுப் பிச்சைக்காரனைத் தொட்டு நிறுத்துபவர் பைத்தியக்காரியின் கர்ப்பத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்பவர் சைகைகளில் காதலித்த பெண்ணை ‘தங்கை’யென்று சொல்லாதவர் சாலையோர மரணங்களைச் சகியாதவர் சிறுமிகளை மகளாகவும் நடத்தத் தெரிந்தவர் சடலத்தின் முன் குழந்தைக்கான வைத்தியப் பணத்தில் குடித்துவிட்டதாக ஒப்புக்கொள்பவர் ஒரு நொடி பயணிக்கிறார் சாத்தானிடமிருந்து கடவுளுக்கு - சே. பிருந்தா நன்றி : காலச்சுவடு , செப்டெம்பர் 2010 இதழ்

பக்தனின் சந்தோஷ‌ம்

" ரசி‌கர்‌களுக்‌கு எப்போதும் என்‌னுடை‌ய இசை‌ தா‌ன்‌. " - சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த‌ பத்திரிக்கையாளர் சந்திப்பில் " ரசி‌கர்‌களுக்‌கு என்‌ன சொ‌ல்‌ல நி‌னை‌க்‌கி‌றீ‌ர்கள்? " என்ற கேள்விக்கு பதிலாக 'இசை ஞானி' இளையராஜா சொன்னது (செப்டெம்பர் 15, 2010) ******* ஒரிசாவிலிருக்கும் அக்ஷய மொகந்தி ஃபௌண்டேஷன் என்கின்ற அமைப்பு 2007 முதல் வருடம் தோறும் இசைத்துறையில் சாதனை புரிந்தோர்க்கு வழங்கும் கௌரவம் மிக்க‌ அக்ஷய‌ சம்மான் விருதுக்கு இவ்வாண்டு இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற வங்காளப் பின்னணிப் பாடகர் ம‌ன்னா டே (2007), ரஹ்மானுடன் ஆஸ்கர் விருது பெற்ற இந்திப் பாடலாசிரியர் குல்சார் (2008) மற்றும் NOTHING BUT WIND வாசித்த புல்லாங்குழலிசைக் கலைஞர் ஹ‌ரிப்ரசாத் சௌராஸ்யா (2009) ஆகியோர் இதற்கு முன்பு இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள். 2010க்கு இளையராஜா. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. (மிகத்தாமதமெனினும்) ச‌மீபமாக ராஜாவைத் தேடி இது போன்ற அங்கீகாரங்கள் வரிசை கட்ட‌த் தொடங்கியிருக்கின்றன - முதல...