Posts

செல்லுலாய்ட் போதி

Image
ஒரு சனிக்கிழமை, அந்த வார இறுதியில் வெளியான ஒரு திரைப்படத்தை பெங்களூரிலுள்ள ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கில் மூன்று பேர் மட்டும் அமர்ந்து பார்த்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அது தான் நடந்தது. அந்த சனிக்கிழமை இன்றைய தினம். அந்த திரையரங்கு Fame Lido. அந்த மூவரில் ஒருவன் அடியேன். அந்தத் திரைப்படம் "Siddharth - The Prisoner" . திறமையான திரைக்கதை (Pryas Gupta), அழகான ஒளிப்பதிவு (Mrinal Desai), நேர்த்தியான பின்னணி இசை (Sagar Desai), கச்சிதமான வசனங்கள் (Hitesh Kewalia), உறுத்தாத‌ உடையமைப்பு (Isha Ahluwalia, Jeneva Talwar), யதார்த்தமான‌ நடிப்பு (Rajat Kapoor, Pradeep Kabra, Pradip Sagar, புதுமுகம் Sachin Nayak) என படம் எல்லா முனைகளிலும் அள்ளிக் கொண்டு போனது. இயக்குநர் மற்றும் தயாரிப்பளரான Pryas Guptaவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமெனில், தேவையற்ற காட்சியென்று எதுவுமே படத்தில் இல்லை. எல்லாக்காட்சிகளுமே பார்வையாளனுக்கு ஏதாவது உணர்த்துகின்றன அல்லது கதையை நகர்த்துகின்றன. இன்னொரு விஷயம் படத்தின் மொத்த வசனங்களையும் ஒரு A4 சைஸ் தாளில் அடக்கி விடலாம். மற்றப...

பெங்களூர் - சில குறிப்புகள்

பெங்களூர் முன்னிரவுப்பொழுதுகளில் அதன் தகுதிக்கு மீறி மின்னுகிறது - எந்தவொரு இந்தியப்பெருநகரத்தையும் போல. எண்ணிக்கையில் பாதி விழுக்காடு இருக்கும் ஒருவழிச்சாலைகளை கடக்க இருபுறமும் கவனிக்க வேண்டியிருக்கிறது. பி.எஸ்.என்.எல் புண்ணியத்தில் ஐம்பதடிக்கு ஒரு முறை தீபிகா படுகோனின் வினைல் புன்னகை தடுமாற வைக்கிறது. ஆங்காங்கே மில்லிமீட்டர் உடையுடுத்தி ஓர் உபதேவதையின் சாயலில் சன்னமாய்ச் சிணுங்கியபடி நகரும் நிஜ தீபிகாக்கள் தனி. குளிரை சாக்கு வைத்து தினம் ஒரு முறை குளிக்கும் அவஸ்தையிலிருந்து அழகான வெள்ளைத்தோல் பெண்கள் விடுதலை அடைகின்றனர். காலியாயிருக்கும் இருக்கையில் எதிர் பாலினரோடு எவ்வித போலி சங்கோஜமுமில்லாமல் அமர்ந்து கொள்கின்றனர். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்த பெண்கள் அடிக்கடி தங்கள் கைகளைத் தூக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜீன்ஸ் அணிந்த இளம் பெண்கள் தம் உள்ளாடை நிறம் மற்றும் ப்ராண்டை உலகிற்கு உரக்க‌ அறிவிக்கிறார்கள். பெங்களூரின் தட்ப வெப்ப நிலையைப்பற்றி அதன் அற்புதங்களைப் பற்றி அல்லது வினோதங்களைப் பற்றி சிலாகிக்கிறார்கள். டி.வி. கடைகள் முன் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு பார்த்து இந்தியாவின் தோல்விகளுக...

படித்தது / பிடித்தது - 26

ஈழம்... துவக்குகள் டாங்கிகள் செல்கள் விமானங்கள் தற்கொலைகள் கொலைகள் வன்புண‌ர்தல்கள் கடத்தல்கள் மாவீரர்கள் துரோகிகள் போர்கள் பேச்சுவார்த்தைகள்' ஒப்பந்தங்கள் வார்த்தைகள்... வார்த்தைகள்... வார்த்தைகள்... ஒரு வார்த்தையல்ல‌ மரணம். - சுகுணா திவாகர் நன்றி : மிதக்கும்வெளி

எங்கள் ஆசான்

Image
எழுத்தாளர் சுஜாதா (03 மே 1935 - 27 பிப்ரவரி 2008) உனக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் எனக்கு நிச்சயமாய் உடன்பாடில்லை புதைக்கப்பட்டவர்களுக்கானது அது விதைக்கப்பட்டவர்களுக்கு அல்ல.

NO 2 BJP&Co.

" There are no rains and food production has fallen due to the sins committed by various people in the past. Previous governments didn’t provide any facilities to temples. I will give money to Gods and also focus on city development. I believe in God. I have allocated money so that Gods will be pleased and shower mercy on us. " The above statement is made by Karnataka chief minister B.S.Yeddyurappa in justification to a whopping Rs.130 crores allocation for temples and mutts in the state's annual budget. Yet another reason why I am asking people "SAY NO TO BJP" . பின்குறிப்பு : கற்பூரம் தொட்டுக்கும்பிட்டு விபூதி இட்டுக்கொள்வது கடவுள் பக்தி; மக்கள் வரிப்பணத்தை கோயிலுக்கு வாரி இறைப்பது சூ... கொழுப்பு.

படித்தது / பிடித்தது - 25

இந்தச் சிங்கம் சிங்கத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன் படங்களில் படக்காட்சிகளில் வித்தைக் காட்சிகளில் காட்சிசாலைகளில் கனவுகளில் பிடரிமயிரின் தோரணையுடன் பிளந்த வாயின் கூர்பற்களுடன் பாய்ச்சலின் பயங்கரத்துடன் ஓய்வான வேளையில் சாந்தத்தின் வெகுளியுடன் என் பயத்தின் மறுவுருவாய் எனக்குள் மிதந்தது அது இந்தச் சிங்கத்தைப் பார்க்கும்போது புரிகிறது சிங்கத்தை இதுவரை பார்த்ததேயில்லை நான். - எம்.யுவன் நன்றி : மரத்தடி இணையதளம்

படித்தது / பிடித்தது - 24

தமிழ் எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர்மேல் அதைவிட மாட்டேன் - ஞானக்கூத்தன் நன்றி : ஞானக்கூத்தன் கவிதைகள் இணையதளம்

ஆஸ்கர் - சில எதிர்வினைகள்

இணையதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி எழுதித்தீர்க்கிறார்கள். மிகப்பலர் பாராட்டி; அரிதாய்ச் சிலர் திட்டி. இன்று ஒரு வலைதளத்தில் படித்த பதிவின் தலைப்பு - "ஆஸ்கர்க்கு பெருமை..... ரஹ்மானால் !!!" பின்குறிப்பு : அந்த வலைதளத்தின் பெயர் "பிதற்றல்கள்" ################# இன்று ஜிடாக்கில் பேசிய ஒரு நண்பர் மிகவும் ஆதங்கத்துடன் பேசினார். "ஏ.ஆர்.ரஹ்மான் மூணு ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் ஆனாரு" "ஆமாங்க. நல்ல விஷயந்தான்" "ஆனா பாவம், ரெண்டு விருது தான் வாங்கினாரு" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "விடுங்க. அடுத்த தடவை மூணு என்ன‌ நாலாவே வாங்கிடுவாரு" "உங்களுக்குப்புரியுது. ஆஸ்கர் கமிட்டிகாரனுக்கு தெரிய மாட்டேங்குதே" பின்குறிப்பு : அந்த நண்ப‌ர் என் வலைதளத்தைப் படிப்பதில்லை. ################# என் நண்பன் ஒருவன் மிகவும் ஆர்வக்கோளாறு. நேற்று மாலை எனக்கு தொலைபேசினான். குரல் மிகவும் உற்சாகமாகக்காணப்பட்டது. "நான் ம்யூஸிக் கத்துக்கப்போறேன்டா" "என்னடா, திடீர்னு?" "எல்லாம் ரஹ்மானால தான்" "என்னடா சொல்ற?" ...

படித்தது / பிடித்தது - 23

அடிக்கடி பார்க்க முடிகிறது யானையைக் கூட மாதக் கணக்காயிற்று மண்புழுவைப் பார்த்து. - கல்யாண்ஜி நன்றி : கல்யாண்ஜி கவிதைகள் (புதுமைப்பித்தன் பதிப்பகம்)

படித்தது / பிடித்தது - 22

முத்தம் கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும் ஒரு காப்பி சாப்பிடலாம் வா - தேவதேவன் நன்றி : தேவதேவன் கவிதைகள் (தமிழினி பதிப்பகம்)