ச்சீய் பக்கங்கள்

சரியாய் ஐந்து வருடங்கள் முன் கிட்டதட்ட இதே தேதிகளில் தான் என் முதல் எழுத்தை அச்சில் காண வாய்த்தது. குங்குமம் இதழில் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தெடுத்த முத்திரைக் கவிதையாக என் ஒருத்தி நினைக்கையிலே வெளியானது. இடைப்பட்ட வருடங்களில் வலைதளங்கள், அச்சிதழ்கள், புத்தகங்கள் எனக் கடந்து வந்தாயிற்று.

இப்போது என் எழுத்து வாழ்வின் அடுத்த‌ முக்கிய மைல்கல்லையும் குங்குமம் இதழே நடுகிறது. 17-9-2012 தேதியிட்ட குங்குமம் இதழில் 'ச்சீய் பக்கங்கள்' என்ற என் தொடர் ஆரம்பம் ஆகியுள்ளது. ஒவ்வொரு வாரமும் பொதுவெளியில் பேசத்தயங்கும் ஆனால் எல்லோரும் உள்ளூரப் பேரார்வம் கொண்ட ஒரு விஷயத்தை எடுத்துக் கதைக்க உத்தேசம்.

மங்களகரமாகத் தொடங்க வேண்டும் என்பதாலும், 'ladies first' என்பதாலும் இவ்வாரம் ப்ரா பற்றி எழுதி இருக்கிறேன்.


"பாலியல் எழுத்தாளன் என்ற முத்திரை விழும்" என்கிற என் நெருங்கிய சினேகங்களின் எச்சரிக்கைகளை மீறி, அதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு துளியும் ஆபாசம் கலவாது எழுதும் கவனமான‌ கத்தி நடை முயற்சி தான் இது.

அம்ருதா இதழில் கடந்த ஒரு வருடமாக விட்டு விட்டு 2011ம் ஆண்டுக்கான நொபேல் பரிசுக‌ள் குறித்த விரிவான கட்டுரைகள் எழுதியதை தொடர் எழுதுவதன் unofficial முன் அனுபவமாகக் கொள்ளலாம். ஆனால் ஒரு முன்னணி வெகுஜன இதழின் சட்டகங்களுக்கு உட்பட்டு வாரா வாரம் content தருவது என்பது வேறு ஜாதி. அது பிடித்திருக்கிறது.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கோணல் பக்கங்கள், ஓ பக்கங்கள், பேயோன் பக்கங்கள் என என் முன்னோர்கள் மற்றும் சமகாலத்தவர் செய்த / செய்யும் பெரிய விஷயங்கள் போல் அல்லாது ச்சீய் பக்கங்கள் முழுக்க‌ முழுக்க‌ என் ஸ்டைலிலான ஓர் எளிமையான வரலாற்று, விஞ்ஞானத் தேடல். இதைப் படித்து விட்டு கருத்துக்கள் பகிருங்கள்!
 
இத‌ற்கு வித்திட்ட நண்பரையும், தேர்ந்தெடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

Comments

udhay said…
வாழ்த்துக்கள் :-)
வாழ்த்துகள்.
மிகுந்த வரவேற்பு பெறப்போகும் தொடராக இது அமையும்!
விமர்சனங்களைச் சந்திக்கத் தயாராக இருக்கவும்.
எந்த சமரசமும் செய்துகொள்ள வேண்டாம்!
வாழ்த்துக்கள் கவிஞரே...
வாழ்த்துகள் தலிவரே!
Thirumurthi said…
Congrats CSK. 'ஙே' ராஜேஷ்குமார் மாதிரி 'ச்சீய்'CSK-ன்னு Title கொடுத்திடப்போறாங்க!
nellai_ragu said…
மகிழ்வுடன் எதிர்பார்க்கிறோம்
sundarii selvaraj said…
Congrats CSK..
Anonymous said…
மயிறு மட்டை என எழுதுவதை விடுத்து ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்