மாநகர யுவதிக‌ள்

சிலிக்கன்களால்
பேடட் ப்ராக்க‌ளால்
மழுப்பும் டிஷர்ட்களால்
அரிதாய்ச் சில சமயம்
கொழுப்பின் திரட்சியால்
களிப்புச்சம் எய்துகிறதிந்த‌
கண்களின் தீராப்பெருங்காமம்.

Comments

Anonymous said…
எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதினார். அக்கட்டுரைகளின் துவக்கத்தில் சில கவிஞர்களின் கவிதைகளை தந்திருந்தார். அவை புரிந்தன. பிரமிக்கவும் வைத்தன. உதாரணம்:

கடற்கரையில் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சி தானே நிஜ வரம்
காண்பவன் குழந்தை ஆனால்
கிளிஞ்சல்கள் போதுமே-Mu.Viswanathanகவிதைகள் என்றாலே "ஐயையோ பைத்தியங்கள் பேனா நிப்பை பிடித்து எதையோ கிறுக்கியிருக்கும்கள்" என்று பயந்து ஓடிய நான் தேசாந்திரியில் வந்த‌ கவிதைகளின் சிறப்பம்சத்தை உடனடியாக உணர்ந்து கொண்டேன். அந்த கவிதைகள் மிகவும் உட்கார்ந்து யோசித்து எழுதிய கவிதைகளாகவும் எனக்கு படவில்லை.

மேலே உள்ள உங்கள் கவிதையை பாருங்கள். படித்தவுடன் அது மனதில் நிற்கவில்லை. உடனே மறந்து போய்விடுகிறது. சுஜாதா ஒருமுறை "படித்தவுடன் மறந்து போய் விட்டால் அது நல்ல சிறுகதையே இல்லை" என்றார். உங்கள் கவிதையை அந்த வகையில் முத்திரை குத்தலாமா?

உங்களால் மு.விச்வனாதனின் மேலே உள்ள கவிதை போல் ஒன்றையாவாது எழுத முடியுமா?

அப்படி எழுதியிருந்தால் அதனுடைய லிங்க்கை தரவும்.d.
Anonymous said…
if u want to have square instead if ur current bullet before titles paste this in add css in adavanced under template designer...

.post-body li{list-style: square inside;
color: css number of color here;}
ரவி said…
http://www.jeyamohan.in/?p=19548
.
.
சுஜாதாவை இப்படி தாறுமாறாக வாந்தி எடுத்துள்ளார் ஜே மொ.இதற்கு உங்களிடம் இருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்!!இளைஞர்கள் சுஜாதா படிப்பதில்லையாம்!!ஆமா எல்லாரும் இவருடைய கொற்றவையை கையில் வைத்து கொண்டுதான் திரிகின்றனர் போல!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்