படித்தது / பிடித்தது - 25

இந்தச் சிங்கம்

சிங்கத்தைப்
பலமுறை பார்த்திருக்கிறேன்

படங்களில்
படக்காட்சிகளில்
வித்தைக் காட்சிகளில்
காட்சிசாலைகளில்
கனவுகளில்

பிடரிமயிரின் தோரணையுடன்
பிளந்த வாயின் கூர்பற்களுடன்
பாய்ச்சலின் பயங்கரத்துடன்
ஓய்வான வேளையில்
சாந்தத்தின் வெகுளியுடன்

என் பயத்தின்
மறுவுருவாய் எனக்குள்
மிதந்தது அது

இந்தச் சிங்கத்தைப்
பார்க்கும்போது புரிகிறது
சிங்கத்தை இதுவரை
பார்த்ததேயில்லை நான்.

- எம்.யுவன்

நன்றி: மரத்தடி இணையதளம்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்