பரத்தை கூற்று : முன்னுரை

எனது பரத்தை கூற்று நூலுக்கு விரிவானதொரு பத்துப்பக்க முன்னுரை எழுதியிருந்தேன். கவிதைகளைச் சிலாகித்த எவரும் அந்த முன்னுரை பற்றிப் பேசாது இருந்ததில்லை. கவிதைகளைப் பிடிக்காதவர்கள் கூட அந்த முன்னுரையை மட்டும் பாராட்டியே மொழிந்தனர். புத்தகத்தின் முக்கியமானதும் தவிர்க்கவியலாததுமான ஓரங்கம் அது.

சுஜாதா தன் திருக்குறள் - புதிய உரைக்கு எழுதிய முன்னுரை போல, பௌத்த அய்யனாரின் மேன்ஷன் கவிதைகள் தொகுப்புக்கு பிரபஞ்சன் எழுதிய முன்னுரை போல விரிவாகவும் செறிவாகவும் பரத்தை கூற்று தொகுப்பின் முன்னுரையும் அமைய வேண்டும் என்று திட்டமிட்டே தான் அதிக நேரமும் உழைப்பும் செலவழித்து அதனை எழுதினேன். ஒரு திறமையான வக்கீலின் வாதத்தைப் போல் தான் அதைக் கட்டமைத்தேன். நான் இதுகாறும் எழுதிய கட்டுரைகளில் ஆகச்சிறந்ததென்று பரத்தை கூற்று முன்னுரையையே சொல்வேன்.

சென்னை புத்தகக் காட்சியையொட்டி தமிழ் பேப்பரில் இந்த முன்னுரை வெளியாகி இருக்கிறது.

பரத்தை கூற்று : முன்னுரை - http://www.tamilpaper.net/?p=5284

*******

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்