2002 குஜராத் - தெகல்கா புலனாய்வு

நான் குஜராத் 2002 கலவரம் நூல் எழுதுகையில் பயன்படுத்திய முக்கியத் தரவுகளில் ஒன்று தெகல்கா இதழ் இது தொடர்பாய் மேற்கொண்ட ரகசிய விசாரணைகளின் தொகுப்பாய் அவ்விதழின் தலைமை ஆசிரியரான தருண் தேஜ்பால் நவம்பர் 2007ல் தொகுத்து வெளியிட்ட வெளியிட்ட GUJARAT 2002 - THE TRUTH என்ற சிறப்பிதழ். உடனடியாக இதை குஜராத் 2002 : தெஹல்கா அம்பலம் என்ற பெயரில் அ. மார்க்ஸ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் (பயணி வெளியீட்டகம் - 2007). பிறகு குஜராத் 2002 இனப்படுகொலை என்ற தலைப்பில் அ.முத்துக்கிருஷ்ணன் இதை மறுபடி தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார் (வாசல் & தலித் முரசு – 2008).


இப்போது தன் நூலை இலவசமாகத் தரவிறக்கிட குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன? என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் அ.முத்துக்கிருஷ்ணன் (ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்துடன் இதில் ரத்தக்கறையை மறைக்கும் வளர்ச்சி என்ற குஜராத் வளர்ச்சி குறித்த தனது கட்டுரை ஒன்றையும் இணைத்திருக்கிறார்). சரியான நேரத்தில் இது மக்களை அடையும் வகையில் இலவசமாகத் தர முன்வந்திருக்கும் மொழிபெயர்ப்பாளரையும், பதிப்பகங்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

http://web-trendz.com/GujarathWeb/media/Gujarath_Book_Inner_For_Web_1.pdf 
http://keetru.com/images/ebooks/gujrath_genocide.pdf

இயல்பான மொழிபெயர்ப்பில் 108 பக்கங்கள் கொண்ட நூல் இது. இன்றைய சூழலில் இது மிக முக்கியமான வெளியீடு. 2002ல் குஜராதில் கலவரங்களில் ஈடுபட்டோர், கலவரத்துக்கு துணைபோனோர் எனப் பல தரப்பினரும் பெருமை பொங்க வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பயமும் வெறுப்பும் ஒருசேர வரவழைக்ககூடியவை இவை.

*

நரோடா பாட்டியா கலவரத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் கட்சியைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி அளித்த வாக்குமூலத்திலிருந்து... (செப்டெம்பர் 1, 2007) 

தெகல்கா: முஸ்லிம்களைக் கொன்று குவித்த பிறகு எப்படி உணர்ந்தீர்கள்?

பஜ்ரங்கி: மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அவர்களை எல்லாம் கொன்று விட்டு வீடு திரும்பினேன். உள்துறை அமைச்சருடன் உரையாடி விட்டு உறங்கச் சென்றேன். நான் மகாராணா பிரதாப்பைப் போல் உணர்ந்தேன். அவரைப் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் அன்று செய்ததை நானே செய்தேன்.

*

இது ஓர் உதாரணம் மட்டுமே. நூல் முழுக்க இதே போல இந்துத்துவத் திமிர் தான் நிறைந்திருக்கிறது. ஏப்ரல் 24 அன்று வாக்களிக்கும் முன் இதைப் படித்து விடுங்கள்!

Comments

Anonymous said…
must read

http://valpaiyan.blogspot.in/2010/09/blog-post_28.html
யாவாரி said…
ஏப்ரல் 24 அன்று வாக்களிக்கும் முன் இதைப் படித்து விடுங்கள்! ///
.
.
இதெல்லாம் விக்காத புக்கை விற்க ஒரு பிசினசு டிரிக்கு தெரிஞ்சிக்க...
Anonymous said…
ஒரு புக் விக்க ஏன் இவ்வளோ வேலை பாக்கறிங்க.. குஜராத் பத்தி பொரண்டு பொரண்டு எழுதி தள்ளுற நீங்க.. உங்க ஏரியா பிரச்சனை பத்தி யோசிக்கவது செஞ்சிங்களா..எனக்கு பிடிக்காத ஒருத்தன எப்புடியாவது எல்லாருக்கும் பிடிக்காம பண்ணிடனும்ன்னு நல்ல எழுத்தாளர் நாசமா போகறத பார்த்துக்கிட்டு இருக்க முடியலை..

ஈகோ / attitude/ சைக்கோ தனங்கள தூக்கி போட்டுட்டு.. அருமையான எழுத்து திறமைய பயன் படுத்துங்க

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்