பரத்தை கூற்று : ஜ்யோவ்ராம் சுந்தர்

பரத்தை கூற்று புத்தகம் குறித்து பதிவர் ஜ்யோவ்ராம் சுந்தர் அனுப்பிய மின்னஞ்சல் இங்கே. நான் மதிக்கும் வெகுசில பதிவர்களுள் ஜ்யோவ்ராம் ஒருவர் என்பதால் தொகுதி குறித்த அவரது கருத்துக்களை எதிர்மறையெனினும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

*******

அன்புள்ள சிஎஸ்கே,

நலம்தானே.

ஏதேதோ வேலைகள் காரணமாகவும் சோம்பல்தனம் காரணமாகவும் உடனே பரத்தை கூற்று பற்றி எழுதவில்லை. கீழே நான் சொல்ல நினைத்தவற்றை தொகுக்கிறேன் :

1. 72 பக்கமுள்ள ஒரு கவிதைப் புத்தகத்தில் 25 பக்கங்கள் முன்னுரை, வெற்றுப் பக்கங்கள் என்பது ஒரு வாசக நுகர்வோனாக எரிச்சலை ஏற்படுத்துகிறது.

2. கவிதைகள் பேசவேயில்லை - முன்னுரைதான் வித்தாரமாகப் பேசியிருக்கிறது. இதைத்தான் சொல்ல வேண்டுமென நீங்கள் நினைத்திருந்தால் ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம்.

3. கவிதைகளின் அளவுகள் சிறுக்கும்போது அவை புத்திசாலித்தன வாக்கியங்களாக ஆகிவிடும் அபாயம் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் பல கவிதைகள் இந்த ரகத்திலேயே சேர்க்க முடிகிறது என்னால்.

4. சில கவிதைகள் புத்திசாலித்தனம் என்றுகூடச் சொல்ல முடியாத அபத்தக் கூற்றுகளாக இருக்கின்றன. (காசின்றிப் புணரத் தேவை காதல் போன்றவை).

5. ஆட்டக்காரியைத் தேடிப் புணரலாம் அவர்தம் பிரத்யேக அசைவுகளுக்காக மாதிரியான ஒரு சின்ன ‘அட’ போட வைக்கும் வரிகள் மிகக் குறைவு.

6. எனக்கு மிக ஏமாற்றத்தைத் தந்த கவிதைத் தொகுதிகளில் ஒன்றாகவே இதை வைப்பேன்.

நன்றி.

--
அன்புடன்,

ஜ்யோவ்ராம் சுந்தர்
http://jyovramsundar.blogspot.com

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet