(தமிழ்) தேசிய விருதுகள்

முதலில் செய்திகள் வர ஆரம்பித்த போது சந்தேகமே வந்து விட்டது. மாநில திரைப்பட விருதுகளா, தேசிய திரைப்பட விருதுகளா என்று. பின் ராஜீவ் மசந்த் முதல் சொக்கன் வரை மயக்கம் தெளிவித்தார்கள். தமிழுக்கு மட்டும் இம்முறை மொத்தம் 15 விருதுகள்:

வெற்றிமாறன் (இயக்கம் & திரைக்கதை - ஆடுகளம்), தனுஷ் (ந‌டிகர் - ஆடுகளம்), கிஷோர் (படத்தொகுப்பு - ஆடுகளம்) தினேஷ் குமார் (ந‌டன அமைப்பு - ஆடுகளம்), வ.ஐ.ச.ஜெயபாலன் (சிறப்பு குறிப்பு - ஆடுகளம்), (சிறந்த தமிழ் படம் - தென்மேற்குப் பருவக்காற்று) சரண்யா (ந‌டிகை - தென்மேற்குப் பருவக்காற்று), வைரமுத்து (பாடல் - தென்மேற்குப் பருவக்காற்று)), ஸ்ரீநிவாஸ் மோகன் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - எந்திரன்), சாபு சிரில் (கலை இயக்கம் - எந்திரன்), சுகுமாரி (துணை நடிகை - நம்ம கிராமம்), இந்திரான்ஸ் ஜெயன் (ஆடை அலங்காரம் - நம்ம கிராமம்), தம்பி ராமையா (துணை நடிகர் - மைனா) மற்றும் ஓவியர் ஜீவா (சினிமா எழுத்து சிறப்பு குறிப்பு - திரைச்சீலை).

சென்ற வருடத்தைய என் பட்டியலில் ஆடுகளம் படம் கணக்கில் கொள்ளப்படவே இல்லை (சென்னையில் படம் வெளியாகும் நாளே எனக்கு கணக்கு; தணிக்கை சான்றிதழ் தேதியன்று). மற்றபடி எந்திரன் படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தவிர வேறு ஒன்றும் பிரமாதமாய் ஒத்துப்போகவில்லை (தென்மேற்குப் பருவக்காற்று படம் பார்க்கவில்லை; நம்ம கிராமம் என்றொரு படம் வெளியானதே தெரியாது!). மற்‌றபடி, சிறந்த துணை நடிகர் தம்பி ராமையாவுக்கு விருது கிடைத்ததைப் பற்றியெல்லாம் என்ன சொல்ல? (அப்படியென்றால் வடிவேலுவுக்கு எத்தனை முறை விருது கொடுப்பது). இருப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சியளிப்பது வ.ஐ.ச.ஜெயபாலனுக்கான ஸ்பெஷல் மென்ஷன் தான்.

அது சரி, மிஷ்கின் மற்றும் இளையராஜாவின் நந்தலாலா போட்டியில் இருந்ததா?

Comments

Anonymous said…
அங்காடி தெருவுக்கு ஏன் விருது இல்லைன்னா அது முதலாளித்துவத்தின் குரூரத்தை பற்றி சொன்னது.அது தயாநிதி போன்ற முதலாளிகளுக்கு பிடிக்குமா?அது தவிர எல்லா அரசும் முதலாளிகளை நம்பியே நடக்குது!
Rajan said…
அங்காடி தெரு,நந்தலாலவ விட ஆடுகளம் நல்ல படமில்லை.மொக்கை அதற்கு விருது கிடைத்தமைக்கு(கொசு தனுசுக்கும்) காரணம் தயாநிதி மாறனின் செல்வாக்கு .இது திறமை சார்ந்த விருதில்லைன்னு எம் ஜி ஆருக்கு ரிக்ஷாகரனுக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகர் விருதே உதாரணம்
Anonymous said…
http://google.com/transliterate/indic/Tamil


blogs dont have maximum width for essay portions. it is tough to read essays directly in blogs. so, copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்